புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் இன்று காலை வரை 103,143 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கருதி வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் நேற்று இரவு வரை 83,429 பொதுமக்கள் இராணுவத்தின் 58 ஆம் படையணியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 31,017 சிறுவர்களும், 27,990 பெண்களும், 24,422 ஆண்களும் அடங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
