மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.