April

April

பாதுகாப்பு வலயம் படையினரால் நான்கு முனைகளில் சுற்றிவளைப்பு

army-wanni.jpgஅரசாங் கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் அப்பகுதியை நோக்கி தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.

மோதல்கள் தொடர்பில் ஊடக நிலையம் மேலும் கூறியதாவது

அண்மையில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கு எதிராக பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மோட்டர் எறிகணை மற்றும் சிறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் நான்கு சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கடற்புலிகளின் தற்கொலைப் படகொன்று யுத்த தாங்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்மிக்க முடியாதவாறு புலிகளால் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்மேடுகள் சிலவற்றை இனங்கண்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான பதுங்கு குழிகள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் புலிகளின் இந்த மண்மேடுகளை உடைத்தெறிந்தவாறு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி அங்குள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவில் மேலும் பலர் பலி

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜ தெரிவித்துள்ளார்.

மோதல்களில் பலியான பலரது சடலங்கள் தமது புதுமாத்தளன் மருத்துவமனைக்கு வந்ததாக் கூறுகிற அவர், இருந்தபோதிலும் பலியான பலரது சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாத்திரம் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்கள் தங்கியுள்ள இடத்துக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலேயே சண்டைகள் நடப்பதாகவும், ஆயினும் தமது பகுதியை நோக்கி ஏவப்படுகின்ற எறிகணைகளாலேயே பல மக்கள் இறப்பதாகவும் அவர் கூறினார்.

ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்த அரசு முடிவு

tissa_karaliyaddda.jpgகோப் சிற்றிகள் ஊடாக ஆயுர்வேத மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை ஆயுர்வேத மருத்துக் கூட்டுத்தாபனத்தின் நாற்பதாவது வருட நிறைவின் நிமித்தமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

இந்த கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11ம் திகதியுடன் நாற்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இதன் நிமித்தம் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அம்சமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது விடயமாக வர்த்தக, வாணிப, கூட்டுறவு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் இதன்படி கோப் சிற்றிகள், கூட்டுறவு கடைகள், சனச அமைப்புகள் என்பவற்றின் ஊடாகவும் இம் மருந்துப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை நீண்ட நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றாளை சம்போவையும் இந்த நாற்பதாவது நிறைவு தினத்தின் நிமித்தம் சந்தைப்படுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போரை நிறுத்தக் கோரி முன்னாள் த.தே.கூ. எம்.பி. ஈழவேந்தன் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரத போராட்டம்

eelaventhan_.jpgஇலங் கையில் போரை நிறுத்த அனைத்துலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அவர் தனது உண்ணாநிலை போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

1. உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4. தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5. தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளனர்.

6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களிடம் கோரிக்கை.

76 அகவையுடைய மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்

somaliya-robbery.jpgஉணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கொழும்பு மாநகரசபை அதிகாரி சுமணபால பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான சுமணபால அப்பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே சுமணபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு பத்வானி ஜெயவர்த்தன என்பவர் ஆளுநர் அலவி மௌலானாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் மேல்மாகாண சபையின் 1991 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்ளூராட்சி நிர்வாக கண்காணிப்பு சட்ட பிரகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான செல்வராஜா ரவீந்திரன் விடுவிக்கப்பட்டார்

selvaraja.jpgகொழும்புக்கு வெளியே வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த யாழ் மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரரான செல்வராஜா ரவீந்திரன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் மாதிவலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடத் தொகுதியில் (தனது சகோதரனின் வதிவிடம் ) உயர் கல்வியின் நிமித்தம் தங்கியிருந்தார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி வழமை போல் காலை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வதிவிடத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் கடத்திய நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர் நேற்று நள்ளிரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டு வெள்ளவத்தைப் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

விடுதலைப்புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து: உளவுத்துறை

sonia-gandhi.jpgவிடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அவர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

பிரபாகர‌ன் உ‌யிரு‌க்கு ஆப‌த்து: திருமாவளவ‌ன்

thiruma_8-4.jpgசெ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌னே த‌விர ஒரு ‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிற ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் ‌உ‌யிரு‌க்கு த‌ற்போது ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது ‌எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் இன‌ப் படுகொலையை க‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌‌ல் அருகே ‌இ‌ன்று (09.04.09) ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌‌‌ங்‌கிய ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌‌லிக‌ள் ‌மீது‌ம் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது‌ம் ‌சி‌ங்கள படை கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது. ‌ஹீரோசிமா, நாகசா‌கி‌ப் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌விஷவா‌யு கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிய ச‌ம்ப‌வ‌த்தை உலக‌ம் இ‌ன்று‌‌ம் க‌ண்டி‌த்து வரு‌கிறது. அத‌ன் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அணு ஆயுத தயா‌ரி‌ப்பு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் முறையான வரையறைக‌ள் தேவை என ‌வி‌திமுறைக‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டன. ஆனா‌ல் அதுபோ‌ன்ற ஒரு தா‌க்குத‌ல் நட‌த்த ராஜப‌‌க்சே தயாரா‌கி வரு‌‌கிறா‌ர்.

ச‌ர்வதேச நாடுக‌ள் தடை செ‌ய்து‌ள்ள ‌கிள‌‌‌ஸ்ட‌ர் பா‌ம் (கொ‌த்து‌க் கு‌ண்டுக‌ள்) ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்த ‌தி‌ட்‌ட‌மிட்டு‌ள்ளா‌ர். இதுபோ‌ன்ற தாக்குத‌ல் நட‌த்‌‌தினா‌ல் உட‌லி‌ல் காய‌ம் ஏ‌ற்படாது, ந‌ச்சு வா‌யு பர‌வி உட‌லி‌ல் பட‌ர்‌ந்து தோல் உ‌‌‌‌ரி‌ந்து ர‌த்த‌ வா‌‌ந்‌தி எடு‌த்து சாக நே‌ரிடு‌ம். இதுபோன்று ச‌‌மீப‌த்‌தி‌ல் நட‌த்‌திய தாக்குத‌லி‌ல்‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த ஏராளமான போரா‌ளிக‌ள் க‌ரி‌‌க்க‌ட்டையா‌கி உ‌‌யி‌ர் இழ‌ந்து‌ள்ளன‌ர். ஆனாலு‌ம் செ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌ன், நா‌ன் செ‌‌த்தாலு‌ம் ஒரு‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன். இ‌ந்த ந‌ச்சு வெடிகு‌ண்டுகளு‌க்கு ம‌த்தி‌‌யி‌ல் ‌பிரபாகர‌ன் வா‌ழ்‌ந்து கொண்டிரு‌க்‌கிறா‌ர், போராடி கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர். எ‌ந்த நேர‌த்திலு‌ம் உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்படலா‌ம் என அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த தகவ‌ல் நே‌ற்‌று அ‌திகாலை என‌க்கு ‌கிடை‌த்தது. இதனா‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் அ‌றி‌‌வி‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சியையே ர‌த்து செ‌ய்ய நா‌ன் ‌தி‌ட்ட‌‌‌மி‌ட்டே‌ன். தே‌ர்தலை புற‌க்க‌ணி‌க்கு‌ம் முடிவு‌க்கு‌ம் நா‌ன் வ‌ந்தே‌ன். விடுதலை ‌சிறு‌த்தைகளு‌க்கு ஒது‌க்க‌ப்‌ப‌ட்ட இரண்டு தொகு‌திகளையு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிடமே ஒ‌ப்படை‌த்து ‌விட நா‌ன் முய‌ற்‌சி செ‌ய்தே‌ன். ஆனா‌ல் தோழர் ர‌வி‌க்குமா‌ர் எ‌ம்.எ‌ல்.ஏ கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தி‌ன் பே‌‌ரி‌ல் எனது முடிவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு நே‌ற்றைய ‌நிக‌ழ்‌ச்‌சியை நட‌த்‌தினே‌ன். ஈழ‌த் த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌னிதா‌பிமான அடி‌ப்படை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌‌ர் சோ‌னியாகா‌ந்தி தலை‌யி‌ட்டு போர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் என ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌‌ட்‌சி வ‌லியுறு‌த்து‌கிறது எ‌ன்றார்.

நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்

srilanka_idp.jpgநிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.