Multiple Page/Post

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிமல் மெத்திவக்க நியமனம்

nimal_madiwaka.jpgபொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண இவருக்கான பதவி நியமனத்தை நேற்று வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கு மேலதிகமாக ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இதுவரை கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர இவ்வாரம் முதல் ஓய்வுபெறுகின்றார். ஊடகப் பேச்சாளராக நீண்டகாலம் பொறுப்பிலிருந்த இவர் ஊடகத்துறைக்கு செய்தி வழங்குவதில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையின் முதலாவது காற்றாடி மின் உற்பத்தி நிலையம் புத்தளத்தில்

wind_powerss.jpgகாற்றாடி மூலம்  மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு நிலையங்கள்  புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிக்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி முகாமையாளர் டட்லி பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்படும் காற்றாடி மூலமான முதலாவது மின் உற்பத்திததிட்டம் இதுவாகும். இத்திட்டத்திற்கு 4255 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன் நிர்மானப்பணிகள்  இரு உள்நாட்டு நிறுவனங்கள மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஸ்பைன் நாட்டில் இருந்து தருவிக்கப்படவுள்ளது. காற்றாடி மூலம் மின் உற்பத்தி செய்யும் 25 டேபைன்கள்  இங்கு பொருத்தப்படவுள்ளன.    

சர்வதேச தரமுடையதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின்  உதவி முகாமையாளர் மேலும்  தெரிவித்துள்ளார். 

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு!

0000sri-lanka-map.jpg இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.பீ.பி.எஸ் வைத்தியரத்ன தெரிவித்தார்.

10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கௌளப்பட்டபோதும் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பணி முழுமையடையவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் என்பன ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகள் அடுத்த ஆண்டு பூர்த்தி

yappa.jpgஅம்பாந் தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறைமுகத்திற்கான முதலாவது இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் 500 மீற்றர் தூரம் வரை இறங்குதுறை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாரஹேன்பிடியிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்,

கொழும்பைப் போன்று கிராமப் புறத்தையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு இறுதியிலே இந்த துறைமுக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், தமது இலக்குக்கு முன்னரே தற்பொழுது வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

39,080 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. இவற்றில் 33,218 மில்லியன் ரூபாவை சீன அரசு நிதியுதவியாக வழங்கி யுள்ளது என்றார். 2010ம் ஆண்டு டிசம்பரில் பணிகளை பூர்த்தி செய்து விட்டு நீரை உள்வாங்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட்; நியூசிலாந்து அணி 281/8

murali.jpgஇலங் கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக நியூசிலாந்து அணி 281ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

Sri Lanka                        

1st innings: 452
(T. Dilshan 92, M. Jayawardene 114, T. Samaraweera 159, D. Vettori 4-78, C. Martin 4-77)

NEW ZEALAND               

1st innings               (overnight 87-2)
T. McIntosh lbw b Muralitharan   69
M. Guptill b Thushara    24
D. Flynn b Mendis    14
J. Patel lbw b Muralitharan   26
R. Taylor c P. Jayawardene b Thushara  35
J. Ryder b Kulasekara    42
B. McCullum b Thushara     1
J. Oram c sub (Warnapura) b Muralitharan  12
D. Vettori not out    33
I. O’Brien not out     3
Extras: (b6, lb5, nb11)   22
TOTAL (for 8 wkts, 105 overs)   281
To bat: Chris Martin.
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn), 3-129 (Patel), 4-180 (Taylor),
5-188 (McIntosh), 6-195 (McCullum), 7-223 (Oram), 8-259 (Ryder).
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 22-2-80-3 (nb6), Mendis 34-8-75-1 (nb4), Muralitharan 37-9-66-3, Paranavitana 2-0-8-0.

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

jvp-poster.jpgநாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி பிரிட்டிஷ் விசா ஒத்திவைக்கப்பட்ட சிறை

court222.jpgபோலி பிரிட்டிஷ் விசாவுடன் லண்டன் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டீ அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்தார்.  2008 ஏப்ரல் 24 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.

வெளிநாட்டுப் பயண முகவர் ஒருவரே தனக்குப் பயண ஏற்பாடு செய்துதந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலீடுகளுக்கு வரிச்சலுகை – நிதி அமைச்சு தகவல்

ep-map.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம  வேலைத்திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 3 கோடி ரூபாவுக்கு குறைவில்லாத முதலீடுகளுக்கு வருமானவரி விலக்களிக்கப்படும். இயந்திரங்கள் இறக்குமதி மீதான வரி விதிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

லாக்கர்பி குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்

lockerbie_bombing.jpgஸ்காட் லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.

குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

அரசு மேலதிக வரிச்சுமைகளை சுமத்தாது; மானியங்களும் குறைக்கப்படமாட்டா சபையில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

26parliament.jpgதுண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக எக்காரணம் கொண்டும் அரசாங்கம் மக்கள் மீது மேலதிக வரிச்சுமைகளை சுமத்தவோ மானியங்களை குறைக்கவோ நடவடிக்கை எடுக்காது. இந்த வருட முடிவுக்குள் வருமான இலக்குகளை எட்ட ஆவன செய்யப்படுமென அரச வருவாய்த்துறை அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (20) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க வருமானம் குறைந் துள்ளதால் துண்டு விழும் தொகையை 6.5ல் இருந்து 7 வரையாக உயர்த்த நேரிடுகிறது. ஆனால் இந்த வருட முடி வுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வருமான இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக புதிதாக வரிகளை அமுல்படுத்தவோ மானியங்களை குறைக்கவோ மாட்டோம். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.

2003ம் ஆண்டில் 105 வீதமாக இருந்த கடன் வீதம் தற்பொழுது 81 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானம் வேகமாக அதிகரித்து வருவதோடு வருமான முரண்பாடுகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசாங்க வருவாய் 255 பில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்கவும் மானியங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.