போலி பிரிட்டிஷ் விசாவுடன் லண்டன் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டீ அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்தார். 2008 ஏப்ரல் 24 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.
வெளிநாட்டுப் பயண முகவர் ஒருவரே தனக்குப் பயண ஏற்பாடு செய்துதந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.