லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !

லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !

ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்குப் பேச்சாளர் உமா சந்திரபிரகாஷின் நிதிப்பலமாக இருந்துவந்த மைத்துனர் குடுமி ஜெயந்திரனின் பாரிஸ் லார்க்கூர்னேயில் இருக்கும் சிவன் கோயில் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. லார்க்கூர்னே கோயிலின் உரிமையாளரான குடும்பி என்றழைக்கப்படும் வெற்றிவேலு ஜெயேந்திரன் இலங்கையில் பல இளம் பெண்களை மீது பாலியல் சுரண்டல் செய்து வருவதான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பூதாகரமாக வெடித்திருந்தது. விளிம்பு நிலைக் குடும்பங்களையும் இளம்பராய பெண்களையும் குறி வைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதியான பாரிஸ் சிவன் கோயில் நிர்வாகி வெற்றிவேலு ஜெயேந்திரன் மீது, ஆள் அடையாள மோசடி, காணி மோசடி என பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர். அதேபோன்று லார்க்கூர்னே சிவன் கோயில் பிரதான சிவாச்சாரியாரான வெங்கேடஸ்வரகுருக்கள் அகோரமூர்த்தியும் அவரது மகனும் பாலியல் குற்றவாளிகள் என்ற செய்திகள் வெளியாகி பாரிஸ் சிவன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் சிவன் கோயில் சிவாச்சாரியார் அகோரமூர்த்தி சிவன் கோயிலுக்கு வரும் பெண் பக்த்தர்களிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அகோரமூர்த்தி பாரிஸ் சிவன் கோயிலுக்கு வரும் பெண்களிடம் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கோருவதாகவும் நிர்வாகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. பாரிஸ் சிவன் கோயிலுக்கு அகோரமூர்த்தி அர்ச்சகராக நியமிக்கப்படும் முன்னர் லார்க்கூர்னே பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்ததாகவும். அகோரமூர்த்தி லார்க்கூர்னே பிள்ளையார் கோயில் வரும் பக்தைகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறல்களில் ஈடுபட்டதால் பிள்ளையார் கோயிலில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். பின்னர் பாலியல் குற்றவாளியான வெற்றிவேலு ஜெயேந்திரனின் லார்க்கூர்னே சிவன் கோயிலில் வந்து அர்ச்சகராக சேர்ந்துள்ளார். மோசடிகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் பெயர் போன லார்க்கூர்னே சிவன் கோயில் அகோரமூர்த்திக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இப்போது தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியென சென்றதால் பாரிஸ் சிவன் கோயில் சிவாச்சாரியார் அகோரமுர்த்தியின் மகனான சிவாச்சாரியர் தியாகராஜன் பாலியல் துஸ்பிரோயக வழக்கில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அகோரமூர்த்தியின் மகன் தியாகராஜன் . தியாகராஜன் தமிழ்நாடு அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். 40 வயதாகும் தியாகராஜன் பேரில் ஆம்பூரில் பல்வேறு பாலியல் துஸ்பிரயோக சுரண்டல் புகார்கள் இருந்து வந்துள்ளன. ஆளும் பிஜேபி கட்சி ஆதரவால் அவற்றிலிருந்து தியாகராஜன் தப்பி வந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கால் இந்தியப் பிரதமர் கடந்த வருடம் பாரிஸ்க்கு விஜயம் செய்த போது நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க அகோரமூர்த்தியின் மகன் தியாகராஜன் பாரிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அம்மனுவின் படி கோயிலுக்கு உளவாரப் பணி செய்ய வந்த பெண்ணை பலவந்தமாக தியாகராஜன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரச்சினை செய்யவும் தானே அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்யும்படி வற்புறுத்த அப்பெண்ணை திருமணம் செய்யாது மிரட்டி ஏமாற்றி வந்துள்ளார்.

தியாகராஜன் ஏற்கனவே திருமணமானவர். இப்படியான புகார் எழுவது முதற் தடவையல்ல. ஏற்கனவே கோயிலுக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் தலையிட்டு அப்பெண்ணை தியாகராஜனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்து பிரச்சினையை முடித்துள்ளனர். ஏற்கனவே இரு பெண்களுடன் வாழும் தியாகராஜன் லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனர் போன்று பல பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடி வந்துள்ளார்.

ஆம்பூர் மகளிர் பொலிஸ் நிலையத்தால் அர்ச்சகர் தியாகராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் பாண்டிச்சேரியில் தலைமறைவாகியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைகளிலிருந்து மகனை காப்பாற்ற லார்க்கூர்னே சிவன் கோயிலில் பணியிலிருந்த அகோரமூர்த்தியும் தமிழ்நாட்டுக்கு விரைந்துள்ளதாக சிவன் கோயில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புலனாய்வுச் செய்தி ஊடகமான நக்கீரனின் செய்திக் குறிப்பின் படி 25 வருடங்களுக்கு முதல் அர்ச்சகர் தியாகராஜனின் தந்தையான வெங்கடேஸ்வரக் குருக்கள் அகோரமூர்த்தியும் பாலியல் குற்றச்சாட்டாலேயே ஆம்பூர் கோயிலிருந்து அடித்து விரட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க பாரிஸில் அர்ச்சகராக தஞ்சமடைந்த அகோரமூர்த்தி சிவன் கோயிலில் இப்போது அர்ச்சகராக உள்ளதாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

அகோரமூர்த்தி லார்க்கூர்னே சிவன்கோயில் பெண்கள் மீது பாலியல் ரீதியில் அத்துமீறல்களில் ஈடுபடுபவதாக பல தகவல்கள் சிவன் கோயில் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பில் சமூக வலைதளங்களில் கணொளிகள் பரப்பப்பட்ட போதும் சிவன் கோயில் நிர்வாகத்தில் உள்ள வெறிக்குட்டிகள் எ‌ந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பாலியல் குற்றச்சாட்டில் ஆம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகர் தியாகராஜன் தனது தந்தையின் பொறுப்பில் இருக்கும் லார்க்கூனே சிவன் கோயில் திருவிழாக்களில் வருடாந்தம் கலந்து கொண்டு வருபவர் என்றும் கூறப்படுகிறது. பாலியல் ஆசாமிகளால் கொடியேற்றப்பட்டு லார்க்கூனே சிவன் கோயிலில் திருவிழாக்கள் இடம்பெற்று வருவதாக சிவன் கோயில் பக்தகோடிகள் முணுக்கின்றனர். பாலியல் குற்றச்சாட்டில் கைதான தியாகராஜன் தலைமையிலேயே பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயிலில் “சாத்துப்படி அலங்காரப் பூசை” நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தியாகராஜன் ஜேர்மனியிலும் கோயில் ஒன்றில் கொடியேற்றத் திருவிழா செய்வதாக கூறப்படுகிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதை தான் லார்க்கூர்னே சிவன் கோயில் விவகாரம். லார்க்கூர்னேயில் சிவன் கோயில் கடையை நடத்தும் வெற்றிவேலு ஜெயேந்திரன் பாரிஸிலிருந்து வெளியேற முன்னர் சிவன் கோயிலுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்திய வரலாறும் இருக்கிறது என பாரிஸ் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர். இலங்கையில் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனர் சிவன் கோயிலிருந்து கிடைக்கும் பணத்தில் பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடி வருகிறான்.

வெற்றிவேலு ஜெயேந்திரன் பாரிஸிலிருந்து இலங்கை தப்பியோடிய பின்னர் கோயில் நிர்வாகத்தை கொண்டு நடத்தும் கட்டுவனைச் சேர்ந்த சிவகுருநாதன் கருணாகரன் மற்றும் பொன்னுத்துரை மகேந்திரன் ஆகியோர் சாராய போதையிலேயே கோயிலிலுக்குள் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. சிவன் கோயிலில் சேகரிக்கப்படும் அர்ச்சனைப் பற்றுச்சீட்டு பணமும் உண்டியல் பணமும் மோசடியான முறையில் தற்போது இலங்கையில் வாழும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இப்பணம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு அப்பாவி குட்டி என்றழைக்கப்படும் இளைஞன் சிக்க வைக்கப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். பாரிஸ் சுங்கப்பிரிவின் சோதனைக்குள்ளான லார்க்கூர்னே சிவன் கோயிலின் பல்வேறு ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்களும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பாரிஸ் வாழ் தமிழ் சிவனடியார்கள் என்று கருதப்படுகிறவர்களால் பாரிஸ் சிவன் கோயில் உண்டியிலிலும் அர்ச்சனைக்கும் மற்றும் எள்எண்னெய் எரிப்பதற்கும் கொட்டும் யூரோக்கள் வெற்றிவேலு ஜெயேந்திரன் தலைமையிலான அடாவடி மோசடிக் கும்பல்களின் சமூக விரோத பாவ நடத்தைகளுக்கே உதவுகின்றன. சிவன் சொத்து குல நாசம் என்கின்ற சொல் வழக்கின் பொருள் புரிந்தவர்கள் பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயிலின் கஜானாவை நிரப்ப துணை போக மாட்டார்கள். பக்தி என்ற பெயரில் நடக்கும் மோசடி வியாபாரத்தில் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுக்காது ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறநெறிச் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பாரிஸ் லார்கூர்னே சிவன் கோயில்களில் இடம்பெறும் இச் செயல்களால் கோயில்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பக்த கோடிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு அசிங்கத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தாங்கள் கோயில்களில் நிரந்தர பணியாளராக இருக்கும்போதோ அல்லது நிறுவனர்களாக இருக்கும்போதோ மற்றும் அர்ச்சகர்களாக இருக்கும் போதோ திருக்கோயில் பணியாளர்களுக்கான ஒழுக்கநெறிகளை கடைபிடிக்கவில்லை என்பதையே இது சுட்டி காட்டுகிறது.

இந்தப் பாவப்பட்ட பணத்தை மூலதனமாகக் கொண்டே ஜெயந்திரனின் மைத்துனியான உமா சந்திரபிரகாஷ் தன்னுடைய ஐக்கிய மக்கள் சக்தியுடனான அரசியலை முன்னெடுக்கின்றார்.

லாகூர்னே சிவன் கோயில் போன்றே லண்டன் ஹரோவில் ‘ஓம் சரவணபவ’ என்ற பெயரில் தமிழகம் கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற போலி ஆசாமி பக்தர்களின் பல்லாயிரக்கணக்காண பவுண்களை சூறையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. மேலும் இவர் பெண்களைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான முட்டாள்தனங்களில் பக்தர்கள் ஈடுபடக் கூடாது. சாமிகளுக்கும் ஆசாமிகளுக்கும் லஞ்சம் கொடுத்து பாவங்களைக் கழுவ முடியாது. தாயகத்தில் உள்ள உறவுகளை வாழ வைப்பதற்கு உதவுவதே மகத்தானது” என்கிறார் மோகனராஜா ராமகிருஷ்ணன்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *