மாவீரர்களின் முன்னாள் போராளிகளின் குடும்பங்களை தமிழ் தேசியம் கைவிட்டுவிட்டது! என்பிபி யிடம் அவர்கள் ஒப்படைக்கபட்டுவிட்டனர்!
இன்றைய தேசம் நெட் செய்திகளை காண கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
மாவீரர்களின் முன்னாள் போராளிகளின் குடும்பங்களை தமிழ் தேசியம் கைவிட்டுவிட்டது! என்பிபி யிடம் அவர்கள் ஒப்படைக்கபட்டுவிட்டனர்!
இன்றைய தேசம் நெட் செய்திகளை காண கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்!
1. இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்: பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட மதிப்பிற்குரிய இராணுவ அரசியல் ஆய்வாளர் கலாநிதி அரூஸ் இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியா, தமிழர்களைக் கையாள வேண்டும் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என இந்தியத் தூதுவர் காட்டிய சமிக்ஞ்சையை ஆகோ ஓகோ என்று புகழ்ந்துள்ளார்.
இலங்கையை பக்கத்தில் உள்ள பலசாலியை வைத்து மிரட்டலாம் என்ற தமிழ் தேசியவாதத்தின் மிகமட்டமான போர்மிலாவே கடந்த ஐந்து தசாப்தங்களாக நடைமுறையிலிருந்து வருகின்றது. இந்திய உளவுத்தறையான ரோவின் பாதுகாப்பில் உள்ள மு திருநாவுக்கரசு கோட்பாட்டின் கீழ் இயங்கும் றோ புலிகள் போலவே தற்போது கலாநிதி அரூஸ் தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவர் இதற்கும் ஒருபடி மேலே போய் அத்தானி குழுமத்தின் ஊழலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பிடியாணையை அத்தானியின், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டமாகவும் கருதுகிறார். கொழும்பு துறைமுகக் கட்டுமானம், மன்னார் காற்றாலைக் கட்டுமானம் ஆகியவை இலங்கை மக்களின் நலனுக்கு விரோதமாக மோசடியாக செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதை மறைக்கின்றார். இலங்கையைப் பழிவாங்குகின்றோம் என்ற போர்வையில் அத்தானி போன்ற பெரும் முதலைகளுக்கு இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் பலியிடுவதை நியாயப்படுத்துவதாகவே இப்போக்குள் உள்ளது. இது கலாநிதி அரூஸின் ஆய்வு விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளும் ஆய்வாக உள்ளதாக சில இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
2. அத்தானி குழுமத்தை – இந்தியாவை ஆட்டும் அமெரிக்கா: அத்தானியின் குஜராத் வீட்டிற்கு அமெரிக்காவின் Security Exchange Commission இலிருந்து பிடியாணைக்கான கட்டளை வந்து சேர்ந்துவிட்டது. அடுத்த 21 நாட்களுக்குள் நேரடியாக சமூகமளித்து அதானி தன் மீதான முறைப்பாடுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
பிடியாணைக்கான கட்டளையை ஏற்க மறுத்தாலோ நேரடியாக சமூகமளிக்காவிடிலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே அழைப்பாணை அத்தாயின் மருமகன் சாதர் அதானிக்கும் வந்துள்ளது. சாதர் அதானியின் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளை சோதனையிட்ட போதே இந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் ஆளும் மோடி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என்பன செப்ரம்பர் 25 திகட்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் இப்பிரச்சினையின் எதிரொலியாக அதானி கொடுத்த 100 கோடி நன்கொடையை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந் ரெட்டி ஏற்க மறுத்து இரத்துச் செய்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இளைஞர்களுக்கு தொழில்துறையில் திறண்சார் பயிற்சிகளை அளிக்கும் பல்கலைக்கழகத்திற்கே இந்த நன்கொடைக்கான காசோலை அத்தானியால் கடந்த மாதம் முதலமைச்சரை சந்தித்து நேரடியாக வழங்கப்பட்டிருந்தது.
அத்தானி முறைகோடு விவகாரத்தை எதிர்கட்சியான காங்கிரஸில் புதிதாக இடைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு எம்பியாக வந்துள்ள பிரியங்கா காந்தியால் சிறப்பாக கையாளப்படும் எனவும் மோடி எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம் இது தொடர்ச்சியான இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதல் எனவும். சம்பந்தப்பட்ட அத்தானி குழும இலஞ்ச முறைகேடு விவகாரத்தை உள்நாட்டிலேயே அதாவது இந்தியாவிலேயே விசாரிக்கலாம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பெரியண்ணர் சட்டம்பியார் விளையாட்டு எனவும் மேற்கின் மேலாதிக்கத்திற்கெதிரான கண்டனக்குரல்களும் எழாமல் இல்லை. ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியத்தை குறைந்த விலைக்கு வாங்கி மேற்குலகிற்கு கூடிய விலைக்கு விற்று பணம் பார்க்கும் இந்தியாவுக்கு, பிரிக்ஸில் (BRICS) உள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’ இது எனவும் பார்க்கலாம்.
3. ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா?: வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளித்துள்ளனர். மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல், மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் பிரபலம் தேடுகின்றார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ளன. வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல, ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது. அர்ச்சுனா தனது முகநூல் பிரபல்யத்திற்காக எதுவும் செய்வார் என்ற நிலையில் உள்ளார். தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக ஒரு கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க சட்டவாக்க உறுப்பினர்கள் கூடும் இடத்தில் அரச்;சுனாவின் கோமாளிக்கூத்துக்கள் அவரின் பிரபல்யம் தேடலுக்காக மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளை பேசவிடாமல் செய்வதாகவே உள்ளது. பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்றே குழுப்பம் விளைவித்து எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் இருந்து, நேரலைக்குச் சென்று, வீரவசனங்களை விட்டவர், நேற்று பாராளுமன்றத்தில் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கேட்டார். தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அரச்சுனா எவ்வித ஆரோக்கியமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது சாவகச்சேரி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
4. தமிழ் தேசிய அரசியலின் சிரோக்கள் ஹீரோக்களாக முடியுமா?: தமிழ் தேசியத்தின் சீரழிவுக்கு கட்சிகள் காரணமல்ல. இதன் சூத்திரதாரிகள் தங்களை கருத்துருவாக்கிகள் என்று அடையாளப்படுத்தும் சி. அ. யோதிலிங்கம், நிலாந்தன், நரசிங்கம் வவுனியா தமிழ் சிவில் சமூக அமையம், செல்வின் யாழ் சிவில் சமூக மையம் என்கிறார் இன்னுமொரு கருத்துருவாக்கியும் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான ஜதி ஜதீந்திரா.
உண்மையிலேயே ஊசி அர்ச்சுனா தமிழ்தேசிய ஆசன பலத்தை உடைத்துவிட்டார் என்கின்ற அவருடைய கருத்து ஒருபுறம் இருக்க நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்தேசியத்துக்கான வாக்கெடுப்பு எனக் கூறி லைக்காவின் நிதி உதவியுடன் சங்கு அரியத்தாரை களமிறக்கி அடிவாங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் உடைத்து சங்கு சின்னத்தை பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கி தமிழர்கள் சார்ந்த ஆசன பலத்தை மேலும் உடைத்தவர்களும் இவர்கள் தான். இந்த நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றுவரை ஜனாதிபதி பொதுவேட்பாளர் பற்றியோ…? அவருக்கான இரண்டு லட்சம் வாக்களுக்கான முடிவு தொடர்பிலோ..? அல்லது தோல்விக்கான விமர்சன ரீதியான கலந்துரையாடல்களையோ இன்று வரை செய்யவில்லை.
அனைத்து தமிழ்த்தரப்பையும் ஓர் புள்ளியில் இணைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க முன்வந்த பொதுக்கட்டமைப்பை நாசமாக்கியது பற்றியோ கிஞ்சித்தும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் மட்டும் பிறரை ‘மிஸ்டர் பீன்’ என நக்கலடித்து வரும் நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர்தான் உண்மையான பீன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஹீரோக்கள் என பரப்புரை செய்துவந்த பார் லைசன்ஸ் புகழ் விக்கியரின் மான் சின்னம், சித்தார்த்தன் உள்ளிட்டோரின் சங்கு சின்னம் ஆகியவை தான் மிஸ்டர் பீன்களாகிப்போயுள்ள அதேவேளை நிலாந்தன் பீன் என கூறிய ஊசி அர்ச்சுனா பெற்ற இருபதாயிரம் வாக்குகளின் பக்கத்தில் கூட நிலாந்தன் குழுவினரின் ஹீரோக்களால் நெருங்க முடியவில்லை. சீனப் பழமொழியில் ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை’ என்கிறார் ஜதி ஜதீந்திரா.
5. மற்றுமொரு தமிழ்ப் பெண் பிரதி அமைச்சராக நியமனம்: புதிதாக நேற்றைய தினம் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களாக இரண்டு பெண்களை ஜனாதிபதி அனுர அரசு நியமித்துள்ளது. அதில் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி, வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட, தேசிய மக்கள் சக்தியை ஓர் இனவாத அரசு என தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் குற்றச்சாட்டி வருகின்றனர். இது தமிழ் மக்கள் தங்கள் தேசியவாத அரசியலை நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.
6. தமிழ் தேசியம் முஸ்லீம் அமைச்சர் இல்லையென முதலைக் கண்ணீர் விடத்தேவையில்லை: முஸ்லீம் தலைவர்கள் அமைச்சரவையில் இருந்த போதும் அவர்கள் முஸ்லீம்களின் நலனை முன்னெடுக்கவில்லை அதனால் அது தங்களுக்கொரு பிரச்சினையில்லையென முஸ்லீம்களில் பலர் கருதுகின்றனர். அதனால் தமிழ் தேசியவாத ஓநாய்கள் ஆடு நனைகிறது என அழ வேண்டிய தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.
வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மண் கவ்விய தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர், முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம். 2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
7. யாழ் பாடசாலைகளின் வெளிநாட்டு ஓபிஏ OBA க்கள் ஊழலை ஊக்குவிக்கின்றன: யாழில் உள்ள முன்னணிப் பாடசாலைகளின் வெளிநாடுகளில் உள்ள மாணவர் சங்கங்கள் அனுப்புகின்ற நிதி பாரிய அளவில் ஊழலை வளர்த்துவிடுவதாக ஆளுநர் நா வேதநாயகம் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையென யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை அதிபர் நடராஜா பவன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
“யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை” என்பதை லண்டன் ஹம்டன் உள்ளுராட்சி சபையில் பொறியியலாளராக இருந்து தற்போது யாழில் தனது சேவையை வழங்கிவரும் மயில்வாகனம் சூரியசேகரமும் உறுதிப்படுத்துகின்றார்.
இலங்கையிலேயே நிதிவளம் கூடி அதனை என்ன செய்வது என்று தெரியாது செலவு செய்யும் யாழ் இந்துக்கல்லூரி உட்பட்ட யாழ் முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என ஆளுநர் நா வேதநாயகம் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார்.
மாவீரர் தின வாரம் கடந்த 21ஆம் திகதி தமிழர் பகுதிகளில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று கார்த்திகை 27 மாவீரர் தின இறுதி நாளாகும். உண்மையிலேயே மாவீரர் தினம் என்பது யுத்தம் முடிவடைந்த பின்னர் அதனுடைய வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் வெறுமனே அரசியல் லாபமீட்டும் ஓர் தொழிலாக அல்லது செயலாக மாறிப்போன சோகம் தான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவாக தமிழர்கள் மத்தியில் தன்னியக்கமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு தமிழ்தேசிய அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காகவும் – சொகுசு வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தப்படுவது வேதனையாகும்.
மாவீரர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சிறீதரன் எம்பி தொடங்கி சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லோருமே ஆடம்பரமான செல்வந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் போர்க்காலத்தில் மாவீரர்கள் ஆனவர்களின் குடும்பங்களோ, போர்க்காலத்தில் அங்கவீனர்களானவர்களோ இன்று வாழும் வாழ்க்கை அத்தனை வறுமையானதாகிப்போயுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தேசத்து நிதியை சேர்த்து அதனை வழங்க ஓர் நிதியத்தை கூட இன்று வரை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் லண்டன், பாரிஸ், கனடா என சென்று இந்த தமிழ்தேசியம் பேசிய அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்காக நிதி சேர்த்து கொள்கின்றனர். மாறாக இந்த யுத்ததத்துக்காக தன் குடும்பத்தை இழந்தவர்களுக்காகவோ – போரினால் அங்கவீனர்ளாக்கப்பட்டோருக்காகவோ நிலையை பார்த்தால் படு மோசமாக உள்ளது. அண்மையில் ஊசி அர்ச்சுனா வெளிநாட்டு மக்களிடம் தமிழ்தேசியம் என்ற பெயரில் காசு புடுங்கி வயிறு வளர்ப்பது இதற்கான அண்மைய கால ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு போட்டியாக அண்மைய காலங்களில் யூடியுப்பர்களும் மாவீரர்களின் பெயரால் வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாவீரர் குடும்பம் வறுமையால் வாடுகிறது என வீடியோ செய்து அதில் பெரும் தொகையை களவெடுத்து விட்டு சிறுதொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கிறார்கள். வெளிநாட்டு பணம்படைத்த வித்துவான்களும் ஏதோ உயிர் மீட்க உதவி செய்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உண்மையிலேயே வெளிநாட்டில் ஈழத்தின் பொருளாதார உதவிகளுக்காக பணம் அனுப்புவோர் இன்று வரை ஓர் பொதுவான நிதியத்தை உருவாக்கி பணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது மாவீரர்களுக்கும் வழங்குவதற்கு இதுவரையும் சிறிய அளவிலான நடவடிக்கையை கூட அவர்கள் எடுத்தது கிடையாது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகின்ற உதவிகள் கூட கடந்த 15 ஆண்டுகளாக கண்துடைப்புக்கான அல்லது தங்களுடைய பகட்டு ஆடம்பரத்தை காட்டுவதற்கான உதவிகளாகவே அமைந்திருக்கின்றன.
அண்மையில் லைக்கா குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒருவன் பத்திரிகை, ஐ பி சி பாஸ்கரனுடைய இணைய பக்கங்கள் எல்லாமே மாவீரர் வாரத்தில் தமிழர்களை மீள ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளுவது போல வெடித்து சிதறுகின்றன. நடைமுறையில் லைக்கா குழுவினர் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்கின்ற காசுகளை கூட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற செலவழித்தது கிடையாது. ஐ பி சி பாஸ்கரன் ரீச்சா என்கின்ற பெயரில் விடுதி வருகிறாரே தவிர இந்த நிலத்தில் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை புனரமைக்க நிலையான அபிவிருத்தி திட்டங்கள் எதயுமே இதுவரை முன்னெடுக்கவில்லை.
சுசுருக்கமாக சொல்வதாயின் இந்த நிலத்துக்காக போராடியவர்கள் , இந்தப் போராட்டத்தினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஒரு நேர சோற்றுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், ஊடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் என்கின்ற தீயை மேலும் வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என்றைக்கு முன்னாள் போராளிகளின் வறுமை நிலை இல்லாதாக்கப்படுகிறதோ..? என்றைக்கு போரால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களினுடைய அடிப்படை தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுகிறதோ..? அப்போது தான் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அர்த்தமுள்ளவையாக மாற்றமடையும்.
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது.
எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய மிக எளிமையாக ஆடம்பரங்களின்றி பதவியேற்ற நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது சுமார் 200 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இதேவேளை அனுர தலைமையிலான என்.பி.பி அரசாங்கம் அரச தலைவர்களின் முழுமையான செலவுகளையும் கட்டுப்படுத்தி மக்கள் மேல் விழுகின்ற பொருளாதார சுமையை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் 27 கோடி(270 மில்லியன்) ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி பதிவுகள் தெரிவித்திருந்தமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டார்.
முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அது நிறைவேற்றப்படவில்லை.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கால பிரச்சாரத்தின் போது கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி, கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், தான் ஜனாதிபதியான பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றது.
அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
நாங்கள் ஜாதி அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்துகொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்… “அப்படி கேட்காதீர்கள், அது தவறு…2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன்”
“நாம் அப்படி இல்லை. இவற்றை செய்தவதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்” என்றார்.
வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் மண் கவ்விய தமிழ்தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார். இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர் , முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்.2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு அமைச்சகங்களில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இரண்டு புதிய அமைச்சு செயலாளர்களை நியமித்துள்ளார்.
அது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக திருமதி மலர்மதி கங்காதரன் என்கின்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி – வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி கிஞ்சித்தும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம் – பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட தேசிய மக்கள் சக்தி ஓர் இனவாத அரசு என தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டுகளை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளவர்கள் அனைவரும் முன்வைப்பதானது அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.