14

14

விராட் கோஹ்லியை பின்தள்ளி ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் – இருபதுக்கு 20 ல் மட்டும் இலங்கை வீரர்கள் இருவர் முதல் 10 இடங்களில் !

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லியை பின்தள்ளிய பாபர் அசாம் 865 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லி 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், ரோஹித் ஷர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த தரப்படுத்தலின் முதல் 10 வீரர்களில் இலங்கையர் எவரும் இல்லை. இந்த தரப்படுத்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அஞ்சலோ மெத்தியூஸ் 575 புள்ளிகளுடன் 39 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிப் பிரிவில் மாத்திரம் இலங்கையர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த பங்களாதேஷ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள்கூட இலங்கையர்களைக் காட்டிலும் சிறப்பான தரவரிசைகளில் உள்ளனர்.

இதில் சர்வதேச இருபதுக்கு 20 தனிநபர் தரப்படுத்தல்களில் லக்சான் சந்தகன், வனிந்து ஹசரங்க மற்றும் சமரி அத்தபத்து ஆகிய மூவரைத் தவிர எவரும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதில் சந்தகன் 639 புள்ளிகளுடனும் ஹசரங்க 625 புள்ளிகளுடனும் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் பந்துவீச்சாளர்களுக்கான தனிநபர் தரப்படுத்தலில் முறையே 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை வகிக்கின்றனர்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்து பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் சகலதுறை தரப்படுத்தலில் 265 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தை வகிக்கிறார்.

இலகுவான வெற்றியை தவற விட்டது கொல்கத்தா – முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பை  தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடச் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
குயின்டன் டி காக் 2 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 1 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா 43 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன்பின் அந்த்ரே ரஸல் பந்துவீச்சில் மும்பை அணி திணறியது. ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், குருணால் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், மார்கோ ஜென்சன் 0 ஓட்டங்களிலும், ராகுல் சாஹர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 152  ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
கொல்கத்தா அணியின் அந்த்ரே ரஸல் 4 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை  சாய்த்தார்.
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.
இருவரும் இணைந்து  72 ஓட்டங்கள் சேர்த்தனர். கில் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 5 ஓட்டங்களிலும், மார்கன் 7 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 9 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் இலக்குகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 பந்துப்பரிமாற்றங்களில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல் ஆடினர். 17வது பந்துப்பரிமாற்றத்தில் 8 ஓட்டங்கள் கிடைத்தது. 18வது பந்துப்பரிமாற்றத்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. 19வது பந்துப்பரிமாற்றத்தில் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி பந்துப்பரிமாற்றத்தில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் போல்ட் 2 இலக்குகளை வீழ்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 7 இலக்குகள் இழப்புக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
 மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 இலக்குகளையும், டிரெண்ட் போல்ட் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” – ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட்

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” என ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் ஆயுதபலம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியன்மாரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையால் அடக்கப்பட்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்ததை சுட்டிக்காட்டி மைக்கேல் பேச்லெட் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியன்மாரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

தேசத்தினுடைய வாசகர்களுக்கு பிறந்துள்ள  பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

தேசத்தினுடைய வாசகர்களுக்கு பிறந்துள்ள  பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள  – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
We Luv Coimbatore's tweet - "அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு  வாழ்த்துக்கள்!! #தமிழ்ப்புத்தாண்டு #TamilNewYear " - Trendsmap
மனிதகுல வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தின் சாட்சியங்களாக நாமெல்லாம் ஆகியிருக்கின்றோம். சமூகத்தின் மனிதத்துவத்தின் அவசியத்தை உணர்த்துகின்ற ஆண்டாக கடந்து செல்கின்ற ஆண்டு அமைந்துள்ளது. அதனால் தனி மனித சிந்தனையோடு சற்று சமூக சிந்தனையயையும் இணைத்து நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் எமது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்வோம். உள்ளார்ந்த மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. வழிபிறப்பதற்கு தை பிறந்தால் மட்டும் போதாது. நம் உள்ளங்களில் நல் எண்ணங்களும் பிறக்க வேண்டும்! செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!