11

11

சென்னை அணி தலைவர் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் !

14-வது ஐ.பி.எல் தொடரில்  சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி  அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” – இசாக் ரஹ்மான்

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றவர்களே இவர்கள் என இசாக் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (10.04.2021) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சமூகமே ஏமாந்து விடாதீர்கள். கல்வி மார்க்கத்தில் அக்கறை கொண்ட நாங்கள் சிலரின் இனவாத பேச்சுக்களுக்கு ஏமாறக்கூடாது. இனவாதம், மதவாதம் ஒழிய வேண்டும். கண்ணியமாகவும் கௌரவமாகவும் நாம் சிறுபான்மைச் சமூகமாக வாழவேண்டுமானால் தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனே இணைந்து வாழவேண்டும். அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.

பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவனை யாராலும் கண்டு கொள்ள முடியாது. எங்கள் ஏழுபேரையும் பாரிய அபிவிருத்தி ஊடாக இணைத்துக் கொண்டு செல்லும் நிமால் லான்சா போன்ற இராஜாங்க அமைச்சரும் இங்கு இருக்கிறார்.

அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டு பிரதமர் எங்களிடம் கூறியதாவது கன்னியமாக வாழவேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று தான்.

உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் தற்போது இணைந்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.”என்றார்.