22

22

புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு

chamal_rajapakse.jpgஇலங் கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார். அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா

sarath_.jpgஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியும், ஏழாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. 

சனத் ஜயசூரிய தொடர்ந்தும் தேசிய போட்டிகளில் விளையாடுவார்

sanath-jayasuriya.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற அமைச்சுப் பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.

40 வயதுடைய ஜயசூரிய தற்போது ஐ. பி. எல். போட்டிகளில் மும்பை அணி சார்பில் விளையாடி வருகின்றார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 74,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் உலகக் கிண்ண வீரர் அர்ஜுன ரணதுங்க, ஹசான் திலகரட்ன ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை முன்பு ஆளுங்கட்சி சார்பில் செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க தற்போது ஜனநாயகத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய போதிலும் தொடர்ந்தும் தனது இடத்திற்காக தேசிய போட்டிகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார் எனவும் ஏ. எப். பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் சபாநாயகர் தெரிவு

former-speaker.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுணராகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஹரி போட்டர் புகழ் ராவ்லிங் அரசியல் களத்தில்! ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்

harry_potter.jpgஹரி போட்டர் புத்தகம் எழுதிய பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங், பிரிட்டன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனின் பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங்  உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் மனம் கவர்ந்தஇ ‘ஹரி போட்டர்’ புத்தகங்களை எழுதியதால் பிரபலமானார்.

ஹாரி போட்டர் புத்தகம் எழுதியதன் மூலம் கிடைத்த வருவாயால் பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.

ஜே.கே.ராவ்லிங்கிற்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. வரும் மே 6ம் தேதி நடக்கவுள்ள பிரிட்டன் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மேடைகள் தோறும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்- ரணில் மனோ உறவு முறிந்தது

ranil-mano.bmpஇலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.