ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
08
08
உலக சமுத்திர தினம் World Oceans Day ஆண்டு தோறும் ஜூன் மாதம் 08ஆம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் சமுத்திரங்களும், எங்களின் பொறுப்புகளும் “Our oceans, our responsibility ” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2009 ஜூன் மாதம் 08ஆம் திகதி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.
1992 ஜுன் மாதம் 08ஆம் திகதி பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ Rio de Janerio நகரில் நடைபெற்ற “புவி மகாநாட்டின் போது” EARTH – SUMMIT சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 08ஆம் திகதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என 2008 டிசம்பர் 05ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை 63/iii ம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.
சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை எமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
சமுத்திரம் என்பது கூடிய பரப்பைக்கொண்ட உப்பு நீர் நிலையாகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறாகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள சமுத்திரங்களினால் மூடப்பட்டுள்ளன. இவை பல சமுத்திரங்களாகவும், பல கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3, 000 மீற்றருக்கு (9, 800 அடி) மேற்பட்ட ஆழத்தைக் கொண்டன. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 – 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.
பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அத்லாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக், அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.
மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது எமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது. இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் இடுபடல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, எங்களின் வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது. இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ஆம்ஆண்டு சுனாமிப்பேரலையைக் குறிப்பிடலாம். இந்த நிகழ்வு பற்றிய உணர்வுகளையும் மாற்றியமைக்க எத்தனித்தல் வேண்டும்.
சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. உலக சமுத்திர தினத்தில் Dr. சால்ஸ் குளோவர் என்பவரின் நூலை அடிப்படையாகக் கொண்ட அவரின் முகவுரையை கொண்ட புகழ்வாய்ந்த THE END OF THE LIVE எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகின்றது.
நொட்டர்டேமிலுள்ள இராஸ்மஸ் பல்கலைக்கழகமும், DELFT தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இத்தினத்தைக் கொண்டாடுவதற்குப் பல திரைப்பட நிகழ்ச்சிகளை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை உயிரினங்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தேர்தல்களில் நிற்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லைத் தான் அதிலும் குறிப்பாக தேர்தலில் நிற்பவர்கள் எல்லோரும் தாம் வெற்றி பெறப் போவதில்லை என்று எண்ணுவதும் இல்லை. சிலர் கட்சியின் சார்பாக நிறுத்தப்படுகின்றனர். சிலர் ஏதோகொள்கையின் நிமித்தம் தேர்தலில் நிற்கின்றனர். சிலருக்குப் பேராசை. இன்னும் சிலருக்கோ நப்பாசை. இதில் லண்டன் தொகுதியில் நின்று தோல்வியுற்ற ஜனனி ஜனநாயகம் எவ்வகை?
யூன் 4ல் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இடம்பெற்றது. பிரித்தானியா உட்பட 27 நாடுகளில் உள்ள 375 மில்லியன் பிரஜைகள் 736 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பிரித்தானியாவில் உள்ள 72 ஆசனங்களில் லண்டனில் 8 ஆசனங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். அதில் ஜனனி ஜனநாயகம் புலியாதரவு அலையுடன் தேர்தலில் நின்றார். தேர்தலின் முடிவுகள் இன்று (யூன் 7) வெளியாகியது.
இவ்வாரம் வெளியாகிய புலியாதரவு ஈழமுரசு பத்திரிகையில் ‘வணங்கா மண்’ கப்பலைத் தொடர்ந்து ஜனனியின் தேர்தல் பிரவேசம் புலத்து தமிழர்களின் விடுதலைப் பாதையை தெளிவாகச் செப்பனிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வீர காவியங்களோடு புறப்பட்ட ‘வணங்கா மண்’ ‘வணங்கிய மண்’ ணாக போய் சிறிலங்கா அமைச்சரின் காலில் கூனிக் குறுகி நிற்கின்றது.
ஈழப் பிரச்சினையுடன் கூட்டாக பொஸ்னியா தீபெத் பிரச்சினையையும் தீர்க்கப் புறப்பட்ட ஜனனியின் கப்பல் ஈஸ்ற்ஹாமைத் தாண்ட முதலே கவிழ்ந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாமில் ஜனனி பெற்ற வாக்குகள் 3520 மட்டுமே. முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை நம்பியும் நடாத்தப்படும் அரசியலின் விளைவு தான் ஜனனியின் தோல்வி.
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு லண்டனில் ஒரு ஆசனத்தைப் பாதுகாக்க குறைந்தது 8 வீத வாக்குகளாவது (190 000) தேவையென்று தேசம்நெற்றில் முன்னரே குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை ஒரு ஆசனத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த வாக்கு 188 440. ஜனனி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வாக்குகள் 50 014. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.9 வீதமான வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றிருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் தனது கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள 40 000க்கும் அதிகமான வாக்குகளை 2.5 வீதமான வாக்குகள் – பெற வேண்டி இருந்தது. 2.5 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால் ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ( தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன் )
எவ்வித பொது அறிவும் இல்லாமல் யதார்த்தமற்ற கொள்கையினாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் தடம்புரண்ட ஈழப்போராட்டம் அதே அணுகுமுறையினால் புலத்திலும் தடம் புரண்டது. அதிஸ்டவசமாக தாயகத்தில் ஏற்பட்டது போன்ற மனித அவலம் எதுவும் புலத்தில் ஏற்பட்டுவிடவில்லை.
புலத்து தமிழர்ளும் புலிப் பினாமிகளும் இன்னும் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்கின்றனர். தமிழகத்தில் மம்மியை கொண்டாடி மம்மியை கவிழ்த்து விட்டார்கள். இங்கு பேபியைக் கொண்டாடி பேபியையும் கவிழ்த்து விட்டார்கள். ஒரு பேப்பர் கோபியும் ஈஸ்ற்ஹாம் முருகானந்தனும் வோட்டுப் போடாதவர்களுக்கு இனி ‘துரோகிகள்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து கௌரவிப்பார்கள்.
ஜனனி ஜனநாயகம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஒவ்வொரு தமிழரும் 5 வேற்று இனத்தவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள் அதன் மூலம் தனது சீற்றை செக்குயர் (secure)பண்ணலாம் என்று குறிப்பிட்டார். பாவம் ஜனனி புலத்து தமிழர்களைப் போல் முட்டாள்கள் வேற்று இனத்திலும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.
எமது சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவான நிலையில் ஜனனி ஜனநாயகம் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் புலிப் பினாமிகளின் தற்கொலை குண்டுதாரிகள் போன்று அரசியலில் நுழைவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சிதறடித்துவிடுகின்றது.
இலங்கையில் கொல்லப்பட்ட 20 000 தமிழர்களின் இரத்தக்கறை ஜனனி போன்றவர்களிலும் இருக்கின்றது. அம்மக்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது அரசியல் நலன்களுக்காக புலிகளைக் காப்பாற்றுவதிலேயே ஜனனி ஜனநாயகம் மிகத் தீவிரமாக இருந்தார். யுத்தப் பகுதிக்குள் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை ஜனனி எச்சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் பலவந்தாமாக இளைஞர்களையும் யுவதிகளையும் பிடித்து யுத்த முன்னரங்கிற்கு அனுப்பி அவர்களைப் பலிகொடுத்த போது ஜனனியும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனது படத்தையும் புலிக்கொடியையும் தாங்கிச் சென்றனரேயன்றி அம்மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரும் மனித அவலத்தில் குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்ட ஜனனி ஜனநாயகம் வன்னி முகாம்களில் தேர்தலில் நின்றிருந்தால் கட்டுக் காசையும் பறிகொடுத்து இருப்பார்.