April

April

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் வேறொரு தினத்தில் இலங்கை வருவார் – அமைச்சர் கெஹெலிய

carl-bildt-swe-foreigh-mini.jpgசுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாக பரப்பப்ட்ட செய்தியில் உண்மையில்லை எனவும் அரசாங்கத்தின் வசதி கருதி அவரது வருகைக்காக  வேறு ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கன ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட்ää பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் ஆதகியோர் முறையான முன்னறிவித்தல் கொடுத்து இலங்கை வந்துள்ளனர். சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. ஒரே நேரதத்தில் பலநாடுகளின் உயர்மட்டக் குழுவினரைக் கையாள முடியாததாலும் அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும் என்பதாலும் அவரது வருகைக்காக வேறு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்

வாழ்விடத்தைவிட்டு வெளியேறி 3ஆம் ஆண்டு நிறைவு : மூதூர் கிழக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு முதல் கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களில் சம்பூர் மேற்கு ,சம்பூர் கிழக்கு , கூணித்தீவு , கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1750 குடும்பங்கள் இது வரை மீள் குடியேற்றம் இன்றி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றன.

இக்கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதால் தான் இவர்களின் மீள் குடியேற்றத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.இவர்களின் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இது வரை சாதகமான பதில்கள் இல்லை. இவர்களை குடியேற்ற அரசாங்கம் தெரிவு செய்துள்ள மாற்றுக் காணிகள் பொருத்தமற்றது என்பதால் இவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது உயர் பாதுகாப்பு வலய எல்லை குறைக்கப்பட்டு கடற்கரைச்சேனை கிராம சேவையாளர் பிரிவையாவது விட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலய முன்றலில் இக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இன்று காலை முதல் மாலை வரை பிரார்த்தனையிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்திற்கு மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது.இப் போராட்டத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை ஆயர் கலாநிதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மனாந்தாஜி உட்பட சர்வ மத பிரமுகர்கள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

ஈழத்தமிழர்களுக்காக கோவை இளைஞர்கள் 2009 கி.மீ. சைக்கிள் பயணம்

கோவை மாவட்டம், காரமடை, மருதூரை சேர்ந்த அமர்நாத் செல்வம், பரமானந்தம் ஆகிய இருவரும் இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைத்தனர். தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து, இதை நிறைவேற்ற முடிவு செய்தனர். இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன் வந்தது. கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை உறுப்பினர்கள் இவர்களது பயணத்தை செஞ்சிலுவை சங்கம் முன் துவக்கி வைத்தனர்.

மணிக்கு 20 கி.மீ., வேகத்தில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயணம் செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி, கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்கின்றனர். ஏப்., 30ல், கன்னியாகுமரியிலிருந்து, திருச்செந்தூர் வழியாக, தூத்துக்குடி செல்கின்றனர்.

மே 1ல், தூத்துக்குடி, மதுரை வழியாக, திருச்சி செல்கின்றனர். அடுத்த நாள், திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். மே 3ல், நாகையிலிருந்து புதுச்சேரிக்கும், மே 4ல், அங்கிருந்து சென்னைக்கும் செல்கின்றனர்.

மே 5ல், சென்னையிலிருந்து வேலூர் சென்று, அடுத்த நாள், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக, சேலம் செல்கின்றனர். மே7ல், சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், அவினாசி, மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செஞ்சிலுவை சங்கம் வரை வந்து 2009 கி.மீ., பயணத்தை முடிக்கின்றனர்.

தன்னையும், தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார் கருணாநிதி:நெடுமாறன்

nedumaran1.jpgஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகின்றார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.   இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணமல் போன மாணவியை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்

chidambaram1.jpg
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சரண் அடைய வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது. இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும். நான் எதையும் ஊகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்க வில்லை என்றார்.

நளினி விடுதலைகோரிய மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் நளினி.  அவரை  விடுதலை செய்ய கோரி சென்னை ஐ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கிழ.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைப் பகிஷ்கரிப்பு

eastern-university.gifகிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து வருவதால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஒருவருக்கும் மாணவர்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த பகிஷ்கரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

குறிப்பிட்ட விரிவுரையாளரை தமது பீடத்திலிருந்து மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மாணவர்களை அவமதிக்கும் வகையில் இவ்விரிவுரையாளர் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாணவ பிரதிநிதிகளுக்கும் மருத்துவத் துறை பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.ஜி கருணாகரனுக்குமிடையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்ததைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பீடாதிபதி விதித்திருந்த நிபந்தனையை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாகவே தொடர்ந்தும் மாணவர்கள் இந்த விரிவுரைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் இணைப்பாளர் ஒருவர் மாணவர்கள் விரிவுரைகளுக்குத் திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. 

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

சீன சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர் சிவம் காலமானார். கொம்யூனிஸ்ட் சிவா என்று அறியப்பட்ட இவர் ஏப்ரல் 27 அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது நினைவாக தேடகம் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பு:

நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. பின்னர் சீனசார் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர தொண்டனாக செயலாற்றியவர். சாதிய பிசாசு கோலோச்சியிருந்த நாட்களில் அதன் அனைத்து வடிவங்களையும் உடைத்தெறிவதில் இவர் முன்னின்று உழைத்த நாட்கள் வரலாற்றில் பலராலும் பதியப்பட்டுள்ளன.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த பிற்பாடு, மாற்றுக்கருத்துக்காகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காகவும் ஒரு தாபனத்தின் தேவையை வலியுறுத்தி தேடகத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்து இறக்கும் இறுதித்தறுவாய் வரை அதன் நோக்கத்திற்காய் உழைத்தவர். புலம்பெயர்ந்த சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான ஒரு அடையாளமாக தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) திகழவேண்டும் என்ற நோக்கில் அதன் பன்முக செயற்பாடுகள் குறித்து வலியுறுத்தி வந்ததுடன் அவற்றை செயற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர். அண்மைக்காலமாக நிலவி வந்த அரசியல் மந்தநிலையை உடைத்து மீண்டும் புத்தெழுச்சியுடன் தேடகம் செயற்பட எம்மையெல்லாம் உந்தியவர்.

இறுதியாக 26.04.2009 இரவு பத்திரிகையாளர் காமினி வியாங்கொடவுடனான சந்திப்பின் போது, இன்றைய போரை, முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவில்லை என்ற விசனத்தை தெரிவித்ததுடன், இந்த போர் இலங்கை பேரினவாதத்தின் தமிழ் சிறுபான்மை இனம் மீதான ஒடுக்குமுறையே தவிர வேறெதும் இல்லை என்று குறிப்பிட்டார். சிறுபான்மை இனம் தனது உரிமைக்காய் போராடவேண்டிய தேவை இன்று மிகப்பலமாக உள்ளதாகவும் அதற்கான அரசியல்பலத்தை உலகளாவிய ரீதியில் வென்றெடுக்கக்கூடிய போராட்டங்கள் தொடரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகள் அவரை மிகவாக பாதித்துமிருந்தது. நீண்டகாலமாக சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்தாலும் அவை எவைற்றையும் மற்றவருக்கு தெரிவிக்கவிரும்பால் தனது பணிகளை முன்னின்று செய்யதவர் திரு. சிவம். 27.04.2009 அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் எம்மைவிட்டு திரு. சிவம் பிரிந்துவிட்டார். தன் வாழ் முழுவதும் சமூக மேன்மைக்காக சிந்தித்த, உழைத்த தோழனை போராளியை நாம் இழந்துள்ளோம். தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) தனது உற்ற செயற்பாட்டாளரையும் முன்னோடியையும் இழந்துள்ளது. இவ் ஆழ்ந்த துயரை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னாரின் புகழுடல் Ogden Funeral Home (Midland/ Sheppard)ல் 29-04-2009 புதன்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 30-04-2009 வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை St. James (Parliament/ Wellesley) மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.

சாந்தி (மனைவி) (001) 905-303-6675

தேடகம் தொடர்புகளுக்கு:
பா.அ. ஜயகரன் (001) 416 275 0070
கோணேஸ் (001) 647 891 8597

பாதுகாப்பு வலயத்தில் 24 மணி நேரத்தில்; ஏழு தற்கொலைத் தாக்குதல்கள் – பிரிகேடியர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 4 மனித குண்டுகளும் 2 மோட்டார் சைக்கிள் குண்டுகளும், வெடி மருந்து நிரப்பபட்ட கெப் வாகன குண்டு ஒன்றும் இத்தற்கொலைத் தாக்குதலில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.