சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாக பரப்பப்ட்ட செய்தியில் உண்மையில்லை எனவும் அரசாங்கத்தின் வசதி கருதி அவரது வருகைக்காக வேறு ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கன ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.
பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட்ää பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் ஆதகியோர் முறையான முன்னறிவித்தல் கொடுத்து இலங்கை வந்துள்ளனர். சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. ஒரே நேரதத்தில் பலநாடுகளின் உயர்மட்டக் குழுவினரைக் கையாள முடியாததாலும் அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும் என்பதாலும் அவரது வருகைக்காக வேறு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்