Multiple Page/Post

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

ஏப்பிரல் 28 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நிரந்தர வைப்பிலிருந்த அரச நிதியை கணக்கிலிருந்து எடுத்து அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வழக்கிலேயே ரணில் சாட்சியமளித்தார்.

அதன்பின்னர் தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன்னைப் பொறுத்தவரை நிதியை எடுத்ததில் தவறில்லை. அரச செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வங்கிகளில் வைப்பிலிட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வைப்பிலிட்டதே தவறு என இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாதிட்டதாகவுதம் கூறினார். அத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கும் கடிதங்களை பிறருக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க மட்டக்களப்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கிய கடிதம் குறித்து கருத்துக்கள் தெரிவித்த குரல் பதிவையையும் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணயத்தின் கடன் வசதியினை நீடிப்பதற்கான நான்காவது மதிப்பாய்வு நடந்து வருகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு ஐஎம்எப் விதித்திருக்கின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற கூடிய கால அவகாசத்தை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் இப்பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு விதித்துள்ள வரிச்சலுகைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு பேச்சுவார்த்தைகள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !

தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !

2008 இல் ஒக்டோபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அவர் உயிர் பிழைத்திருந்தார். இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு நபர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினமான ஏப்பிரல் 28 ஆம் திகதி இவ்வழக்கின் முதலாவது சாட்சியான மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் முற்பட்டு சாட்சியமளித்துள்ளார். 2008 இல் மைத்திரி சுகாதார அமைச்சராக இருந்த போதே அவரது வாகனத் தொடரணி மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மைத்திரி பயணித்த வாகனம் குண்டுத் தாக்குதலில் தப்பியது. இருந்தபோதும் இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்திருந்தனர்.

 

விரைவில் தையிட்டி விகாரையை அண்டிய காணிகள் விடுப்பு !

விரைவில் தையிட்டி விகாரையை அண்டிய காணிகள் விடுப்பு !

தையிட்டியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸமகார விகாரைக்காக சூவிகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் விகாரை அமைந்திருக்கும் காணி தவிர ஏனைய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என என்பிபி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் தையிட்டி விகாரையை வைத்து என்பிபி அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு பின்னடவாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மே மாதம் 6 திகதி உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னராகவே காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் அனைத்தும் விடுக்கப்படும் என கிளிநொச்சி தேர்தல்ப் பிரச்சார கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கஜாவைத் தேசியத் தலைவர் என்ற சட்டத்தரணி சுகாஸ் – மாட்டிவிட்ட சுரேஸ் !

கஜாவைத் தேசியத் தலைவர் என்ற சட்டத்தரணி சுகாஸ் – மாட்டிவிட்ட சுரேஸ் !

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் போது சட்டத்தரணி சுகாஸ் உணர்ச்சி மிகுதியால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பிறகு தேசியத் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார் என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் ஐபிசி தொலைக்காட்சி விவாதத்தில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தான் அப்படி ஒருபோதும் கூறவில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். இப்போது அந்தக் காணொளி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணிகளும் அரசியல் வாதிகளும் என்றாலே பொய் பேசுபவர்கள் என மக்கள் மத்தியில் நிலவும் பொதுக் கருத்து நிரூபணமாகி இருக்கிறது என்று கூறலாம்.

 

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைனும் கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

நுவரெலியாவில் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பெய்த பலத்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­து. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான  தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன.
சில பிர­தான வீதிகளில் மழை நீர் நிரம்­பி­யுள்­ள­துடன், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

 

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

லக்ஸான் என்ற தமிழ் இளைஞர் கடந்த சனிக்கிழமை 26 ஏப்பிரல் பாரிஸின் புறநகர் ரயில் நிலையமொன்றின் தண்டவாளத்தில் படுத்திருந்து தற்கொலை செய்துள்ளார். பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து குறித்த இளைஞன் பிரான்ஸ்க்கு வந்துள்ளார். அவரின் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் வேலை செய்த உணவகம் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குரிய சம்பள பாக்கி இருந்ததாகவும் தெரியவருகின்றது. விசாவும் இல்லாமல் வேலை செய்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காத விரக்தியில் லக்ஸான் இருந்ததாக அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது. கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர், தண்டவாளத்தில் தலையை வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெநாளிட்டு வேலை வாய்ப்புக்களுக்கான பல்வேறு சந்தர்ப்பங்களை பல துறைகளிலும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து வேலை பெற்று வரலாம். அதற்கேற்றாற் போல் இளைஞர் யுவதிகள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிந்ததே.

அதேநேரம் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விசா இல்லாத தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் வேலை வழங்கும் கடைக்காரர்களால் குறைந்த சம்பளம், அதிகப்படியான வேலைப்பளு மற்றும் ஒழுங்காக சம்பளத்தை கொடுக்காமல் என பல்வேறு வகைகளிலும் சுரண்டப்படுகிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் விசா இல்லாத காரணத்தால் சட்டத்தையும் நாட முடியாதுள்ளது. ஒரு கட்டத்தில் லக்ஸான் போன்று தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

யாழில் தொடரும் மலையக மாணவர்களின் தற்கொலைகள் !

யாழில் தொடரும் மலையக மாணவர்களின் தற்கொலைகள் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த மலையகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொட்டகல – புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதான கருப்பையா கவிரத்தினம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கொக்குவில் பிரவுண் வீதியில் தங்கியிருந்த விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஆறுதிருமுருகனின் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலும் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி மலையக மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்களிலும் காதல் விவகாரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் தற்கொலையில் அவர் படிப்பதற்கு பணப்பற்றாமையால் சிரமப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை எதனையும் உறுதப்படுத்த முடியவில்லை. எப்படியிருந்த போதும் மலையகத்திலிருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆறுதிருமுருகன் போன்றவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்காக உதவுகிறோம் என பெருந்தொகை பணத்தை புலம்பெயர் தொண்டு அமைப்புக்களிடம் வசூலிக்கிறார்கள். அதனை அவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்கு எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதில் எந்த வெளிப்படைத் தன்மையும் கண்காணிப்பும் இல்லை.

சமீப காலங்களில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் உளவள ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.

மூன்று முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என ஜனாதிபதி அனுர தெரிவிப்பு !

மூன்று முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என ஜனாதிபதி அனுர தெரிவிப்பு !

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி , உத்தியோகபூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.