Multiple Page/Post

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது – பிரணாப் முகர்ஜி

mugarsjee_piranap.jpg இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார் இது விடயமாக அவர் விடுத்துள்ள  அறிக்கையில்,

இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. பாதுகாப்புப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு 2 நாட்கள் போர்நிறுத்தம் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேறும் வகையில், போர் நிறுத்தத்தை அரசு நீடிக்க வேண்டும். மக்கள் வெளியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்தில் ஈடுபடாது. இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும்.

இந்தியா அனுப்பி வைத்துள்ள 62 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் புல்மூட்டை என்ற இடத்தில் உள்ள முகாமில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலும் 40 ஆயிரம் மூட்டை உதவிப் பொருட்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க இருக்கிறது.

இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இந்தியாவின் கோரிக்கை ஏற்று நடப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார் பிரணாப்.

இலங்கையுடன் உறவை துண்டிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங்கை அரசு போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள அவசர தந்தி;

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தப் போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஈழவேந்தன் உண்ணாநோன்பை முடித்தார்

eelaventhan_.jpg
தென்னாபிரிக்கா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் உண்ணாநோன்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
தென்னாபிரிக்க தொலைத்தொடர்புத் துணையமைச்சர் R.L. படையாட்சி, ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா என்ஜிகிலானா (Sisa Njikelana) ஆகியோர் நேற்றிரவு உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்றனர்.  தென்னாபிரிக்க அரசும், மக்களும் ஈழவேந்தனின் கோரிக்கைகள் தொடர்பாக சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்தே தனது போராட்டத்தை கைவிட தான் முன்வந்திருப்பதாக 76 அகவையுடைய ஈழவேந்தன் கூறினார்.

இடம்பெயர்ந்தோருக்கு அடுத்த மாதம் விசேட அடையாள அட்டைகள் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தகவல்

badurdeen.jpg புலிகளிடமிருந்து தப்பி வந்து வவுனிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு அடுத்த மாதம் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார். தமது அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த விசேட அடையாள அட்டைகள் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

ஐ.பி.எல். போட்டி அட்டவணை

images-ipl.jpgஏப்18:  சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மாலை 4 மணி

ஏப்18: ராஜஸ்தான்ராயல்ஸ்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டவுன் இரவு 8 மண

ஏப்19: டெல்லி டேர்டெவில்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டவுன் மாலை 4 மணி

ஏப்19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்20: ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர்கிங்ஸ் போர்ட் எலிசபெத் இரவு 8 மணி

ஏப்21: நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் மாலை 4 மணி

ஏப்21: ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் டர்பன் இரவு 8 மணி

ஏப்:22: ராயல் சேலஞ்சர்ஸ்  டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்23: டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்23: நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்24: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ், டர்பன் இரவு 8 மணி

ஏப்25: டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இந்தியன்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்25: நைட் ரைடர்ஸ்  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்26: ராயல் சேலஞ்சர்ஸ்  டெல்லி டேர்டெவில்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

ஏப்26: ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்27: சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்27: நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் இரவு 8 மணி

ஏப்28: டெல்லி டேர்டெவில்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

ஏப்29: நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்29: மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

ஏப்30: டெல்லி டேர்டெவில்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

ஏப்30: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே1: மும்பை இந்தியன்ஸ் நைட் ரைடர்ஸ் ஈஸ்ட் லண்டன் மாலை 4மணி

மே1: ராயல் சேலஞ்சர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

மே2: ராஜஸ்தான் ராயல்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4மணி

மே2: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே3: கிங்ஸ் லெவன் பஞ்சாப் நைட் ரைடர்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

மே3: மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே4: டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈஸ்ட் லண்டன் இரவு 8 மணி

மே5: கிங்ஸ் லெவன் பஞ்சாப்  ராஜஸ்தான் ராயல்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே5: டெல்லி டேர்டெவில்ஸ் நைட் ரைடர்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே6: மும்பை இந்தியன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே7: ராயல் சேலஞ்சர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே7: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே8: டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஈஸ்ட் லண்டன் இரவு 8 மணி

மே9: டெக்கான் சார்ஜர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிம்பெர்லி மாலை 4 மணி

மே9: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பெர்லி இரவு 8 மணி

மே10: ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

மே10: நைட் ரைடர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே11: டெக்கான் சார்ஜர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பெர்லி இரவு 8 மணி

மே12: ராயல் சேலஞ்சர்ஸ் நைட் ரைடர்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே12: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே13: டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே14: சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே14: மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே15: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி டேர்டெவில்ஸ் புளோம்பாண்டீன் இரவு 8 மணி

மே16: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4மணி

மே16: டெக்கான் சார்ஜர்ஸ்  நைட் ரைடர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே17: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெக்கான் சார்ஜர்ஸ் ஜோகனஸ்பர்க் மாலை 4 மணி

மே17: ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லிடேர்டெவில்ஸ் புளோம்பாண்டீன் இரவு 8 மணி

மே18: சென்னை சூப்பர் கிங்ஸ் நைட் ரைடர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே19: டெல்லிடேர்டெவில்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே20: ராஜஸ்தான் ராயல்ஸ் நைட் ரைடர்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே20: சென்னை சூப்பர்கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

மே21: மும்பை இந்தியன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே21: டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே22: முதலாவது அரைஇறுதி செஞ்சூரியன் இரவு 8 மணி

மே23: 2 வது அரைஇறுதி ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே24: இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க், இரவு 8 மணி

நாடு துண்டாடுவதை தடுத்து ஐக்கியப்படுத்தும் ஆணையையே மக்கள் எனக்கு வழங்கினர் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgநாடு துண்டாடுவதைத் தடுத்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான ஆணையையே மக்கள் எனக்கு வழங்கினர். மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றும் முன்னிற்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென்றோ அல்லது வேறு எந்த வேண்டுகோளையும் மக்கள் விடுக்கவில்லை. யாழ்ப்பாண மக்கள் கூட நாடு துண்டாடுவது தடுக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை மட்டுமே முன் வைத்தனர். நாட்டுத் தலைவன் என்ற ரீதியில் அதனை நான் நிறை வேற்றியுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியானதா? அல்லது தவறானதா என்ற தீர்ப்பை மக்கள் இதன் மூலமே வழங்குவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் மாநாடு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த காலங்களில் நாம் நான்கு முக்கிய சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எனினும், எத்தகைய நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியையோ மக்களுக்கான நிவாரணங்களையோ நிறுத்தவில்லை. நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதிலும் முன்னின்றோம். சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருவதுடன் நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் துறைமுக நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஒலுவில், காங்கேசன்துறை உட்பட ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் புலிகள் படுகொலைகளைப் புரிந்த போதும் நாம் பேச்சுவார்த்தைகளிலேயே முனைப்பாக இருந்தோம். மாவிலாறு சம்பவம் வரை நாம் பொறுமை காத்தோம். அது விவசாயிகளின் நலன் சம்பந்தப்பட்டதால் நாம் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டது.

அன்று தொடங்கிய மனிதாபிமான நடவடிக்கை அதற்குப் பின் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இன்று அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழ் மக்களையும் மீட்டு நாட்டையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம், இந்தப் போராட்டம் சரியா – தவறானதா என மக்களே தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்பிருந்த அரசியல் தலைவர்கள் கூட இந் நடவடிக்கையைத் தவறு எனவும் இது மனிதப் படுகொலைகளுக்கே வழிவகுக்கின்றன என்கின்றனர். சர்வதேச ரீதியிலும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய மக்களின் கருத்தை அறியவே மேல் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. சரி – பிழையை மக்கள் தெரிவிக்கட்டும். மேல் மாகாணத்திலும் அரசாங்கம் வெற்றி பெறும். மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்கும் கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

மேல் மாகாணம் உட்பட மாகாண சபைகள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் தான் அபிவிருத்திப் பணிகளை முறையாக முன்னெடுக்க முடியும். மக்களுக்கு அதிக சேவைகளை வழங்கவும் முடியும். கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் 1,26,000 வாக்குகள் பெற்றோம். இம்முறை மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூட வேண்டும். கம்பஹா மாவட்டம் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் சிறந்த அபிவிருத்தி கண்டுள்ள மாவட்டம். மின்சாரமில்லாத கிராமங்களே அங்கு இல்லை. வேலை வாய்ப்பற்றோர் வீதமும் மிகக் குறைவாகவே அங்குள்ளது.

வரலாற்றில் சகல சந்தர்ப்பங்களிலும் கம்பஹா மாவட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே பின்னிப் பிணைந்துள்ளது. கட்சி கட்டியெழுப்பப்பட்டதும் இங்கு தான். இங்கிருந்தே பெரும் தலைவர்கள் உருவானார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் படுகொலைகளை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு.

இலங்கையில் தொடரும் படுகொலைகளை நிறுத்தக்கோரி சென்னையில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஒருவர் தீக்குளித்தார். கரூரைச் சேர்ந்த ஆ. சிவாநந்தம் (வயது46) என்பவர் வடபழனியில் உள்ள தமிழக தேர்தல் அலுவகத்துக்கு முன்பாக   மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் முத்துக்குமார் முதல் இதுவரை 12 பேர் ஈழத்தமிழர்களுக்காக தீக் குளித்துள்ளனர்.

காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

green-ocean.jpgயாழ்.  அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலை நேற்றிரவு தெரிவித்தார். “கிறீன் ஓஷன்” கப்பல் நாளை காலை காங்கேசன்துறையை வந்தடைந்து மாலை திரும்பப் புறப்பட உள்ளது. எனவே கப்பலில் பயணம் செய்ய பதிவு செய்தவர்களையும் அவசர தேவைக்காக பயணம் செய்ய இருப்பவர்களையும் நாளை முற்பகல் 11 மணிக்கு யாழ். ரயில் நிலையப் பகுதிக்கு பயண ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றம் தொடர்பான சட்ட மசோதா குறித்து கிழக்கு மாகாண சபையில் சர்ச்சை

pillaiyan.jpgநேற்று உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டம் தொடர்பான யோசனை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்ட போது எவ்வித தீர்மானமும் இன்றி எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெற வேண்டும் .இல்லையேல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

நேற்று கிழக்கு மாகாண சபை முதல்வர் ஏ.எச்.எம். பாயிஸ் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இதனை முன் வைத்த போது உறுப்பினர்களிடையே இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக காரசாரமான வாக்குவாதங்களும் விவாதங்களும் சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.

ஆளும் கட்சியைப் பொறுத்த வரை ஒரு தரப்பு இதற்கு ஆதரவாகவும் இன்னுமொரு தரப்பு இதற்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக உத்தேச திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கரிய அதிகாரங்களை பறிக்கின்றது என்றும் .அதே போல சிறுபான்மை மக்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பாக அமையும் என்றும் இதற்கு எதிரான தரப்புகள் தமது கருத்துக்களை முன் வைத்தன. விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும்: அமெரிக்கா

இலங்கையின் முல்லைத்தீவு பிரதேசத்தில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும் அங்கு நிலவும் மோசமான மனிதாபிமான அவலம் குறித்தும் கவலை தெரிவித்து அமெரிக்க நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளிவரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.  உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான அகதி முகாம்களில் சர்வதேச தரத்தில் மனிதாபிமான சூழல் நிலவுவதையும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்படுவதையும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்குள் நுழைவதையும், அகதி முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது