புலிகளிடமிருந்து தப்பி வந்து வவுனிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு அடுத்த மாதம் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார். தமது அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த விசேட அடையாள அட்டைகள் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்