இலங்கையில் தொடரும் படுகொலைகளை நிறுத்தக்கோரி சென்னையில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஒருவர் தீக்குளித்தார். கரூரைச் சேர்ந்த ஆ. சிவாநந்தம் (வயது46) என்பவர் வடபழனியில் உள்ள தமிழக தேர்தல் அலுவகத்துக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் முத்துக்குமார் முதல் இதுவரை 12 பேர் ஈழத்தமிழர்களுக்காக தீக் குளித்துள்ளனர்.