இலங்கையுடன் உறவை துண்டிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங்கை அரசு போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள அவசர தந்தி;

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தப் போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • நாஞ்சில் கி மனோகரன்
    நாஞ்சில் கி மனோகரன்

    தமிழ்நாடு சிவகங்கை தொகுதியில், அறிஞர் அண்ணா காலத்திலேயே எம்.பி.யாக இருந்தவர், தா.கிருஷ்ணன் அவர்கள்(1967-71 – தா.கிருட்டிணன் – திமுக.1971-77 – தா.கிருட்டிணன் – திமுக.), விசுவாசமான கழகத் தொண்டன். இவ்வளவு வயதானவரையே கலைஞரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்(தலித்தியத்தை தூண்டி), ரோட்டில் வைத்து மதுரையில், பட்டபகலில் வெட்டிக் கொன்றார்கள். உண்மையான தொண்டர்களின் நிலை இதுதான் என்கிறபோது, பிரபாகரன் பின்னால் சயனைட் கொண்டு சென்றவர்களின் நிலை??- இவர்களின் பிள்ளைகளைக் கொன்றால் “தமிழினத்திற்கே துரோகம்” என்பார்களே!!. இதே போல், எம்.பி.யாக இருந்த நாஞ்சிலார் என்ற நாஞ்சில் கி.மனோகரன் அவர்களுடன் இருந்த பல ஆண்டுகள் மறக்கமுடியாதவை. 1957-62 – டி.டி. கிருஷ்ணமாச்சாரி – காங்கிரஸ்.1962-67 -நாஞ்சில் கிருஷ்ணன் மனோகரன் – திமுக(தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி).
    …கலைஞர் எப்போதுமே தன் …வழக்கப்படி தன் தொ(–)ண்டையை “ரெடியாக” வைத்திருப்பார்!!!.

    Reply
  • ramesh
    ramesh

    கலைஞர் தற்போது கோமாளி நடிகர் போன்று பேசுவது-ஏன் தேர்தல் பயமா??

    Reply
  • BC
    BC

    இவரை புலி ஆதரவாளர்கள் No.1 தமிழ் துரோகியாக அறிவித்துள்ளார்கள். தான் அப்படியில்லை என்று அவர்களுக்கு காட்டுவதற்காக இப்படி கோமாளிதனமாக கதைக்கிறார்.

    Reply
  • palli
    palli

    ஜயா உங்கள் கோரிக்கையை டெல்லி ஏற்க்காத போது தாங்கள் டெல்லியுடன் நட்ப்பையாவது முறிக்காவிட்டாலும் பரவாயில்லை வளைத்தாவது இருந்தால் நீங்க சொல்லாமலே டெல்லிக்கும் கொழும்புக்கும் விவாகரத்து வந்திருக்குமே. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை மனோகரா வசனத்தை (தங்கள் வசனம்தான்) மனதில் வைத்து கொண்டு டெல்லியை மிரட்டுங்கள்.

    Reply