யாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து இன்று (23.04.2009) தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று தொடக்கம் அமுலுக்கு வரும.; யாழ் ரயில் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மிகவேகமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். என அவர் கூறியுள்ளார்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தொகையான மக்களுக்கு விநியோகிக்கவென ஆயிரக்கணக்கான உலர் உணவுப் பொதிகளையும், சமைத்த உணவுப் பொதிகளையும் விமானப் படை விமானங்கள் எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக விமானப் படைப்பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
விமானப் படையினர் நேற்று முன்தினம் 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளையும், நேற்றைய தினம் காலை ஆறாயிரம் சமைத்த உணவுப் பொதிகளையும் கிளிநொச்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படையினரை நோக்கி பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து, அதனை தடுக்கும் வகையில் புலிகளால் மூன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 238 பொது மக்கள் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவசரமாக அநுராதபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ஆடைத் தொழிற்துறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ளவென ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அந்த கூற்றை முற்றாக நிராகரித்துவிட்டார்.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கேள்வி நேரத்தின் போது முன்னதாக ஒரு கட்டத்தில் பேசிய ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் ஜனாதிபதி லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் மூலம் நாட்டுக்கு பல உதவிகள் கிட்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகப் போகிறதென்றும் எதிர்க்கட்சியினர் கூறினார். எனினும், அப்படியான எதுவும் நடக்கவில்லை’ என்றார்.
இதன் தொடர்ச்சியானதொரு சந்தர்ப்பத்தில் பேசும்போதே, ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கைத்தொழிற்சாலைகளை திறந்த வேகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கைத்தொழிற்சாலைகளை மூடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம;
“எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்கும் இணங்கவில்லை. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஐரோப்பிய ஆணைக்குழுவுடனும் பேசி வருகிறது என்று கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானைகளின் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்து வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீளக் குடியேறிய மக்கள் ஆர்ப்பாட்டம மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் யானைகள் தாக்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 219 குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தெரிவித்தார். அரசாங்கமும் அதிகாரிகளும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லையெனத் தமிழ்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
உலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அரிய தகவல்களை தேடி பெற்றுக் கொள்ள வசதி செய்வதற்காக, பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் யுனெஸ்கோ அமைப்பு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பழமையான புத்தகங்கள் வரைபடங்கள் சினிமா ஒலி வடிவங்கள் புகைப்படங்ள் உள்ளிட்ட தகவல்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடுவதுடன் அவற்றினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விலை மதிப்பற்ற பழங்கால சீன பெர்ஷிய புத்தகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரிய புகைப்படங்களை இங்கு காண முடியும் என இணையத்தள வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூகுள் புக் சேர்ச் மற்றும் ஈரோப்பியானியா போன்றவற்றுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரதான டிஜிட்டல் நூலகத்தின் முகவரி www.wdl.org என்பதாகும். உலகின் பல்வேறு நூலகங்களில் இருந்து இதற்கு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகளின் தகவல் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அராபிக் சீனா ஆங்கிலம் பிரெஞ்சு போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் ஸ்பெனிஷ் ஆகிய ஏழு மொழிகளில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த தளத்தில் வாசிக்க முடியும். பிரேசில் பிரிட்டன் சீனா எகிப்து பிரான்ஸ் ஜப்பான் ரஷ்யா சவுதி அரேபியா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் பில்லிங்டனின் யோசனையில் உருவாக்கப்பட்டது. எதிர்வரும் 2010ம் ஆண்டுக்குள் ஒரு கோடி புத்தகங்களை இந்த இணையத்தளத்துடன் இணைக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கும் படி 60க்கும் மேற்பட்ட நாடுகளிடம் யுனெஸ்கோ வேண்டியுள்ளது.
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று (22) அதிகாலை திடீரெனப் பெய்த கடும் மழையின் காரணமாக தாழ்ந்த பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கின.
அதிகாலை இரண்டு மணியிலிருந்து கடும் இடி, மின்னல் ஆரம்பித்ததுடன் மூன்று மணியிலிருந்து காலை 7.30 மணி வரை கடும்மழை பெய்தது. இதனால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன.
இடி, மின்னல் காரணமாக வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மின் உபகரணங்களும் செயலிழந்துபோயின. அதிகாலை இரண்டு மணிக்கு இடி, மின்னல் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தால் வெகுண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை 7.30 மணி வரை தொடர்ச்சியாக 164.8 மில்லி மீற்றர் மழை பெய்ததாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது. பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் 137.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாகவும் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தாழ்ந்த பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
இதேவேளை, நாடு முழு வதும் மாலை நேரங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இந்தச் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் காலை வேளையில் மழை பெய்யு மென்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.
இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான அவசர கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே., நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இலங்கை பிரச்சனை பற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றியும் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் …..
’’இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து அங்கே உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி தந்திக்கு மேல் தந்தி கொடுத்தும்- கடிதங்கள் எழுதியும் – அறிக்கைகள் கொடுத்தும் கடந்த 3 நாட்களாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படவும், அதற்கு ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திடவும் நாளைய தினம் (23.4.2009) அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கையினை நேற்றிரவு விடுத்ததோடு, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாளேடுகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், திரைப் படத்துறையினருக்கும் நேற்று நான் கொடுத்த அறிக்கையின் நகலை இணைத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
அந்த வேண்டுகோள் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும், அவருடைய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், அவரது பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்திலே நானே கையெழுத்திட்டு கட்சி சார்பின்றி அந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வேலை நிறுத்தம் செய்திடலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இவ்வளவிற்கும் பிறகும் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேலை நிறுத்தம் என்பது கபட நாடகம் என்றும், வரலாறு என்னை மன்னிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
* இலங்கைத் தமிழர்களுக்காக 1956 முதல் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக குரல் கொடுத்து வருகிற என்னை வரலாறு மன்னிக்குமா? என்று கேட்கிற ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப்புலிகளைத் தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?
* ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். அது போல் தான் இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் என்ன குற்றம் என்று கேட்டீரே, உம்மை மாத்திரம் வரலாறு மன்னித்து விடும் என்று மனப்பால் குடிக்கிறீரா?
* பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டு மென்று தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை முன் மொழிந்தீரே, அப்போது உம்மை வரலாறு மன்னித்து விடும் என்று தானே எண்ணிக் கொண்டு செயல்பட்டீர்.
* அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தீரே, உம்மை வரலாறு என்ன வாழ்த்திக் கொண்டா இருக்கின்றது?
* உம்மையும் வைகோவையும் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடாது பெய்த மழையில் விடாது மனித சங்கிலி நடத்தினார்களே, அதை கபட நாடகம் என்று கூறினீரே, அந்த எட்டப்ப துரோகத்தை எப்படி அம்மா வரலாறு மன்னிக்கப் போகிறது?
* தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவரும் இலங்கைப் பிரச்சினைக்காக டெல்லி சென்று போர் நிறுத்தக் கோரிக்கை வைத்த போது, அவர்களோடு போக மறுத்தீரே, அதற்காக உம்மை வரலாறு மன்னிக்கப் போகிறதா?
* எம்.ஜி.ஆருக்கு நீர் செய்த துரோகங்களை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக நீர் அடுக்கடுக்காக செய்து வரும் துரோகங்களை எந்தக் காலத்திலும் வரலாறு மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்க என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இலட்சம் பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றையதினம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 21,000 பேர் வந்திருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி கடல் மற்றும் தரை மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் 3,000ற்கும் அதிகமானவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 4ஆம் திகதிவரை மூடிவைத்திருப்பதற்கு யாழ் வலயக் கல்விப் பணிமனை கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து தெரியவருவதாவது:-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.