பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இட்சம் பேர் வெளியேற்றம்: இராணுவம்

puthu.jpg புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இலட்சம் பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றையதினம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 21,000 பேர் வந்திருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி கடல் மற்றும் தரை மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் 3,000ற்கும் அதிகமானவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 4ஆம் திகதிவரை மூடிவைத்திருப்பதற்கு யாழ் வலயக் கல்விப் பணிமனை கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளின் பிடியில் எஞ்சியிருக்கும் மக்களை புலிகள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்கும் காட்சி.

    http://www.youtube.com/watch?v=eBEhhWspphM&eurl=http%3A%2F%2Flive%

    Reply
  • மாயா
    மாயா

    இங்கே சிறீலங்கா நிலவரம்
    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1

    Reply
  • மாயா
    மாயா

    இன்று
    http://www.youtube.com/user/lkwebnews

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர்களின் தனிநாட்டுக் கொள்கையைப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றம் படையினரின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின் ஒன்றன்பின் ஒன்றாக உடைந்துவிட்டது.

    புலிகளுக்கு ஆதரவாக மக்கள் எந்த இடத்திலும் அணிதிரளவில்லை. புது மாத்தளனில் உள்ளவர்கள் புலிகளுக்கு ஆதரவாகவே தங்கியிருக்கின்றார்கள் என்ற பொய்மையும் கடந்த திங்கட்கிழமை உடைந்துவிட்டது. இப்போது தமிழ் மக்களின் அரசியலில் புதிய சிந்தனையும் புதிய தலைமையும் தேவை.–அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்–

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    சமாதான காலத்தில் குடும்பத்தினரைப் பிணை வைத்துப் பாஸ் கொடுத்து வன்னி மக்களை மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு தடை விதித்தது யார்? அந்த மக்களை அன்று வெளியேற விட்டிருந்தால். தண்ணீர் வற்றிய மீன்கள் போல இன்று புலி கருவாடாயிருக்கும்— அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply
  • ஜீவகன், கனடா
    ஜீவகன், கனடா

    சமாதான காலத்தில் எங்க குடும்ப உறுப்பினரை பிணை வைத்து பாஸ் எடுக்கும் நடைமுறை இருந்தது? அகிலன் துரைராஜா புலிக்காச்சலில பேய்த்தனமாக உளறாதயுங்கோ.. சரி பிழயலை கதையுங்கோ தவறில்லை, அதையும் சரியா கதையுங்கோ நல்லுரில இருந்துகொண்டே நாட்டு நடப்பு தெரியாம இருக்கிறீயள் போல..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜீவகன்; நீங்கள் தான் உளறுகின்றீர்கள். சமாதான காலத்திலும் யாழிலிருந்தோ ஏனைய பகுதிகளிலிருந்தோ கொழுப்பிற்கு அலுவலாக வருவதென்றாலும் சம்பந்தப்பட்டவர் திரும்பி வருவாரென்பதற்கு உறுதி செய்ய வேண்டும, அதற்காகவே ஒருவரைப் பிணை வைத்துவிட்டு வர வேண்டிய நிலைமை. அதுபோல் திருமணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டிய பெண்கள் அதற்காக பெருந்தொகை பணத்தை கப்பமாக அளந்து விட்டே வெளியேற வேண்டும். மாவீரர் குடும்பங்களுக்கு மாத்திரமே இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது.

    Reply
  • BC
    BC

    அகிலன் துரைராஜா சென்ன மாதிரி தான் சமாதான காலத்தில் குடும்பத்தினரைப் பிணை வைத்து புலி குடும்ப உறுப்பினரை அனுமதித்ததை நானும் அறிந்தேன்.

    Reply
  • ஜீவகன், கனடா
    ஜீவகன், கனடா

    ஒருபோதும் இல்லை பார்த்திபன், சமாதான காலத்தில் பளை முதல் பலாலி வரை தீவகம் உள்ளிட்ட முழு யாழ்ப்பாணமும் பூரண இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் அலுவலகங்கள் மட்டுமே இருந்தன. எந்த நடைமுறையும் நேரடியாக மக்களை கட்டுப்படுத்தவில்லை. வரிகள், கப்பங்கள், பிக்கல் பிடுங்கல் எல்லாம் திரை மறைவிலேயே பொங்குதமிழ், துயிலும் இல்ல புனருத்தானம் என்ற போர்வையில் பேரவையாலும், புலிகளாலும் வசூலிக்கப்பட்டது.

    முகமாலை முதல் புளியங்குளம் வரைக்குமான வன்னிப்பெரு நிலப்பரப்பு புலிகள் வசம் இருந்தது. இந்தப் பகுதியிலும் சமாதான காலத்தில் அதாவது A9 நெடுஞ்சாலை மூடப்படும் வரை, வெள்ளை பாஸ் மற்றும் சிவப்பு பாஸ் முதலிய கடுமையான பாஸ் நடைமுறைகள் இருந்தன. ஆனால் பிணை என்று சொல்லப்படுகின்ற குடும்ப உறுப்பினர்களின் கழுத்தை குடுக்கும் முறை இருக்கவில்லை. தங்களிடம் உள்ள பாஸை காட்டி வன்னி மக்களும் பயணம் செய்யக்கூடிய நிலைமை இருந்தது. இந்த காலப்பகுதியில் முன்னர் வன்னிக்கு இடம்பெயர்ந்த நிறையச் சனம் திரும்பவும் யாழ்ப்பாணம் வந்ததும் உண்மை. A9 பாதை மூடப்பட்ட பின்னரே மீண்டும் வயதுக் கட்டுப்பாடு முறையும் பிணை நடைமுறையும் வந்தது.
    இது மிக வெளிப்படையானதும் அங்கிருப்பவர்கள், இருந்தவர்கள் அனைவரும் அறிந்ததுமாகும் . கட்டுரைக்கும் கருத்துக்களுக்கும் இவை சம்பந்தப்படாத போதும் இது எவருக்கும் வக்காலத்து வாங்காத நிஜம். இதைதான் முதலில் பதிவு இட்டவருக்கும் குறிப்பிட்டேன். இதையும் நீங்கள் மறுப்பீர்கள் ஆனால் உங்களின் அறியாமைக்கு பரிதாபப்படுவதை விட என்னத்த சொல்ல….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜீவகன்; சமாதான காலத்தில் நான் இருமுறை தாயகம் சென்று வந்தவன். பகிரங்கமாக அறவிட்ட வரியையே மறைமுகமாக அறவிட்டதென்று வாதாடும் உங்களுக்கு அறியாமையா?? அல்லது எனக்கு அறியாமையா?? யாழ்ப்பாணத்திலிருந்த புலிகளின் அரசியல் அலுவலகங்கள் எதற்காக அங்கே இருநந்தன. மக்களுக்கு சேவையாற்றவா?? முழுக்க முழுக்க பணம் பறிப்பதற்காகவே இயங்கின. அதுவும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்தந்த நாட்டிலுள்ள புலிஆதரவாளர்களிடம் தொடர்ந்து கப்பம் கட்டியதற்கான ஒரு இலக்கத்தை காட்ட வேண்டும். அப்படிக் கப்பம் செலுத்தாதவர்கள் வந்திருந்தால் எப்போதிருந்து கப்பம் செலுத்தவில்லையோ அப்போதிருந்து கணக்குப் பார்த்து மொத்தமாக 6 இலட்சம் 10 இலட்சம் என்று அறவிட்டதே எனக்கு நன்கு தெரியும். அதற்காக அவர்களின் கடவுச்சீட்டைப் பறித்து வைத்துக் கொண்டு ஒருவரைப் பிணை வைக்குமாறு கேட்கப்பட்டதும் எனக்குத் தெரியும். எனக்கு அருகாமையிலேயே பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். அதுவும் கொழும்பு செல்வதாக பொய் சொல்லி திருமணத்திற்காக வெளிநாடு வந்த ஒரு பெண் திரும்பிப் போகாததால் அவரது தந்தையைப் பணையக் கைதியாக கொண்டு சென்று விட்டார்கள். பின்பு பல இலட்சம் கப்பம் கட்டியே தந்தையார் மீட்கபப்பட்டார். உங்களுக்குத் தெரியவில்லையென்றால் அருகிலுள்ள விபரம் தெரிந்தவர்களரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    Reply