2024

2024

ஈஸ்டர் படுகொலையின் பின் நின்றவர்களை அனுர அரசு கண்டுபிடித்து தூக்கிலேற்ற வேண்டும் – பிள்ளையான்

நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.

 

“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.

 

“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.

 

வடக்கில் தனிநாடு தமிழீழம் என முழங்கிவிட்டு – பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு கெஞ்சிய சிறீதரன் எம்.பி.

வடக்கில் தனிநாடு தமிழீழம் என முழங்கிவிட்டு – பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு திரியும் சிறீதரன் எம்.பி.

வைத்தியர் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றம் செல்ல ஆரம்பித்தது முதல் தமிழ் தேசிய அரசியல் பரப்பு மேலும் கிளுகிளுப்பாகியுள்ளது. என்னதான் முன்யோசனை இல்லாமல் பேசுதல், புலம்பெயர் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்தல் என அட்டகாசம் செய்து கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்திற்கு ஊசி அர்ச்சுனா சென்றதன் மூலம் தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் போலித்தேசிய சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது.

முன்னதாக பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண கடிதத்தை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தியிருந்தார் ஊசி அர்ச்சுனா. குறித்த கடிததத்தில் இந்த நாட்டிற்குள் பிரிதொரு நாட்டை உருவாக்க முயற்சிக்க மாட்டோம் என உளப்பூர்வமாக உறுதியளித்து கையெழுத்திடுகிறேன் என்பதாக குறித்த சத்தியப்பிரமாணம் அமைகிறது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கில் தமிழர்கள் முன்னிலையில் தனிநாடு -தனி ஈழம் – தலைவர் வழி என கொக்கரித்து விட்டு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டுக்கு கட்டுப்படுவதாக கையெழுத்திட்டு உறுதியெடுத்துவிட்ட பின்னும்  எங்களை ஏமாற்றுகிறார் என பலரும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் சிறீதரன் எம்.பியின் முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் வைத்தியர் அர்ச்சுனா. மொழிப் புலமை ஏதுமே இல்லாமல் – தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் முகம்கொடுத்துக்கூட பேசத்தயாரில்லாமல் இருப்பதாக சிறீதரன் எம்.பி மீது விசனம் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. கஜேந்திரகுமார் போலவே தனிநாடு – புலிகள்- பிரபாகரன் என பாராளுமன்றத்தில் முழங்கிவிட்டு பாராளுமன்ற அமர்வு முடிய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தொலைபேசி இலக்கத்தை பெறுவதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  மக்கள் நலனுக்காக தொலைபேசி இலக்கம் கேட்கவில்லை. தன் சொந்த தேவைகள் – சலுகைகளுக்காகவே  பிரதமரிடம் தொலைபேசி இலக்கம் பெறுகிறார் சிறீதரன் எம்.பி என அவர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

 

மூன்று தசாப்தங்களின் பின் இராணுவ கெடுபிடி யில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கின் உவர்மலை பாதை !

மூன்று தசாப்தங்களின் பின் இராணுவ கெடுபிடி யில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கின் உவர்மலை பாதை !

 

30 ஆண்டுகளாக தொடர்ந்த யுத்த காலம் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த இராணுவ கெடுபிடிகள் நீடித்திருந்தது. இந் நிலையில் யுத்தத்தின் பின்பாகவும் கூட இராணுவ கெடுபிடிகள் நீடித்து வந்தன. கடந்த கால ராஜபக்ஷ அரசாங்கங்களோ அல்லது தமிழ்தேசியதரப்பு ஆதரவளித்த நல்லாட்சி அரசாங்க காலத்திலோ கூட இராணுவ கெடுபிடிகள் குறைக்கப்படவுமில்லை – இராணுவ முகாம்கள் – சோதனை சாவடிகள் பெரிதாக அகற்றப்பட்டதும் கிடையாது. இந்த நிலையில் தமிழ்தேசிய அரசியல் தரப்பின் ஆதரவின்றி தமிழ்மக்களின் ஆதரவுடனும் பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசு இராணுவ கெடுபிடிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது. வடக்கில் மிக நீண்டகாலமாக காணப்பட்ட ஆணையிறவு சோதனைச்சாவடி நீக்கப்பட்டமை, 34 ஆண்டுகளின் பின் வசாவிளான் – அச்சுவேலி பாதை பாதை திறப்பு , யாழ் கற்கோவளம் தனியார் காணி இராணுவ முகாமை அகற்ற உத்தரவிடப்பட்டமை என தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து அரசு செயற்படுவதாக சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்தார்.  இலங்கை அரசியலில் இருந்து தமிழர்களை தூரப்படுத்திய அத்தனை விடயங்களையும் ,  தமிழ்தேசியவாதம் பேசி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் எதுவித கோரிக்கைகளுமின்றி அரசு செய்து வருகிறது. இந்த இராணுவ கெடுபிடிகளை அகற்றும் செயற்பாட்டின் இன்னும் ஒரு கட்டமாக திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது. இவையே தற்போது அகற்றப்பட்டுள்ளன.

பாலஸ்தீன மக்களுடன் எப்போதும் இலங்கை நிற்கும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்குஆசியாவிலும் ஒருவருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சகித்துக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்ககூடாது என்பதை பாலஸ்தீனியர்களிற்கான ஐநா தினம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச சட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வை காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும்,சர்வதேச அளவில் அதன் தாக்கமும்,பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடிய அரசியலமைப்பு விரைவில் – டில்வின் சில்வா

ரில்வின் சில்வா மாகாண சபை முறையை நீக்கப்போவதாக அறிவித்ததாக மேற்கோள் காட்டி போலித் தமிழ்தேசியம் பேசி மக்களை சுரண்டும் பத்திரிகைகள் மீள ஓர் இனவாத தீயை வளர்க்க ஆரம்பித்துள்ளன. உண்மையிலேயே அவர் கூறியதன் உள்ளடக்கம் முழுவதையுமே தேடியறியாமல் வழமை போல் குறுந்தேசியவாதிகள் சத்தமிட ஆரம்பித்துள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில் பேசிய டில்வின் சில்வா,

 

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்.

 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகிறது.

 

எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுகின்றது.

 

இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.

 

நடைமுறையில் உள்ள பழைமைவாய்ந்த அரசியலமைப்பிற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.

 

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கம். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முழுமையான தகவல்களையும் அறிந்து கொள்ளக்கூட தயாரில்லாத குறுந்தேசியவாதிகள் எப்போதும் இனவாதம் இருந்தால் மட்டுமே தாம் அதிகாரத்தில் இருக்க முடியும் என்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இனவாதத்தை கிளப்பி விட ஆரம்பித்துள்ளனர்.

வலுவடையும் வடக்கு மீனவர்கள் பிரச்சினை -இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கிறார் கடற்தொழில் அமைச்சர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவிடம் பேசியதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சமும் முன்னெடுத்தது இல்லை. இந்தியா தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் –  இலங்கை தமிழருக்கு இந்தியா தான் உற்ற நண்பன் என கூறி இந்தியாவின் காலில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் கடந்த காலங்களில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்த தமிழ்தேசிய தரப்பு எந்த ஒத்துழைப்பையும் வழங்கியது கிடையாது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ்தேசிய தலைமைகள் ஒத்துழைப்பு வழக்கம்போவதில்லை என்பது கண்கூடு. இதேவேளை அமைச்சர் சந்திரசேகர் , அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில் இந்தியத்தூதுவருடனான இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். – பாதுகாப்பு அமைச்சு !

வடக்கு, கிழக்கில், உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.துய்யகொந்த  தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி, ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள், இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள்.

ஆனால், தென்னிலங்கையில் அந்த விடயங்களை அரசியல் சுய இலாபத்துக்காக சிலர் பயன்படுத்த முனைகின்றனர் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமது அரசியல் மீள்பிரவேசத்துக்காக வழக்கம்போலவே இனவாத்தினை திணிக்கப் பார்க்கின்றார்கள்.

அனால் அவர்களின் நோக்கங்களை மக்கள் அறிவார்கள்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்கின்றார்கள். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதம், மதவாதம் தோல்வி கண்டுவிட்டது. மீண்டும் அதற்கு இடமளிப்பதன் ஊடாக நாட்டுக்கு எதிர்மறையான நிலைமைகளே ஏற்படும்.

ஆகவே மக்கள் அத்தகையவர்களுக்கு இடமளிக்காது என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவிதமான நடவக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தினை ஆதரித்து அதனை முன்னிலைப்படுத்துபவர்கள் சம்பந்தமாகவும் நாம் தீவிரமான கவனம் செலுத்தியிருந்தோம்.

அதுதொடர்பில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.- என்றார்.

குடை பிடிப்பதற்காக அஸிஸ்டென்ட்களை வைத்திருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

குடை பிடிக்கும் அரசியல்: யார் யாருக்குக் குடை பிடிப்பதென்பதே பெரும் அரசியலாகியுள்ளது. தமிழ் தேசியவாத அரசியல் வாதிகள் இன்னமும் தங்களை எஜமான்களாகவும் பண்ணையார்களாகவும் ஏனையவர்களை அடிமைகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் தான் எண்ணுகிறார்கள் என்பது இந்தக் குடை அரசியலில் வெளிப்பட்டு நிற்கின்றது. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு ஒருவர் குடை பிடிக்க அவர் வெள்ள அனர்த்த நிலைமையைப் பார்வையிடுகிறார். அதே போல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் ஒருவர் குடை பிடிக்க அவர் நிலைமையைப் பார்வையிடுகின்ற நிலை தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இவர்களுக்கு தங்களுடைய குடையைத் தாங்கள் பிடிக்க முடியாமற் போனது. வல்வெட்டித்துறை மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களை கிட்டக்கூட எடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தங்களைத் தள்ளி நிற்கச் சொல்வார்கள் என்கின்றனர்.

மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை தேசிய மக்கள் சக்தி குறைக்கின்றது. அவர்கள் மக்களோடு களத்தில் நிற்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் மோசடியற்ற நிர்வாகத்தை அமைக்கிறோம் என்று சொன்னதோடு அதனைச் செயலிலும் காட்டுகிறார்கள். ஆடம்பரம் இல்லாமல் மக்களோடு மக்களாகக் கலக்கின்றனர். இதனைச் செயற்கையாகச் செய்ய முடியாது. தன்னியல்பாக வரவேண்டும். அதனால் தான் கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய குடையைத் தானே பிடிக்கிறார். தமிழ் தலைவர்களுக்கு குடை பிடிக்க ஒரு கூலி தேவைப்படுகின்றது.

பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த நபர் கைது !

பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நான் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் – பிரதியமைச்சர் முனீர் முளப்பர்

தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உறுதியளித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதியமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்திக்கும் தமக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கம்பஹா, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (30.11.2024) மாலை மக்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே முளப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கோடு தம் பிரதேசம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக செயற்படும் போக்கு தான் கடந்த 75 வருட கால இலங்கை அரசியலின் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அரசியலின் வாடை படாத புதிய அங்கத்தினர்கள் 146 பேர் பாராளுமன்றத்தில்  முதன்முதலாக அமர்கிறார்கள். தமக்கு வாக்களித்த தம்மின மக்கள் என்ற கருத்தில் இருந்து விலகி இன – மத பேதமின்றி நாட்டு முன்னேற்றம் என்ற தொனியில் அவர்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையானது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 

அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்ற முனீர் முளப்பர் நான் இனவாதியாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளமையானது பலருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று நாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னால் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

இன நல்லுறவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது நாடாளுமன்ற உறுப்புரிமை மூலம் நீதமான முறையில் நேர்மையுடன் நடந்து கொள்வதன் ஊடாகவே இனிவரும் காலங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து என்னைப் போன்று முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்று கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள மாட்டேன் எனவும் பிரதியமைச்சர் முனீர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கோடு தம் பிரதேசம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக செயற்படும் போக்கு தான் கடந்த 75 வருட கால இலங்கை அரசியலின் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அரசியலின் வாடை படாத புதிய அங்கத்தினர்கள் 146 பேர் பாராளுமன்றத்தில்  முதன்முதலாக அமர்கிறார்கள். தமக்கு வாக்களித்த தம்மின மக்கள் என்ற கருத்தில் இருந்து விலகி இன – மத பேதமின்றி நாட்டு முன்னேற்றம் என்ற தொனியில் அவர்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையானது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்ற முனீர் முளப்பர் நான் இனவாதியாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளமையானது பலருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று நாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னால் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.