தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உறுதியளித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதியமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்திக்கும் தமக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கம்பஹா, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (30.11.2024) மாலை மக்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே முளப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கோடு தம் பிரதேசம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக செயற்படும் போக்கு தான் கடந்த 75 வருட கால இலங்கை அரசியலின் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அரசியலின் வாடை படாத புதிய அங்கத்தினர்கள் 146 பேர் பாராளுமன்றத்தில் முதன்முதலாக அமர்கிறார்கள். தமக்கு வாக்களித்த தம்மின மக்கள் என்ற கருத்தில் இருந்து விலகி இன – மத பேதமின்றி நாட்டு முன்னேற்றம் என்ற தொனியில் அவர்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையானது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்ற முனீர் முளப்பர் நான் இனவாதியாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளமையானது பலருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்க அரசியல் போக்கின் காரணமாக பெரும்பான்மை மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று நாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இதன் மூலம் பெரும்பான்மை மக்கள் எந்தளவுக்கு இனவேறுபாடுகளுக்கப்பால் கம்பஹாவில் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனவே, என்னை ரவுப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியூத்தீன் போலவோ, முன்னால் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு பேசிய அவர்,
இன நல்லுறவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது நாடாளுமன்ற உறுப்புரிமை மூலம் நீதமான முறையில் நேர்மையுடன் நடந்து கொள்வதன் ஊடாகவே இனிவரும் காலங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து என்னைப் போன்று முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்று கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள மாட்டேன் எனவும் பிரதியமைச்சர் முனீர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.