08

08

சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் பொதுத்தேர்தல் – ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி !

பங்களாதேஷில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.

300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில்  223 ஆசனங்களை ஷேக்  ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

40 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர் என உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இதனை விட குறைவு என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2018 பொதுத்தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனையும் இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ !

இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும் இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ  இஸ்ரேலின் தாக்குதலில்  பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார்.

Rania on X: "Journalist Mustafa Thurayya was executed alongside Hamza Dahdouh. https://t.co/NQAjdb2pvJ" / X

காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27)  முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும்  கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சினால் இடம்பெயர்ந்த மக்களை பேட்டி காண்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளையே ஹம்சாவின்  வாகனம் தாக்கப்பட்டுள்ளது.

தனது மகனின் உடலை அடக்கம்செய்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள வயல்டாவ்டோ இன்று காசாவில் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நாளாந்தம் விடைபெறுபவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தில் மற்றுமொருவரை இழந்த துயரத்தை அனுபவிக்கின்ற போதிலும்  காசாவில்  என்ன நடக்கின்றது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தும் பாதையை தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்சாவே எனக்கு அனைத்துமாகயிருந்தான் எனதுமூத்த மகன் இதுஇழப்பின் கண்ணீர் பிரிதலின் துயரத்தின் கண்ணீர் என  அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார் –

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டு 15 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

லசந்த 15 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார் என்றும், இன்றுவரை ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

“அரசாங்க அதிகாரத்தை திணிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களை மௌனமாக்க முயல்வது, கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கலாம்” என சிரேஷ்ட வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“ஜனநாயகத்தின் தூண்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இதுபோன்ற கொடூரமான கொலைகள் ஒரு சமூகத்தில் நடைபெறாது. ஆசிரியர் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருந்தது. இதன் மூலம் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வாயடைத்து விடலாம் என அதிகாரிகள் நினைத்தனர்,” என்றார்.

கொலை நடந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை பெற்று, நீதியைக் காப்பாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் பெரிதும் தவறவிடப்படுவார்கள் என சட்டத்தரணி நவரத்ன தெரிவித்தார்.

location-tracking technology உருவாக்கம் – பிரித்தானிய அரசரின் மதிப்பளிக்கும் பட்டியலில் இலங்கை தமிழர் !

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சபேசன் சிதம்பரநாதன், ஒரு பொருள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியதற்காக (location-tracking technology), பிரித்தானிய அரசரின் புதுவருட மதிப்பளிக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவருடைய லொகேஷன் ட்ராக்கிங் தொழில் நுட்பத்தை, பிரித்தானிய தேசிய மருத்துவ சேவை, மருத்துவமனைகள், விமானம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போன்றோர் பயன்படுத்துகின்றார்கள்.

images/content-image/2023/12/1704366353.jpgஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் சபேசன் சிதம்பரநாதன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு, அறிவியலை முன்னேற்றியது, பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை முன்னேற்ற பாடுபட்டதற்காக இவ்வாறு சேர் என்ற பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சபேசன் சிதம்பரநாதன் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழக கல்வியை ஆரம்பித்து, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக, கார்பஸ் சிகிரிஸ்டி கல்லூரியில் ஆராய்ச்சி கல்வியை முடித்தார். (PhD at Corpus Christi College, Cambridge)

இந்த பட்டம் பெறுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான் இந்த நாட்டுக்கு சிறுவனாக கல்வி கற்பதற்கு வந்தேன், தனிப்பட்ட ரீதியில் எனக்கு கனவு நினைவானதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

நோர்வேயில் பல்வைத்தியராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்துப்பெண் சுட்டுக்கொலை – காதலன் கைது !

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.