October

October

ஐசிசி விருதுகள் 2009

051009icc.jpgகிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது.

விருதுக்கான வீரர்கள் பட்டியலை கிளைவ் லாய்ட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது. அதில் அனில் கும்ளே, பாப் டெய்லர், முடாசர் நாஸர், ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 2008 ஆகஸ்ட் 13ம் திகதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி வரை நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் டோணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பட்டியல்களிலும் தலா மூன்று இந்தியர்கள் , கம்பீரும், ஒரு நாள் அணியில் ஷேவாக், யுவராஜூம் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த டுவென்டி-20 விருது இலங்கையின் திலகரத்னே தில்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அம்பயராக பாகிஸ்தானின் அலீம்தார் அறிவிக்கப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் கிளைர் டெய்லர் பெற்று கொண்டார்.

051009icc.jpg

ஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! – ‘அனைத்துலக ஆசிரியர் தினம்” – புன்னியாமீன்

061009happy-teachers-day.jpg”குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்” என்பர்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள்,  இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

tea-day.jpgஇன்று அக்டோபர் மாதம் 6ஆந் திகதி – அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை ‘உலக ஆசிரியர்கள் தினமா’க கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும்,  அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ஆந் திகதியை ஆசிரியர் நாளாக கொண்டாடுகின்றன. இந்தியா செப்டம்பர் 5ஆந் திகதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் திகதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றது. பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும்கூட,  இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.  மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன?  இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான்,  இருக்கிறார்,  இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்….  இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக் காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் செய்திகளை சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம்பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இவர்களை துஸ்பிரயோகம் செய்துவிட முடியாது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர்களை இனங்கண்டு சட்டரீதியாக கடுமையாக தண்டனைகளை வழங்கி ஆசிரிய தொழிலின் மாண்பினைப் பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.

ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.

ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.

நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் “ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாக” ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!

காலி பகுதிக்கு 450 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு!

061009gall_ground.pngகாலி தடல்ல பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட நவீன விளையாட்டரங்குக் கட்டிடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக இந்தப் பகுதிக்கு ஒரு குறைபாடாக நிலவி வந்த இந்தக் கட்டடத் தொகுதி 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பிரதான விளையாட்டரங்கு 400 மீட்டர் ஓட்டப் பாதையைக் கொண்டதாகும். மேலும்  இந்தக் கட்டிடத் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு, டெனிஸ், வலைபந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல்கள், வாகன தரிப்பிடம், தங்குமிட வசதி, நிருவாகப் பணிமனை  போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் நிர்மானப்பணிகளை மூன்று வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்குள் கமரா, தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

srilanka-voting.jpgவாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா, புகைப்பட கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை எடுத்துச் செல்வதும் பாவிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா மற்றும் புகைப்படக் கமரா என்பனவற்றைப் பயன்படுத்தி படம் எடுப்பதற்கும் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் ஆயுதங்களுடன் எவரும் வாக்கு சாவடிகளுக்குள் பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலையொட்டியே தேர்தல் ஆணையாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார். இதேநேரம் வாக்காளர்கள், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள், அபேட்சகர்கள், கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ. வி. அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொலிஸார், தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருப்போர் போன்றோரைத் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் போதிய திறன் பெற்றுவிட்டது – ஐ.நா. தகவல்

iranflagss.jpgஅணு குண்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈரான் போதியத் திறன் பெற்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுண்டு கண்காணிப்புப் பிரிவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் உதவி செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை ஈரான் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, தற்போது தனது தேவைக்கு ஏற்ப அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தகவல்களை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் மூலம் அணுகுண்டு வடிவமைப்பு தொழில்நுட்பங்களை ஈரான் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான இயந்திரங்களையும் அவர் ஈரானுக்கு விற்பனை செய்துள்ளதாகப் பல்வேறு உளவுத்துறை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட தகவல்களை ஈரான் சென்றுவந்த ரஷிய அணு ஆயுத விஞ்ஞானியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே அணுகுண்டு தயாரிப்புத் தொடர்பாக ஈரான் போதுமான திறனைப் பெற்றுவிட்டதாகவும், தாற்காலிகமாக ராணுவ தேவைக்கு மட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,  அணுகுண்டு தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை எனவும் அங்கிருந்து கிடைத்த உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் 2003-ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறமையைப் பெற்றுவிட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாயின.

ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா,  பிரிட்டன்,,பிரான்ஸ்,  ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிவருகின்றன. 

தேசியப் பாடசாலை ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க நிதி

தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்கவென 170 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்நிதி மாகாண கல்வி திணைக்களங்களுக்கு கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கும் சம்பள நிலுவையை வழங்குவதற்கு தேவையான பணம் வெகுவிரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு நிதி ஆணைக் குழுவிடம் கல்வி அமைச்சு கேட்டுள்ளது. அந்நிதி கிடைக்கப் பெற்றதும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை மாகாண சபைகள் ஊடாக வழங்கவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.

சாம்பியன் கிண்ணம் அவுஸ்திரேலியாவுக்கு

021009untitled.bmpசாம்பி யன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணியும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை வெற்றிகொண்ட நியுசிலாந்து அணியும் இன்று நடைபெறும் ஐ.ஸி.ஸி. சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

051009aus.bmpஇன்று அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மிகவும் விருவிருப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவதானிக்கும் கிரிக்கட் விமர்சகர்கள் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென தெரிவிக்கின்றனர். ஆனால், கிரிக்கட் ஆட்டத்தில் வெற்றி தோல்வியை ஹேஸ்யத்தின் மூலம் தெரிவிக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் காலநிலை மைதான நிலை நாணய சுழற்சியில் வெற்றி தோல்வி ஆகியனவே வெற்றியை தீர்மானிப்பதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

New Zealand won the toss and elected to bat

270909n-s.bmpICC Champions Trophy – Final
ODI no. 2907 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion (neutral venue)
5 October 2009 – day/night (50-over match)

Umpires Aleem Dar (Pakistan) and IJ Gould (England)
TV umpire Asad Rauf (Pakistan)
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire BF Bowden (New Zealand)

New Zealand 200/9 (50.0 ov)

 New Zealand innings (50 overs maximum)
 BB McCullum*†  c †Paine b Siddle  0 
 AJ Redmond  st †Paine b Hauritz  26 
 MJ Guptill  c & b Hauritz  40 
 LRPL Taylor  c Hussey b Johnson  6
 GD Elliott  lbw b Lee  9
 NT Broom  run out (Hussey/Watson)  37 
 JEC Franklin  b Lee  33 
 KD Mills  run out (Ponting)  12 
 IG Butler  lbw b Hauritz  6 
 JS Patel  not out  16 
 SE Bond  not out  3 
 Extras (b 1, lb 2, w 9) 12     
      
 Total (9 wickets; 50 overs) 200 (4.00 runs per over)
Fall of wickets1-5 (McCullum, 3.2 ov), 2-66 (Redmond, 18.3 ov), 3-77 (Guptill, 22.2 ov), 4-81 (Taylor, 23.1 ov), 5-94 (Elliott, 26.4 ov), 6-159 (Broom, 40.5 ov), 7-166 (Franklin, 41.6 ov), 8-174 (Butler, 43.4 ov), 9-187 (Mills, 46.4 ov) 
        
 Bowling
 B Lee 10 1 45 2
 PM Siddle 10 1 30 1
 MG Johnson 10 1 35 1
 SR Watson 10 0 50 0  
 NM Hauritz 10 0 37 3
 
Australia innings (target: 201 runs from 50 overs)
 SR Watson  not out  105 
 TD Paine†  c Taylor b Bond  1 
 RT Ponting*  lbw b Mills  1
 CL White  b Mills  62 
 MEK Hussey  c Patel b Mills  11 
 JR Hopes  not out  22  
 Extras (lb 3, w 1) 4     
      
 Total (4 wickets; 45.2 overs; 203 mins) 206 (4.54 runs per over)
Did not bat CJ Ferguson, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle 
Fall of wickets1-2 (Paine, 1.2 ov), 2-6 (Ponting, 2.2 ov), 3-134 (White, 34.5 ov), 4-156 (Hussey, 38.3 ov) 
        
 Bowling
 KD Mills 10 2 27 3
 SE Bond 10 2 34 1 
 IG Butler 9 0 50 0  
 JEC Franklin 9 0 42 0
 JS Patel 6.2 0 44 0  

Player of the match SR Watson (Australia)
Player of the series RT Ponting (Australia)

காற்று, மழையினால் நாட்டின் சில பகுதிகளில் கடும் சேதம் – நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அரசு பணிப்பு

021009monsoon-rains.jpgநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்டீன் நேற்று தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகள் தொடர்பாக மதிப்பீடு செய்து துரிதமாக கையளிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். கடும்காற்று காரணமாக புத்தளம் நகரமே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் 442 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை வெள்ளம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர கம்பஹா, இரத்திபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்று மழை காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட புத்தளம் பகுதிகளை நேற்று (4) நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சின் செயலாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை மரம் வீழ்ந்ததால் கொல்லப்பட்ட காலியைச் சேர்ந்த ஐயவரினதும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் கடைகள் உட்பட 442 வீடுகள் சேதமடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் கிழக்கில் 218 வீடுகளும், மரைக்கார் வீதியில் 53 வீடுகளும் பழைய ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் 41 வீடுகளும் பெரிய குடியிருப்பு வீதியில் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் பிரதேச செயலாளர் கூறினார்.

கண்டியில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள், மரங்கள் விழுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக கண்டி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள், மாட்டுப் பட்டிகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சீரற்ற மழை காரணமாக மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழையுடன் கூடிய காற்றின் காரணமாக தெல் தோட்டை பிரதேசத்தில் 24 வீடுகளும் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் மூன்று லயன்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதனால் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தெல்தோட்டை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் பல சரிந்து வீழ்ந்துள்ளன.

பல மரங்கள் மின்சார கம்பங்களில் வீழ்ந்துள்ளதால் மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு துரிதமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக கலவான தமிழ் வித்தியாலய கட்டடத்தின் மீது மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்ததில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது.

379 குடும்பங்களை வவுனியாவில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட்

badi000000.jpgவவுனியா மாவட்டம் சாளம்பைக் குளத்தில் 379 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சாளம்பைக் குளத்திலிருந்து கடந்த 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இக்கிரிகொல்லாவை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர்.

இவர்களுள் முதற்கட்டமாக 21 குடும்பங்கள் அண்மையில் சாளம்பைக் குளத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இக்கிரிகொல்லாவையில் தங்கியிருக்கும் ஏனைய 379 குடும்பங்களையும் அடுத்த மாதத்திற்கு முன்னதாக அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துவதே அமைச்சரின் விருப்பமாகும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை இக்கிரிகொல்லாவையில் தற்போது இடம்பெயர்ந்து வசித்து வரும் மக்கள் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதல் தடவையாக தமது சொந்த இடமான சாளம்பைக்குளத்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின்போது சாளம்பைக்குளத்திலிருக்கும் 10 குடிதண்ணீர் கிணறுகளையும் சுத்திகரிக்குமாறும் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரிசாட் மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தும் நாடுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்குமா? – ஜனாதிபதி கேள்வி

290909mahinda.jpgஇலங் கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிராகப் பாலியல் குற்றம் சுமத்தும் நாடுகள் அக்குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கேள்வி எழுப்பினார். எமது பாதுகாப்பு படையினர் ஒருபோதும் பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அல்லர்.  இது உறுதியான விடயம். அதனால் இக்குற்றச்சாட்டைச் சுமத்தும் நாடுகள் அதனை விபரமான ஆதாரங்களுடன் வெளியிடவேண்டும் என்று சவால்விடுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறை நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி;  எமது படையினர் பாலியல் மோசடியில் ஈடுபடவில்லையெனவும் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் படையினர் மீது குற்றஞ் சுமத்த பொருத்தமற்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நம் நாட்டைப் பற்றிய தவறான கூற்றுக்களை சர்வதேச நாடுகள் வெளியிடும் இவ்வேளையில் தென் மாகாண மக்கள் தம் வாக்குப் பலத்தின் மூலம் இதற்குப் பதிலலிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். முப்பது வருடகால பயங்கரவாதம் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது.  சகல மக்களினதும் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதன் விளைவுகளை எவரும் மறந்து விடக்கூடாது. நாம் குறுகிய இரண்டரை வருடகாலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளோம்.

கடந்த காலங்களை மறந்தவர்களே இந்த அமைதிச் சூழ்நிலைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அநாவசியமான பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர். மக்கள் இவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. படையினரினால் எவ்வித பாலியல் மோசடியும் நடத்தப்படவில்லை. எமது படையினர் மனிதாபிமானமாகவே சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வந்துள்ளனர்.

தமது உயிரை பணயம் வைத்து நாட்டைப் பாதுகாத்த படைவீரர்கள் பெண்களை பாலியல் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டை இன்று சில சக்திகள் முன்வைத்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கத்துடனும் படையினருடனும் எமது நாட்டு மக்கள் உள்ளனர் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை யுண்டு. நாடு முழுவதிலும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. மின்சாரம், கல்வி, சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

கிழக்கிலும் தெற்கிலும் அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் வலுப்படுத்த தென் மாகாண மக்கள் இத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்து தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும். வெற்றிலைக்கு வாக்களிக்கும் அதேவேளை மூன்று விருப்பு வாக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.