கிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது.
விருதுக்கான வீரர்கள் பட்டியலை கிளைவ் லாய்ட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது. அதில் அனில் கும்ளே, பாப் டெய்லர், முடாசர் நாஸர், ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 2008 ஆகஸ்ட் 13ம் திகதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி வரை நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் டோணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பட்டியல்களிலும் தலா மூன்று இந்தியர்கள் , கம்பீரும், ஒரு நாள் அணியில் ஷேவாக், யுவராஜூம் இடம்பிடித்துள்ளனர்.
சிறந்த டுவென்டி-20 விருது இலங்கையின் திலகரத்னே தில்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அம்பயராக பாகிஸ்தானின் அலீம்தார் அறிவிக்கப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் கிளைர் டெய்லர் பெற்று கொண்டார்.
