May

May

ஐ.நா.மனிதாபிமானக் குழுவை நிராகரித்ததை கொழும்பு மீள்பரிசீலனை செய்வது அவசியம் – அமெரிக்கா வலியுறுத்தல்

usa-flag.jpgஇலங்கைப் படைகளால் தொடர்ந்து கடுமையாக ஷெல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பதாகவும் நேற்றுமுன்தினம் வியாழக் கிழமை தெரிவித்துள்ள அமெரிக்கா, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் எனவும் இந்தப் பிரச்சினையை முழுமையான கவனமெடுத்து கையாளுமாறும் ஐ.நா.பாதுகாப்புச்சபையைக் கேட்டிருக்கிறது.

இரு தரப்பினருமே பொறுப்பாளிகள். இந்த மோசமடைந்து செல்லும் நெருக்கடியில் இந்த அறையிலுள்ள எமக்கும் பொறுப்புகள் உண்டு என்று ஐ.நா.பாதுகாப்புச்சபையில் உரையாற்றுகையில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு இடம்பெறும் மோதலினால் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்களை மோசமான துன்பநிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை இருதரப்பும் மீறுவது தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் சூசன் ரைஸ் குறிப்பிட்டதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது. யுத்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக இலங்கை உறுதிமொழி அளித்திருந்ததற்கு மத்தியிலும் மோதல் வலயத்திற்குள் ஷெல் தாக்குதல் தொடர்ந்து இடம்பெறுவதாக பலதரப்புத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் இழப்புகள் எண்ணிக்கை தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகள் எமக்குக் கிடைத்துள்ளன. புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பது தொடர்பான மிகவும் நம்பகரமான அறிக்கைகளையும் நாம் பெற்றுள்ளோம். மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்களை அவர்கள் சுட்ட சில சம்பவங்களும் உள்ளன என்று ரைஸ் கூறியுள்ளார்.

இருதரப்பும் மேற்கொள்ளும் இந்தமாதிரியான நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ட்ற் கொழும்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை ஏமாற்றமளிக்கும் விடயமாகும். இலங்கை அரசு ஏன் அவருக்கு அனுமதி மறுத்தது என்பதை அமெரிக்காவால் புரிந்துகொள்வது கடினமானதாக உள்ளது.

மோதல் பகுதிக்கு ஐ.நா. மனிதாபிமானக்குழு செல்வதை நிராகரித்திருப்பதை இலங்கை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான அனுசரணையாகவும் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான ஒத்தாசை புரியவுமே மனிதாபிமானக்குழுவை ஐ.நா. அனுப்பிவைக்க திட்டமிட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக பாரியளவில் பாதுகாப்புச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் 1 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக இடம்பெயர்ந்து வந்தவர்களுக்குரிய பதிவுகள், தங்குமிடங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட ஐ.நா.வுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும். 400 பேர் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக கிடைத்த அறிக்கைகளையிட்டு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதேசமயம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமென எதிர்பார்க்கின்றோம் என்றும் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் பாலாஜி மரணம்

balaji.jpgநடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அவர் காலமானார். மறைந்த அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபாகரன் குறித்த படத்தில் பிரகாஷ் ராஜ்

prakash-raj.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்தத் தகவலை  அவரே வெளியிட்டார். வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.

இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை.  விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

இனி ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கொஹனே

Dr Kohonaசர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் அந்நாடுகளினது உயர் இராஜதந்திரிகளுடன் இலங்கையின் நன்மதிப்பை கூட்டக் கூடிய வகையில் பிரச்சாரங்களை முன்னெப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது: வைகோ

vaiko00001.jpgவிருது நகர் தொகுதி வேட்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தனது தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது. இந்திய அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களால் காங்கிரஸ் கொடுத்த ஆயுதங்களால் அங்கு தமிழர்கள் படுகொலை நடந்து வருகிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இது தெரியும். அவரது குடும்ப நலனுக்காக, பிள்ளைகள் நலனுக்காக தமிழர்களை காவு கொடுத்து உள்ளார்.
 
விருதுநகர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வருகிறார் என அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. வைகோ பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. உங்கள் சகோதரனை பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு முயற்சி. நான் விருதுநகர் தொகுதியில் உங்களது எம்.பி.யாக 2 முறை இருந்துள்ளேன்.
 
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பார். அவர் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் ஏற்படுத்துவேன் என்று அறிவித்து உள்ளார். அவருக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது என்று கூறுகின்றனர். எந்த சட்டத்தை வைத்து கிழக்கு பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கினீர்கள். அதே சட்டத்தை வைத்துதான் ஜெயலலிதாவும் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் உருவாக்குவார். அப்போதும் இந்த வைகோவும் உடன் இருப்பார் என்றார்.

ஈழப்பிரச்சனை: குறும்படம் திரையிட்ட 3 பேர் கைது

தேர்தலுக்கு புறம்பாக இலங்கை படுகொலை குறித்து பொதுமக்களுக்கு குறும்படம் திரையிட்டுக்காட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூத்தியை ஆதரித்து பீர்கங்கரணை பேரூர் அதிமுக கூட்டணிகட்சியினர் சார்பில் சீனிவாசா நகரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசின் முன் அனுமதி பெறாமல் மத்திய அரசை அவமதிக்கும் வகையில் இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது திரையிட்டு காண்பிக்கப்பட்டது.  அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், குறும்படம் திரையிட்ட சிடி மற்றும் உபகரணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதிமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான குருநேருஜி (46). பாமக தலைவர் மனோகரன்(46) படம் திரையிட்ட சவுண்ட் சர்வீஸ் பார்த்திபன் (26) ஆகியோரை கைதுசெய்தனர். இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா அல்லது புலிகளைப் பாதுகாப்பதா? – நெஷனல் போஸ்ட்

canada.jpgகனடாவில் உள்ள பெரும்பாலான தமிழ் பேச்சாளர்கள் கனவுலகத்தில் வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாகப் பிடித்துவைத்திருக்கும் புலிகளே தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தல் என்ற உண்மையை (ஐ.நா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதன்படி) அவர்கள் அறியாதுள்ளனர் என கனடாவில் இருந்து வெளிவரும் நெஷனல் போஸ்ட் அதன் ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. (ஏப்பிரல் 29)

புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்திருக்கும் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதுமே கவலைப்படாததாகத் தொகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என்பது உண்மையிலேயே ஆச்சரியமாகவுள்ளது. என அந்த ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.

நாம் ஏற்கெனவே எமது ஆரியர் தலைப்புக்களின் குறிப்பிட்டதுபோன்று மனிதாபிமான நிலைமைகள் குறித்த விடயங்களில் நாம் அனுதாபமற்றவர்கள் அல்ல. இலங்கையின் வடக்கே மிகச் சிறியதொரு நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான தமிழ் தற்கொலை புலிப்பயங்கரவாதிகள் மத்தியில் அகப்பட்டிருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடியை ஏந்திச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களின் மனிதாபிமான கோசங்களுக்குப் பின்னால் அவர்களிடம் ஒரு மறைமுகமான நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே தெரிகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் பொதுமக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

‘கலங்கரை விளக்கம் ஜெ’-கனடா தமிழ் பட்டதாரிகள் அமைப்பு

j-j-j.jpgஉறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழ் ஈழ மக்களுக்கு ஜெயலலிதா ஒரு கலங்கரை விளக்காக நிற்பதாக கனடா பல்கலை. தமிழ் பட்டதாரி கழகம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கா ஆதரவாக பேசி வரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கனடா பல்கலைகழக தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் லோகீசன் கதிர்வேல் பிள்ளை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,

மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்னை ஜெயலலிதாவிற்கு,

கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் பணிவான அன்பு வணக்கங்கள் ஈழத்தமிழர் துயர் கண்டு வெடித்த உங்கள் உணர்வு கண்டு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல். ஈழத்திலும் தாய் தமிழகத்திலும் உள்ள எட்டுக் கோடித் தமிழர்களின் வாழ்க்கையில் உங்கள் பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. கடவுள் கூடக் கைவிட்ட ஈழத்தமிழருக்கு உங்கள் அன்புக்கரங்கள் நம்பிக்கையூட்டி நிற்கின்றது.

ஒவ்வொரு தாய் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழரின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள்.  உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழீழ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக நிற்கின்றீர்கள்.

ஈழத் தமிழராகிய எமக்கு உங்கள் சொல்லின் மேல் அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதைச் சொல்லும் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள். மேலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாகவே இதுவரை காலமும் வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் பதவிக்காலத்தில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள்தம் வாழ்க்கையை வளம்படுத்த உதவினீர்கள்.

எங்கள் அனைவர்க்கும் “ஈழத்தை அமைப்பேன்”; என்னும் உங்கள் கணீர் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.

ஐ.நாவிடம் அரசு ஆட்சேபம் விசாரணை நடத்துமாறு பிரதிநிதி புஹுனேயை அழைத்து அமைச்சர் சமரசிங்க வலியுறுத்து

mahinda-samarasinha.jpgமுல்லைத் தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனேயிடம் விளக்கம் கோரியுள்ளது.

மனித  உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹுனேயை நேற்று அவசரமாக அழைத்து, ஐக்கிய நாடுகளினால் மிகவும் அந்தரங்கமாகப் பேணப்பட வேண்டிய  உணர்ச்சி பூர்வமான  படங்களை ஊடகங்களுக்கு கசிய விட்டது எப்படியென்று உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கேட்டார்.

அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன்னாவும் கூட இருந்தார். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த ஆட்சேபத்தை அறிவிப்பதாக நீல் புஹுனே அமைச்சரிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வராது: கால்நடை பல்.கழகம்

swine-flue.jpgதமிழகத் தில் உள்ள வளர்ப்புப் பன்றிகளுக்கு ப்ளு காய்ச்சல் நோய் வராது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தங்கராஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை வேந்தர் தெரிவித்திருப்பதாவது: பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் இதுவரை மனிதர்களிடத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளன. உலகின் எந்த நாடுகளிலும் வளர்ப்புப் பன்றிகளில் ப்ளூ காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகளில் காய்ச்சல், சுவாச பாதிப்பு, வாந்தியுடன் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் தாக்கப்பட்ட பன்றிகளில் இருந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படலாம்