ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா அல்லது புலிகளைப் பாதுகாப்பதா? – நெஷனல் போஸ்ட்

canada.jpgகனடாவில் உள்ள பெரும்பாலான தமிழ் பேச்சாளர்கள் கனவுலகத்தில் வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாகப் பிடித்துவைத்திருக்கும் புலிகளே தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தல் என்ற உண்மையை (ஐ.நா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதன்படி) அவர்கள் அறியாதுள்ளனர் என கனடாவில் இருந்து வெளிவரும் நெஷனல் போஸ்ட் அதன் ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. (ஏப்பிரல் 29)

புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்திருக்கும் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதுமே கவலைப்படாததாகத் தொகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என்பது உண்மையிலேயே ஆச்சரியமாகவுள்ளது. என அந்த ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.

நாம் ஏற்கெனவே எமது ஆரியர் தலைப்புக்களின் குறிப்பிட்டதுபோன்று மனிதாபிமான நிலைமைகள் குறித்த விடயங்களில் நாம் அனுதாபமற்றவர்கள் அல்ல. இலங்கையின் வடக்கே மிகச் சிறியதொரு நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான தமிழ் தற்கொலை புலிப்பயங்கரவாதிகள் மத்தியில் அகப்பட்டிருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடியை ஏந்திச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களின் மனிதாபிமான கோசங்களுக்குப் பின்னால் அவர்களிடம் ஒரு மறைமுகமான நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே தெரிகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் பொதுமக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Kullan
    Kullan

    வெளிநாடுகளில் நடைவெறும் போராட்டம் எல்லாம் வெறும் கண்துடைப்புக்கள் தான். தமிழர்களை அந்நியர் மட்டுமல்ல தமிழரைத் தமிழளும் ஏமாற்றித்தான் வந்தார்கள். நோர்வேயில் சிறீ என்பவர் இந்திய சினிமா நடிகைகளையும் இங்கு பாட ஆட என்ற கொண்டு வந்தவர் சத்தியாக்கிரகம் இருந்தார். சோசியாலில் தூங்குபவர்களுக்கு சத்தியாக்கிரகம் இருப்பதற்கு போதிய நேரம் இருக்கும் தானே.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    முப்பது ஆண்டுகள் கழித்து,”இலங்கைத்தமிழர்கள்”,வெளிநாடுகள் வந்து கொடிப்பிடித்து,”சாதிப் பிரச்சனைகளை”,”சிறுபான்மையினர் பிரச்சனைகளை”,தற்போது,டக்ளஸ்,சந்திரகாந்தன்,முரளிதரன் போன்றோர்களின் “யுனானிமஸ்” இல்லாத நிலையில்,”சர்வதேச சட்டங்களின் கீழ்” முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை.- There is not yet a recognized legal definition of “peoples” in international law.But definitions offered are “peoples” being self-evident (from ethnicity, language, history, etc.), or defined by “ties of mutual affection or sentiment,” i.e. “loyalty,” or by mutual obligations among peoples. Or the definition may be simply that a people is a group of individuals who unanimously choose a separate state. If the “people” are unanimous in their desire for self-determination, it strengthens their claim.- “சர்வதேச சமூகம்” இலங்கைத்தமிழர்களை உன்னிப்பாக கவனிக்கிறது,”டைஸ் ஆஃப் முச்சுவல் அஃபக்ஷன் அன்ட் சென்ன்டிமென்ட்-அதாவது லாயல்டி” அடிப்படையில் “இலங்கைத்தமிழ் மக்கள் மீது” “தமிழ்ப் பிரதிநிதிகளும் அவர்களது ஊதுகுழல்களும்”,சட்ட தகுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு “அக்கறை உடையவர்களாக இருக்கிறீர்களா என்று.”இனப்படுகொலை” என்பதை நடத்தும் சக்திகளாக இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் சட்டரீதியாக? “இலங்கைத்தமிழர்களால்” குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில்,”தமிழ்(இனம்)மக்களை” காக்க என்று அமைக்கப்பட்ட பிரதிநிதிகளும்,”பாதுகாக்க ஆயுதம் தூக்கும் சட்டத்தகுதிகளை அடையாத,ஆயுத குழுவாக”,கிரிமினல் குற்றம்,சார்வதேச நாடுகளால் சாட்டப்பட்ட நிலையில்,”ஆர்ப்பாட்டக்காரர்கள்”,சர்வதேச சட்டத்தின் முன்னால் “தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை” எப்படி எடுத்துச் செல்லப் போகிறார்கள்.இவர்களின் “அணுகுமுறை” இனப்பிரச்சனை என்ற ஒன்று இருப்பதை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கிறது.இந்த “ஆர்ப்பாட்டக்காரர்கள்”,புலியெதிர்ப்பு என்ற போர்வையில்,புலிகளை கொன்றொழிக்க வேண்டு என்று கூறுகிறார்கள்,”அவர்க்ளேதான்”,விவான்ட் டமிலீலம்,அவர் லீடர் பிரபாகரன் என்று கோஷமிடுகிறார்கள்.புலிகளை அழிக்கவேண்டும்,அப்படி அவர்களி விட்டு வைத்தால்,அவர்கள் சொல்லுக்கு தப்பாமல் தாளம் போடுவோம் என்ற நடைமுறை? உணர்வுகள் வெளிப்படுகிறதே தவிர,””ties of mutual affection or sentiment,” i.e. “loyalty,” or by mutual obligations among peoples.” என்பதன் அடிப்படையில்,”மக்கள் குழுவாக” சர்வதேச சட்டத்தின் முன் பிரதிநிதித்துவப் படுத்த விரும்பவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    புலி வீழ்ந்ததும் இவர்களில் அநேகம் நேர் எதிராக மாறிவிடுவார்கள்.

    Reply
  • thurai
    thurai

    புலிகள் எனப்படுபவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல புலத்திலும்தான். புலத்தில் வாழும் புலிகளே போராட்டத்தை முடிவுக்கு வராமல் த்டுப்பவர்கள். தங்கள் பண வருமான்ம் தடைப்படுவதை விரும்பாதவ்ரே தெருவில் இற்ங்கி அப்பாவிகளை ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டுகின்றனர்.

    துரை

    Reply