‘கலங்கரை விளக்கம் ஜெ’-கனடா தமிழ் பட்டதாரிகள் அமைப்பு

j-j-j.jpgஉறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழ் ஈழ மக்களுக்கு ஜெயலலிதா ஒரு கலங்கரை விளக்காக நிற்பதாக கனடா பல்கலை. தமிழ் பட்டதாரி கழகம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கா ஆதரவாக பேசி வரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கனடா பல்கலைகழக தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் லோகீசன் கதிர்வேல் பிள்ளை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,

மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்னை ஜெயலலிதாவிற்கு,

கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் பணிவான அன்பு வணக்கங்கள் ஈழத்தமிழர் துயர் கண்டு வெடித்த உங்கள் உணர்வு கண்டு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல். ஈழத்திலும் தாய் தமிழகத்திலும் உள்ள எட்டுக் கோடித் தமிழர்களின் வாழ்க்கையில் உங்கள் பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. கடவுள் கூடக் கைவிட்ட ஈழத்தமிழருக்கு உங்கள் அன்புக்கரங்கள் நம்பிக்கையூட்டி நிற்கின்றது.

ஒவ்வொரு தாய் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழரின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள்.  உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழீழ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக நிற்கின்றீர்கள்.

ஈழத் தமிழராகிய எமக்கு உங்கள் சொல்லின் மேல் அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதைச் சொல்லும் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள். மேலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாகவே இதுவரை காலமும் வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் பதவிக்காலத்தில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள்தம் வாழ்க்கையை வளம்படுத்த உதவினீர்கள்.

எங்கள் அனைவர்க்கும் “ஈழத்தை அமைப்பேன்”; என்னும் உங்கள் கணீர் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்த வயதிலாவது, கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி ,மாற்றாக, மூதறிஞர் இராஜாஜி, இந்திராகாந்தி போன்றோர் விஷயங்களில், தான் கடைபிடித்த “மேத்தேட்” கள், குற்ற உணர்வு மிக்கவை, என்பதை உணர்ந்தால் சரி.

    Reply
  • msri
    msri

    கனடிய பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கை> புல்லரிக்கின்றது! இப்போ இந்தியாவில் தேர்தல் காலம் என்பது> இப்பட்டதாரி மாணவர்களுக்கு தெரியாதோ? மே 13ற்குப் பிறகு நீங்கள் இன்னொரு அறிக்கை விடவேண்டி வரும்!

    Reply
  • msri
    msri

    தமிழ்மக்களின் எதிரி காங்கிரசே!கலைஞர் சூழ்நிலைக் கைதி என்கின்றனர்!>பாரதிராசா – உள்ளிட்ட சில நடிகர் சங்க உறுப்பினர்கள்! டிமோக்கிறசி>உங்களின் ஐனநாயகக் கருத்து என்ன?

    Reply
  • thurai
    thurai

    தமிழக அரசியலை பார்த்து ஈழத்து சினிமா ரசிகர்கள்
    கூட சிரித்தார்கள். கனடிய பல்கலைக்கழக மாணவர்கள்
    இவ்வாறு போற்றுவது புலததுத் தமிழரிடமமுள்ள அரசியல்
    வரட்டுத் தன்மையையே காட்டுகின்றது.

    துரை

    Reply
  • Kullan
    Kullan

    கலங்கரை விளக்கமே……… நாம் நம்பினோம் இந்தியப்பாமரர்கள் தான் என்பேச்சை நம்புகிறார்கள் என்று. ஐயோ பட்டம் விடுகிற பட்டதாரிகளுமா? விடுங்கோ விடுங்கோ எவ்வளவு தூரம் பறக்கிறது என்று பார்ப்போம். அறப்படித்த பல்லி கூழ்பானைக்குள் விழுந்தது என்பது இதுதானா?

    Reply
  • muni
    muni

    தேர்தலில் தோற்றுவிட்டபின்பு கலங்கரை விளக்கை தேடி அலைந்தாலும் வெளிச்சமே கிடைக்காது.

    Reply