பிரபாகரன் குறித்த படத்தில் பிரகாஷ் ராஜ்

prakash-raj.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்தத் தகவலை  அவரே வெளியிட்டார். வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.

இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை.  விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • sangu
    sangu

    பிரகாஷ்ராஜ் நீங்கள் இதற்காக நிறைய அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. பொந்துக்குள்ளால் பதுங்கி பதுங்கி வெளியே வந்து முழிஞ்சு முழிஞ்சு பார்க்கப் பழகிக் கொண்டீங்கள் எண்டால் போதும்.
    வீடியோக்களுக்கும் கனதூரம் அலைய வேண்டாம். இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுப் பாருங்கோ. latest videoகள் கிடைக்கும்.

    Reply
  • THIRU
    THIRU

    அப்படியே மகிந்த அரசிற்கு ஆதரவாகச் செயற்படும் காமடிக் குழுவில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்கிறார் என்பாதையும் போட்டுவைக்கவும்.

    Reply
  • Kullan
    Kullan

    பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல மக்களையும் சந்தர்ப்பதையும் புரிந்துகொண்ட மிகத்திறமான வியாபாரி. காற்றுள்ள போது தூற்ற நினைக்கிறார். பிழைக்கத்தெரிந்த மனிதன். புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட இயக்கம் என்பதை மறந்து விடாதையும். இந்திய அரசைத் தாயா பண்ண வெளிக்கிட்டு புலிகளை உம்தலையில் துப்பாக்கியை வைக்கப்பண்ணாதையும். ராஜீவ் காந்தியை மட்டுமல்ல உயிராய் இருந்த மாத்தையாவையே கள்ளப்பட்டம் கட்டி போட்டவர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளும்

    Reply
  • thaya
    thaya

    சிலருக்கு கிட்டலராக நடிக்க ஆசை
    சிலருக்கு இடி அமினாக நடிக்க ஆசை
    இன்னும் சிலருக்கு பொல்போட்டாக நடிக்கவும் ஆசை. அது பொலவே பிரகாஸ்ராஐ;
    பிரபாகரனாக நடிக்க ஆசைப்படுகிறார்.
    இதில் என்ன அதிசயம்?…….

    Reply
  • muni
    muni

    தம்பி பிரகாஷ்ராஜ் உமது முயற்சிகளுக்கு பாராட்டுகள். பிரபாகரன் போல நடிப்பதில் சிரமம் இருக்காது. ஆனால் கருணாவாக நடிப்பது யார். மாத்தையாவாக, தயா மாஸ்டராக வேறு ஆட்களைப் போடுவதைவிட அவர்களையே நடிக்க வைத்தால் ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் உம்மை நினைக்கத்தான் கவலையாக இருக்கு, கவனம் ஐயா புள்ளகுட்டிக்காரன்.

    Reply
  • palli
    palli

    இதைதான் சொல்லுறது ஏழரைசனி கதவைதட்டாமல் பின்பக்க வாசலால் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் ஏறி மல்லாக்க படுப்பதென. எதுக்கும் கப்டன் பிரபாகரனிடமும் ஒரு வார்த்தை கேட்டுகொள்ளபடாதா. பல்லியின் வேண்டுகோள் படத்தின் பெயர் சர்வதேசமே புலியை காப்பாத்து என வைக்கவும்.

    Reply
  • மாயா
    மாயா

    பிரபாகரனாக நடித்து படம் ஓடும் என எதிர்பார்க்க முடியாது? சிலவேளை படம் ஓடினால் இந்தியாவிலும், பிரபாகரன் படம் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் கொண்டோராலும் பார்க்கப்படலாம்.. ஆனால் இப் படத்துக்கு மிகப் பெரிய கண்டனங்களும் , எதிர்ப்புகளும் வரும்.

    பிரகாஸ் ராஜுக்கு புலித் தமிழர்ககளைப் பற்றித் தெரியாது. படம் வந்த பின்னர் புரிந்து கொள்வார். அந்த படத்தில் எங்காவது புலிகள் குறித்த எதிர் வசனம் ஒன்று இருந்தாலும் போதும் ,அதை வைத்தே தமிழர்கள் படத்தை தடை செய்ய வேணும் என்ற குரல் வரும். பிரபாகரன் மாதிரி இன்னொருவர் இல்லை என்ற மனோ நிலையில் வாழும் புலிகளும் புலி ஆதரவாளர்களும் இன்னொரு பிரபாகரன் இருப்பதையோ அல்லது பிரபாகரனாக நடிப்பதையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

    படத்தை வைத்து பூஜை செய்யதாலும் படத்தில் அவராக யாரும் வருவதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை படைத்தவர்கள் அல்ல. பொதுவாக இலங்கைத் தமிழர்கள் அனைவருமே கீ(சீ)ரோக்கள்.

    Reply