Multiple Page/Post

ஐ.தே.க.வை அழித்தொழிக்க உள்ளேயும் வெளியேயும் சதி :மக்கள் சக்தி மூலம் முறியடிப்பேன் – ரணில்

ranil.jpgஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் சதி நடப்பதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சதிக்காரர்களிடமிருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காக மக்கள் சக்தியை அணிதிரட்டி பலப்படுத்தப் போவதாகவும் சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கும் சக்தி தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ள சக்திகளே இந்தச் சதித்திட்டத்தை மேற்கொண்டுவருவதாகவும் அதற்கு கட்சிக்குள்ளும் சிலர் துணைபோக முனைவதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் நிதியத்தை திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இந்த வைபவம் இடம்பெற்றது.கட்சியின் அமைப்பாளர்களும் உயர்மட்டத்தினரும் மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; தேர்தல்களில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்விகளை வைத்துக்கொண்டு அரசியல் கட்சியொன்றின் வளர்ச்சியையும் பின்னடைவையும் எடைபோடமுடியாது. மிகப்பழைமையான ஜனநாயக அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பலம் குன்றப்போவதில்லை. ஜனநாயக அரசியலில் வெற்றி தோல்வியென்பது சகஜமானது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எமது கட்சி 48 இலட்சம் மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளால் பிரதி நிதித்துவம் பெற்றவர்கள் சுயநலத்துக்காக கட்சியை காட்டிக்கொடுத்துப் பதவிகளை பெற்றுக்கொண்டனர். அவர்கள் வெளியேறினாலும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கட்சியை விட்டும் வெளியேறவில்லை. மக்கள் சக்தி ஐக்கிய தேசியக்கட்சியிடம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இந்த ஆண்டும் எதிர்வரக்கூடிய ஆண்டும் தேர்தல்களுக்கான ஆண்டாக காணப்படுவதால் கட்சியைப்பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம். கட்சிக்கு மேலும் ஆதரவாளர்களை அணிதிரட்ட வேண்டும்.இதன் பொருட்டே தேர்தல் நிதியை ஆரம்பித்துள்ளோம்.

“ஆயிரம் ரூபா நிதி’ என்ற நிதித்திட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றோம். இரண்டு வாரங்களுக்கு தலைநகரிலும், நகர்ப்புறங்களிலும் இத்திட்டத்தை அமுல்படுத்திவிட்டு அடுத்த கட்டமாக கிராமப்புறங்களுக்குச் செல்லவிருக்கின்றோம். மக்களிடமிருந்து பெறப்படும் நிதியல்ல முக்கியம். அதனூடாக இணைத்துக் கொள்ளப்படும் மக்கள் சக்தியே முக்கியமானதாகும். கட்சி மீதான நம்பிக்கையை முழு நாட்டிலும் கட்டியெழுப்புவதுதான் மிக முக்கியமான நோக்கமாகும்.

அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு சதிகள் இடம்பெற்றுவருகின்றன. அது கட்சிக்குள்ளிருந்தும் வெளியே இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. பலவீனப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும் வங்குரோத்து நிலைக்குத்தள்ளப்படும் சில சக்திகளே இந்தச் சதியின் பின்னாள் காணப்படுகின்றன.

இக்கட்சியை அழிப்பதற்கு எந்தச் சக்திக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் எத்தகைய நெருக்கடியையும் சவாலையும் எதிர்கொள்ளத் நான் தயாராகி இருக்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சகலரையும் ஒன்றுதிரட்டி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரைவில் இந்த மண்ணில் நல்லாட்சியொன்றை மலரச் செய்வதற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு அழைப்பு விடுத்தார்.

ஏழு விண்வெளி வீரர்களுடன் “டிஸ்கவரி’ விண்ணுக்குப் பயணம்!

discovery.jpgஅமெரிக் காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் “டிஸ்கவரி’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏழு விண்வெளி வீரர்கள் சகிதம் 14 நாள் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலமானது அவ்விண்வெளி நிலையத்துக்கான நான்காவது இறுதித் தொகுதி சு10ரியசக்தி பிறப்பாக்கி அலகுகளை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளிவீரர்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி பணியாற்றும் முதலாவது ஜப்பானிய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள கொய்சி வகாடாவும் உள்ளடங்குகிறார்.

இந்த விண்கலத்தை கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத கால தாமதத்தின் பின் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய சக்திப் பிறப்பாக்க அலகுகளானது,  அந்நிலையத்துக்கு கிடைப்பனவாகும் மின் சக்தியின் அளவை அதிகரிப்பதுடன் அந்நிலையத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்களை பொருத்துவதற்கு தேவையான சக்தியையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் தொகையை மூவரிலிருந்து அறுவராக அதிகரிக்க இந்த மேலதிக சக்தி விநியோகம் உதவும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள சிறுநீரை குடிநீராக மாற்றும் உபகரணமொன்று பழுதடைந்துள்ள நிலையில்,  அதற்கு பதிலாக புதிய உபகரணமொன்றை பொருத்தும் நடவடிக்கையிலும் விண்வெளிவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதுவரை விண்வெளிக்கு 36 பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்கலத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 28 ஆவது தடவையாகும்.

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் சு10ரியன் மறைந்த பின் பிரகாசமான நட்சத்திரம்போன்று விண்ணில் ஒளிரவுள்ளது. மேற்படி சு10ரிய சக்தி பிறப்பாக்க அலகுகள் அனைத்தும் இணைந்து 120 கிலோ வோட்ஸ் மின் சக்தியை பிறப்பிக்கும் என நாசா தெரிவிக்கிறது. 

பேராதனை மருத்துவபீட மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரிப்பு

university-of-peradeniya.jpgசிகிச்சைக் கான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பிரிவு இளநிலைப் பட்டதாரிகள் ,விரிவுரைகளை பகிஷ்கரிப்பதற்கான போராட்டத்தை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர்.  வைத்திய சபையில் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்த மருத்துவப் பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் திகதி முதல், மாணவர்களின் சிகிச்சை வகுப்புகளுக்காக மூடப்பட்டிருந்த சுகாதார விஞ்ஞான பீடம், கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

மருத்துவ பயிற்சிகளை மீண்டும் வழங்குவதற்கும் சுகாதார விஞ்ஞான பீடத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால ஆகியோர் வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவர் கூறியது போன்று பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என மாணவர் கவுன்சிலின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த விஞ்ஞான பீடத்தில் 460 மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று பிரிவுகளாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இப்பிரிவு, விசேடமாக, தாதியர், மருத்துவ ஆய்வு கூட சேவை, கதிரியக்க சிகிச்சை, மருந்தகம், உடற்பரிசோதனை போன்றவற்றுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாணவர்களை பயிற்சி நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பதை, வைத்தியசாலை பணிப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக சுகாதார விஞ்ஞான பீடாதிபதி, டாக்டர் சுலா குணசேகர தெரிவித்தார். அதேசமயம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்திருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக, சுகாதார அதிகாரிகளுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில், நீதிமன்றத்தின் முடிவைதான் எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமர நாயக்க தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை : ரசிகர்கள் மொட்டையடித்து நூதனப்போராட்டம்

jallikattu.jpgசுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, ஜல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. விரைவில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐ.நா.வின் மிலேனியம் இலக்குகளை அடைய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் – போகொல்லாகம

rohitha_bogollagama.jpgபயங்கர வாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலமே ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறைக்கான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மன்றத்தின் பிராந்திய அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுகாதார பாதுகாப்புக்கான நிதி உபாயங்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பு, சினமன் ஹோட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை இந்த மிலேனியம் இலக்குகளை 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைந்து விடும். சமூகநல அபிவிருத்திää சுகாதாரம் ஆகிய துறைகளில் நாடு நிலைநாட்டியுள்ள சாதனைகளினால் இந்த இலக்குகளை இலகுவாக அடைய முடியும்.
இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் மக்களை வலுவடையச் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்க்கதரிசனம் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் ஒன்றாக அமையும்.

பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்கு மத்தியிலும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசு முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கும் மருந்துப் பொருட்கள்ää வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களுக்கென அரசினால் அனுப்பப்படும் மருந்துகளை புலிகள் அபகரித்து அவற்றை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்தி வருவதை அறிந்தும் அங்குள்ள மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கங்களினூடாக அப்பகுதிகளுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளின்போது பல்தேசிய நிதி நிறுவனங்கள்,  வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருவதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

army-s-l.jpg58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.

திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.

tmvp.jpgகடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பலுடன் எமது ஆதரவாளரான ஜனா என்பவர் கொண்டிருந்த தொடர்புகள் அவரது தனிப்பட்ட நடவடிக்கையாகும். இதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்புகளோ கிடையாது என்பதை மக்களுக்கு தெளிவுறுத்த விரும்புகிறோம்.

கிழக்கு மாகாணமெங்கும் பரந்துபட்ட ஆதரவாளர்களைக் கொண்டுள்ள எமது கட்சி எனும் வகையில் இது போன்ற சமூக விரோதிகளின் ஆதரவுகளை பெறுவது குறித்து எதிர்காலத்தில் எமது கட்சி மிக அவதானமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி சந்தேக நபர்கள் எதுவித பாரபட்சமுமின்றி விசாரிக்கபட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் இருப்பதோடு அதற்கு பூரண ஒத்தாசை வழங்கவும் எமது கட்சி சார்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் அச்சநிலையை தவிர்த்து பொது மக்களுக்கான ஜனநாயக சூழலை மேம்படுத்த எமது கட்சி உளசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே குறித்த கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி எமது கட்சிமீது சேறு பூசுவதையும் அவதூறு பொழிவதையும் நோக்காகக் கொண்டு திரிபுபடுத்தப்பட்டு வெளிவருகின்ற செய்திகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு சிறுமி வர்ஸாவின் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
(ஒப்பம்)
எ. கைலேஸ்வரராஜா
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
16/03/2009

tmvp.jpg

புலிகளின் கதை முடிந்து விட்டது சிறிய ஆயுதங்களால் மட்டுமே அவர்களால் தாக்க முடியும்: அமைச்சர் கருணா

karuna1.jpgநான் தேசிய அரசியலில் ஈடுபடுவதனையே விரும்புகிறேன். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சராவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போன்று சிறியதொரு கட்சியை வழி நடத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு தெரிவிக்கிறார் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மா) ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது அமைச்சுப் பொறுப்பினை நான் திறம்படச் செயற்படுத்துவேன். எந்தப் பிரச்சினையையும் முகங்கொள்ளத் தயாராகவிருக்கிறேன். அதேபோன்று அதற்கான தீர்வினையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த போது எதற்கும் முகங்கொடுக்கக் கூடிய சக்தியை நான் பெற்றுக்கொண்டேன். நான் பிரிட்டனில் எட்டு மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தேன.; அப்போது பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். தற்போது நான் சிங்கள மொழியைக் கற்று வருகிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களால் இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாது. அவர்கள் முடிந்துவிட்டார்கள். சிறிய ஆயுதங்களைக் கொண்டு மட்டும்தான் அவர்களால் தாக்குதல்களை நடத்த முடியும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடொன்றைப் பெறலாமென்பது நடக்க முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

நேற்று முன்தினம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் ராஐசேகரன், தஞ்சை மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23) என்கிற ஆனந்தராஜ் புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பொதுமக்களே ஆஜராகி தமிழில் வாதாடினார்கள்

chennai-highcourt.jpgகாக்கிச் சட்டைகள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்குகள் தகுதி அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பினைக் கண்டித்து பல வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாங்கள் வழக்குகளின் வக்காலத்துக்களை வாப‌ஸ் பெற்று வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தற்போது சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் பொதுமக்களே ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் ஆஜராகி தமிழில் வாதாடி வருகிறார்கள். விசாரணையும் தமிழில் நடைபெற்றது. நீதிபதி கலிபுல்லா மற்றும் ‌நீ‌திப‌தி ‌பி.ஆ‌ர்.சிவகுமா‌ர் தமிழிலேயே 146 வழக்குகளை விசாரித்து முடித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதன்முறையாகும்.