Multiple Page/Post

முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்.

ibatticaloa-sri-lanka-01.jpgஎதிர்வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டக்களப்பு நகரில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கடந்த வருடம் பதுளையில் ஊவா மாகாண முதலமைச்சர் விஜயமுனி சொய்சா தலைமையில் முதலமைச்சர் மாநாடு நடைபெற்றது. அவ்வேளை, 2008 -2009 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர்கள் மாநாட்டுத் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவானார்.

அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில் 2009 ஆம் ஆண்டுக்கான மாநாடு மட்டக்களப்பில் நடை பெறுகின்றது. மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் 8 மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேல் மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிரசன்னா ரணதுங்க கலந்து கொள்ளும் முதலாவது முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும் .

இம்மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் நகர பிரதேசத்திலுள்ள 7 பாடசாலைகள் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மூடப்படுகின்றன. இதனைத் தவிர நகரிலுள்ள வியாபார நிலையங்களில் சேவையாற்றும் சிப்பந்திகள் பற்றிய விபரங்களும், அங்கு தங்கியிருப்பவர்கள் விபரங்களையும் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.

மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிற மாவட்டங்களிலிருந்து பொலிஸார் விசேட கடமையின் நிமித்தம் வருகை தரவிருப்பதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநாடு நடை பெறும் நாட்களில் அரச மற்றும் தனியார் பஸ் நிலையங்கள்,ஆட்டோ தரிப்பிடங்கள் ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை ஆயுர்வேத வைத்தியசாலை ரூ. 4000 மில். செலவில் அபிவிருத்தி

ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரியை சுமார் நாலாயிரம் மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச மருத்துவத் துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் ஊடாக இந்த ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டத்தின் கீழ் ஒரு வார்ட்டில் ஐம்பது பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வகையில் பத்து வார்ட்டுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் :-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போதனா ஆஸ்பத்திரியாக ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி உள்ளது. யுத்தம் காரணமாக இந்த ஆஸ்பத்திரி பெரிதும் பாதிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கிலுள்ள ஒரே சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி இதுவே ஆகும். இதனைப் புலிகள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாலேயே இதன் கட்டடங்கள் பெரிதும் சிதைவடைந்துள்ளன. வடக்கு வசந்தத்தின் கீழ் பத்து வார்ட்டுகளும், மருந்துப் பொருள் உற்பத்தியகமும், மருந்தகமும், ஆய்வுகூடம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு, நிர்வாகக் கட்டடத் தொகுதி ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன என்றார்

யூதவாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறுகிறார் போப் ஆண்டவர்

pope_afp.jpgயூத வாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், அவை எங்கு காணப்பட்டாலும், எதிர்க்கப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் கிறித்துவ புனிதத் தலங்களுக்கு அவர் மேற்கொண்டிருகும் யாத்திரையின் இறுதிக் கட்டமாக இஸ்ரேல் போய்ச் சேர்ந்த போப் ஆண்டவர், இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நாஜி ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட 60 லட்சம் யூத மக்களை அவர் நினைவு கூர்ந்ததோடு அவர் இஸ்ரேலிய பாலத்தீனயத் தலைவகளோடும் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் தத்தமது தாய்நிலத்தில், சமாதானமாக வாழ் எல்லா வழிவகைகளும் ஆராயப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுளார்.

கடற் கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் இலங்கையில்

ship.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் நேற்று முன்தினம்  விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான மலஸ்பினா காசல் எனும் சரக்கு கப்பல் தற்சமயம் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் இந்த சரக்கு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஆறு நாட்கள் வரை தரித்து நிற்கும் என தெரியவருகின்றது.

பல்கேரிய மாலுமிகளை அதிகளவில் கொண்ட இந்த சரக்கு கப்பல் கடற் கொள்ளையர்களால் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சரக்கு கப்பல் (10) விடுவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் கோரிக்கைக்கு இணங்க கப்பப் பணம் செலுத்தப்பட்டதாக பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் மிலன் கேரிமெட்சிவ் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2010 பெப்ரவரியில் ஜனாதிபதி தேர்தல் அதனை எதிர்கொள்ள ஐ.தே.க. தயார்

unp.jpgமுதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருப்பினும் அரசாங்கம் அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் (2010) பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளது. எனவே, எந்தத் தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க ஐ.தே.க. தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி ஜானக்க ஹோட்டல் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார். முதலில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலையே அரசு நடத்தவேண்டும். ஆனால், அது ஜனாதிபதித் தேர்தலை முன்னதாக வைக்க தீர்மானித்துள்ளது. ஐ.தே.க. எந்தவொரு தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க எப்போதும் தயாராகவே உள்ளதென்றார்.

பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 3 வருட சிறைத்தண்டனை.

credit-card.jpgபிரித்தானிய Northampton Crown Court கடனட்டை மோசடியில் ஈடுபட்ட சுந்தரம் தேவரத்தனம் வயது 33 என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நோர்த்அம்ரன் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் காசாளராக கடமை புரிந்து வந்த இவர் 1000 இக்கு மேற்பட்ட கடனட்டைகளுடன் தொடர்புபட்ட 300 000 ஸ்ரேலிங் பவுண்கள் மோசடிக்கு உதவியுள்ளமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்கமுடியாது – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவிப்பு

usa-flag.jpgஇலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடியாக பொதுமக்களின் இழப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் இயன்கெல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த நிலைமை குறித்து அமெரிக்கா கூர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

புலிகள் ஆயுதங்களை களைந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ய வேண்டும். யுத்த சூனிய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதி அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பான்கீ மூன்

ban_ki_moon_.jpgகடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கைவிடுத்துள்ளது.
 
 “மேலும் மோசமான இரத்தக்களரி ஏற்படாதவாறு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் அவசரவேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

அதேநேரம், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

“கடந்த வார இறுதியில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்” என பான்கீ மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

netherland-flag.jpgஇலங் கைத் தமிழர்களினால் நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இன்று நண்பகல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழர் போராட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்கள்

_michaelmartin.jpgதமிழர் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக, நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் மற்ற நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளை பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராட்டக்காரர்கள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த போராட்டக்காரர்களுக்கு 50 பேர் வரை குழுமலாம் என்று அனுமதி அளித்தால் 50 பேர் வரை தான் குழும வேண்டும் என்று கண்டிப்பு தெரிவித்த மார்டின் அவர்கள், அதற்கு பதிலாக நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்வது, உணவு கொண்டுவருது என்பதெல்லாம் போராட்டத்திற்கான அனுமதிகளாக ஆகாது என்றும் கண்டித்தார். நாடாளுமன்ற சதுக்கத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தலைநகரின் மையப்பகுதியை செயலிழக்கச் செய்யும் இவர்களின் இந்த செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சியைச் சேர்ந்த நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரால்ட் ஹோவர்த் அவர்கள் லண்டன் மாநகர காவல்துறையின் ஆணையர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது.