இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடியாக பொதுமக்களின் இழப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் இயன்கெல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த நிலைமை குறித்து அமெரிக்கா கூர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
புலிகள் ஆயுதங்களை களைந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ய வேண்டும். யுத்த சூனிய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதி அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
palli.
இது மறைமுகமாக புலிகளை புரட்டி எடுங்கள் என்பது போல் அல்லவா இருக்குறது. இது புரியாமல் புலம்பெயர் புலிகள் ஓபாமா ஈழத்தை ஆதரிக்க தொடங்கி விட்டார் என முடிவுரை எழுதுகிறார்கள். ஆக புலிக்கு தடாதானா??
santhanam
புலியின் கதைமுடிவுக்கு வருகிறது ஆனால் அவர்கள் தமிழர் மத்தியில் துரோகிகள் ஆகிறார்கள்.