தமிழர் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக, நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் மற்ற நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளை பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராட்டக்காரர்கள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த போராட்டக்காரர்களுக்கு 50 பேர் வரை குழுமலாம் என்று அனுமதி அளித்தால் 50 பேர் வரை தான் குழும வேண்டும் என்று கண்டிப்பு தெரிவித்த மார்டின் அவர்கள், அதற்கு பதிலாக நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்வது, உணவு கொண்டுவருது என்பதெல்லாம் போராட்டத்திற்கான அனுமதிகளாக ஆகாது என்றும் கண்டித்தார். நாடாளுமன்ற சதுக்கத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தலைநகரின் மையப்பகுதியை செயலிழக்கச் செய்யும் இவர்களின் இந்த செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சியைச் சேர்ந்த நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரால்ட் ஹோவர்த் அவர்கள் லண்டன் மாநகர காவல்துறையின் ஆணையர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது.
நண்பன்
10 பேரை பிடிச்சு சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்ப போறதா ஒரு அறிக்கை விட்டா போதும்,சுத்தி நிக்கிற ஒருத்தரையும் லண்டன் சிட்டியிலயே பிடிக்க ஏலாது. கை கூட காலாத்தான் வேலை செய்யும்.
manithan
weldone your view is comlitly acceplable
palli.
சத்தியமாக சொல்லுகிறேன் இதுக்கு தலமைதாங்கி எப்படி அனாகரிகமாக செயல்படும் பத்து பேரையல்ல அத்தனை பேரையும் நாடு கடத்த வேண்டாம். தனி விமானத்தில் கட்டுனாயக்காவுக்கு அனுப்பி அவர்களை வரவேற்க்கும் பொறுப்பை இந்த கோயபட்ச்சாவிடம் கொடுத்து உங்கள் தாகத்தை இந்த வீரர்கள் மீது காட்டுங்கள் எமது அப்பாவி மக்களை விடுவியுங்கள்
பார்த்திபன்
உண்மையில் உந்த விடயத்தில் பாரபட்சம் காட்டாமல் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது தலா 5 பேரையாவது (பின்னணியிலிருந்து இயக்கும்) பிடித்து இலங்கைக்கு நாடு கடத்தினால்த் தான் மிகுதியுள்ளவரையாவது புத்தி பேதலிக்கும் முன் காப்பாற்றலாம்.
Nor
Sorry sir, we need more picnics in the summer.
-Eelamohan
palli.
பார்த்திபன் இவங்க தமிழீழத்தை எடுத்து பங்கரில் ஒழித்து வைத்திருப்பாங்களோ. இந்தநிலையிலும் 24 புலிகேசி வசனம் பேசுவதால் பல்லிக்கு ஒரு சந்தேகம். தலைவர் அப்படி சொன்னாலும் சொல்லுவார். அதையும் இந்த கூட்டம் தம்பட்டம் அடிக்கும்.
தமிழனாய் பிறந்தது தவறா??
அல்லது தலைவரின் காலத்தில் பிறந்தது கடனா??
vanthiyadevan
1st michail martin have to condmn to sibon mcdonna mp she is the one giving boost for this
PUYAL
தமிழனாய்ப் பிறந்ததும் தவறல்ல தலைவர் காலத்தில் பிறந்ததும் தவறல்ல. நடக்கிறதைப் பறக்கிறது என்று கதை பரப்பும் உந்த மண்டைக்குள் ஒன்றுமில்லாத கூட்டமொன்று நமக்குள் இருக்கின்றதே. அதனால்தான் நமக்கு இன்று இவ்வளவு அழிவு.