November

November

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வெற்றி வேட்பாளர் விபரங்கள்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் தனிப்பட்ட விருப்பு வாக்குகளின் தொகை தொடர்பான விடயங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டம் மக்கள் தெரிவு.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 15135

சிவஞானம் சிறீதரன் 32833

கருணானந்தன் இளங்குமரன் 32102

சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா 20130

ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 1757

இராமநாதன் அர்ச்சுனா 20487

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கை முழுதும் சமாந்தரமாக பெற்ற வெற்றியை மீள அனுர தலையிலான என்.பி.பி பெற்றுள்ளது – இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

 

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கூறியது போல் கடந்த காலங்களில் அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர்.எனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இயற்றுவதற்கான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஊழலைச் சமாளிக்கவும், தேசிய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இயற்றவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் எதிர்பார்க்கும் வாக்காளர்களின் அசாதாரண எதிர்பார்ப்புகளை புதிய ஆட்சி நிர்வகிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைமையானது, அதன் புதிய மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் அமைச்சர்கள் கட்சி இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதையும், அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

மக்களால் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களின் தலைவிதியை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே புதிய அரசாங்கம் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்;. இலங்கை அரசாங்கம் மீண்டும் தோல்வியடைவதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிசெய்து பாராளுமன்றத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

 

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

முன்னாள் அமைச்சர்களை தூக்கி வீசிய இலங்கை மக்கள்!

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை இழந்து வெளியேறியுள்ளனர்.

 

அந்த வகையில் இதுவரை ஆட்சிசெய்து தற்போது வெளியேறிய முன்னாள் எம்.பிக்களின் விபரங்கள் பின்வருமாறு…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி ஆதிக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய,

இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

மண் கவ்வியது தமிழ்தேசிய கட்சிகள் – தேசிய மக்கள் சக்தி வசமானது யாழ்ப்பாணம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 63,327 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 22,513 வாக்குகள்

வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 29,711 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட விசேட சித்தி!!!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்து வருகின்றது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நலையே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தேசிய மக்கள் சக்தி யாழில் இரண்டு முதல் மூன்று ஆசனங்களையும் தமிழரவுக் கட்சி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக் ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி இரண்டு முதல் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்ககு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி வருகின்றது. சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக வடக்குக் கிழக்கும் தெற்கும் இணைந்து இனவாதத்தை புறம் தள்ளி ஒரு தேர்தலைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர். 113 ஆசனங்களை வெற்றிகொள்ளும் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை அமைக்கும். தற்போது என்பிபி அனுதிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்தேசிய கட்சிகளை ஓரங்கட்டியது தேசிய மக்கள் சக்தி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி – 9,066 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,399 வாக்குகள்

வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) – 639