இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட விசேட சித்தி!!!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்து வருகின்றது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நலையே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தேசிய மக்கள் சக்தி யாழில் இரண்டு முதல் மூன்று ஆசனங்களையும் தமிழரவுக் கட்சி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக் ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி இரண்டு முதல் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்ககு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி வருகின்றது. சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக வடக்குக் கிழக்கும் தெற்கும் இணைந்து இனவாதத்தை புறம் தள்ளி ஒரு தேர்தலைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர். 113 ஆசனங்களை வெற்றிகொள்ளும் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை அமைக்கும். தற்போது என்பிபி அனுதிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *