04

04

“தமிழ்-முஸ்லீம் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி”  – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

“தமிழ்-முஸ்லீம் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி”  என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பயணம் எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்ட பயணமாக  இருக்க வேண்டும் இந்தப் பயணத்தில் தமிழ்த் தலைவர்கள் மீது முஸ்லீம் தலைவர்கள்  நம்பிக்கை வைக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

எனது எதிர்பார்ப்பாகும் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் இந்த நிகழ்ச்சி நிரல் எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் தமிழர்கள்-முஸ்லிம்கள் என்று வேறுபடுத்தும் ஆட்சியாளர்களுக்கு துல்லியமாக பதில் சொல்ல வேண்டியுள்ளது இந்த நிலவரத்தை ஏற்படுதோயவர்களும் அவர்கள் தான். அருவருப்பாக இந்த வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியவர்கள் ஆட்சியாளர்கள் அவர்களது சட்ட திட்டங்கள் காட்டு தர்பார்கள்.   அவர்கள் நினைப்பதுதான் சட்டம். நினைப்பவர்களை  பிடிப்பார்கள். நினைப்பவர்களை விடுதலை செய்யும் அளவிற்க்கு சட்டம் மௌனிதுள்ளது என குறிப்பிட்டார்.

தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு – வவுனியா பூவரசங்குளத்தில் சம்பவம் !

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று(04.02.2021) வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா !

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாரான தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உட்பட 36 பேர் பேருக்கு நேற்று முன்தினம்  (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொற்று உறுதியான லஹிரு திரிமன்னே மற்றும் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தரும் அரசாங்கத்தின் கொரோனா தொற்று தொடர்பான நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

“விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர் – அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். ’’ – விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
நாளை போட்டி குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருடன் நாங்கள் போட்டியை தொடங்க விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப்பின் கடுமையான பயிற்சி மூலம் சிறப்பாக வந்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேசுவோம். இந்த பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுதியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ‘‘அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர்’’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

“2வது உலகப் போரில் பங்கேற்ற கப்டன் சேர்  டொம் மூர் காலமானார் !

2வது உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த  கப்டன் சேர்  டொம் மூர் (Tom Moore), உடல்நலக் குறைவால் தனது 100 ஆவது வயதில்  நேற்று(03.02.2021) காலமானார்.

இவர் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டு 53 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக திரட்டி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டொம்  மூர், கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி  கொரோனாத் தொற்றினால்  பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமாகிய நிலையில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அவரது குடும்பத்திற்கு பிரித்தானியாவின் ராணி எலிசபெத், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், “டொம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவை கோரி நாளை முடங்குகிறது மலையகம் !

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி நாளை ஐந்தாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க, இன, மத, பேதமின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் நாளைய தினம் மலையகம் முடங்கும் என ஹட்டனில் இன்று (04.02.2021) நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில், சகல ஆசிரியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர். ஆகவே, நாங்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஏனைய பிரதேசங்களில் ஒரு பிரச்சினை வரும்போது ஹர்த்தலாக நடத்தி அந்தப் பிரச்சினையினை வெற்றி கொள்கின்றனர். ஆனால், மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.டி.நாதன் கூறுகையில், “நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பதில் பெருமையடைகின்றோம்.

இந்தப் போராட்டத்தில் சிங்கள ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே, சுகயீன விடுப்பு அறிவித்து இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைத்து பிரிவினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஆசிரிய கல்வியியல் காங்கிரஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவிக்கையில், “இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதி ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

எனவே, தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைய ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுப்பு கோரி இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம், பெற்றோர்கள் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதோடு நேற்று பல தரப்பினர் எம்மிடம் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி, முச்சக்கரவண்டி சங்கங்கள், தனியார் பேருந்து சாரதிகள், வர்த்தகர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தினை முன்னின்று நடத்துவதற்கு முன்வந்துள்ளனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் மலையகத்தில் பூரண ஹர்த்தாலாக மாறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் ” – யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்” என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் எமது தமிழ் மக்கள் தாயகத்தில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை !

ரஷ்ய ஜனாதிபதி புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.

ஆனால், புடின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா  முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு !

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15-ஆம் திகதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய இராணுவக் குழு, அங்கிருந்து 10 ‘வாக்கி டாக்கி’ கருவிகளையும், வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி முறைகேடு வழக்கில் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் ” – இந்திய பொலிஸாரின் வழக்கு பதிவுக்கு கிரேட்டா தன்பெர்க் பதிலடி !

இந்திய அரசு அமுல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார் ஏற்படுத்ததியுள்ளனர். பேரிகார்கடுகளை வரிசையான வைத்து சாலைகளில் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையதள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.
அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை கேள்விகளால் துளைத்த சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவான டுவீட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில்