2021

2021

தடுப்பூசி அதிகமாக செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் !

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை  பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக Our World  இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளதுடன், ஈக்வடோர் 12.5 சதவீதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து  புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா  ஆகியன முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இதேவேளை குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம், இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தையும் தடைசெய்யுங்கள்.” – பொதுபல சேனா

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி? - www.pathivu.com

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில் , இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிக்கை ஒன்றைின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

நியூஸிலாந்து ஒக்லாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றமையை அரசாங்கம் ஒருபோதும் கருத்திற் கொள்ள கூடாது.

அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட நபரால் கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸிலாந்து புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நபர் 2017 ஆம் ஆண்டு நியூஸிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேஸ்புக் பக்கங்கள் ஊடாக இஸ்லாம் மத தீவிரவாதத்தை வளர்ப்பற்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இருப்பினும் மனித உரிமை காரணிகளையும், ஏனைய பொது காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இவரை நியூஸிலாந்து பாதுகாப்பு தரப்பினர் அவரை இரகசியமாக கண்காணித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் தீவிரவாதி என சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் யார்..? – வெளிவந்துள்ள ஆரம்பகட்ட தகவல்கள் !

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி? - www.pathivu.com

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பால புனரமைப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடியவர்கள் கைது !

பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரும்புக் குழாய்களின் பெறுமதி 1,615,000 ரூபாய் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (03) பேலியகொடை காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இரும்புக் குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

31, 35, 50 மற்றும் 66 வயதுடைய சந்தேகநபர்கள் வெலிகம, ஹிக்கடுவை, தெமடகொடை மற்றும் தெணியாய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (04) புதுக்கடை இல.05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் பேலியகொடை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“ஐ.நாவில் இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.” – ஜி.எல்.பீரிஸ்

“ஐ.நாவில் இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.” என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் நாட்டின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய முத் துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் நடைப்பெறவுள்ளன. இவ்விரு கூட்டத்தொடர்களிலும் இலங்கை விவகாரம் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும்-என்றார்

உலக நாடுகள் வழங்கிய லட்சக்கணக்கிலான தடுப்பூசிகளை திருப்பியனுப்பிய வடகொரியா !

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.

வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 இலட்சம் டோஸ் அஸ்டராஸெனெகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்தது.

பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி தடுப்பூசிகளை மறுத்ததாக உளவுத்துறையுடன் தொடர்புடைய தென்கொரியாவை சேர்ந்த சிந்தனைக் குழு ஒன்று தெரிவித்தது.

அதேபோல ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது சீனாவால் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி வரை வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.

வடகொரியாவின் அரச ஊடகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆப்கானில் ஆரம்பித்தது தலிபான்களில் பழைய ஆட்சி – பெண்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு இல்லை !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா இத்தாலி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

“எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பெண்கள் மருத்துவமனைகளில் செவிலியராகவும், காவல்துறையிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அமைச்சரவையில் உதவியாளராக இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால்,தலிபான்கள்  தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆப்கானிஸ்தானைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது” என்று சபிஹுல்லா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாகவே சீனாவின் முக்கிய அமைச்சர்களுடன் தலிபான்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுடனான (தலிபான்கள்) நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம் என்று சீனா சமீபத்தில் கூறியது.

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நியூசிலாந்தில் மக்களை கத்தியால் குத்திய இலங்கையர் – தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர் என பிரதமர் அறிவிப்பு!

நியூசிலாந்தில் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறித்த நபர் இலங்கையர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் ஆக்லாந்து அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள பல்பொருள் அங்காடியினுள் உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர் கத்திகள் விற்கும் பகுதிக்கு சென்று, அங்கு இருந்து ஒரு புதிய கத்தியை எடுத்து மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இந்த கத்தி குத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இவர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சரியாக ஒரு நிமிடத்தில் அங்கிருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இவரை சுட்டுக்கொன்றனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த தீவிரவாதியை கொன்றனர்.

 

இதனால் அங்கு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென், இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. தீவிரவாதியை துரிதமாக செயல்பட்டு பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் குறித்து அதிகம் என்னால் பேச முடியாது. அவர் இலங்கையை சேர்ந்தவர். கடந்த 2011ல் நியூசிலாந்தில் குடியேறி இருக்கிறார். அவர் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். காவலர்கள் துரிதமாக செயல்பட்டதால் இதில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று விசாரிக்கப்படும். கொல்லப்பட்ட நபர் தேடப்பட்டு வந்த தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது என்று, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்புக்கு உதவுங்கள் – இலங்கையிடம் லிபிய அரசு வேண்டுகோள் !

இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தாவை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் பீரிஸ் அண்மையில் புதிதாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக, லிபிய வெளிநாட்டு அமைச்சரின் பாராட்டுக்களை லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

லிபியாவின் தற்போதைய நிலைமை, குறிப்பாக மார்ச் 2021 முதல் பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். 2021 டிசம்பர் 24ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுதந்திரத்திற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் 1931ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் உலகளாவிய வாக்குரிமையை அனுபவித்து வருவதனை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் லிபியாவின் முயற்சிகளுக்கு ஜனநாயக நாடாக இலங்கை ஆதரவளிப்பதாகவும், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதனூடாகவும், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதனூடாகவும் அரசாங்கம் பொருளாதார இராஜதந்திரத்தில் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார். தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் லிபியாவுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் லிபியத் தூதுவருக்கு அறிவித்ததுடன், சர்வதேச அளவில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.