06

06

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீடிப்பு !

விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின்  உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளை தனது புதிய பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடையானது 30 உறுப்பு நாடுகளில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கஹால்சா, ஹிஸ்புல் முஜாதீன், காலிஸ்தான் சிந்தபாத் ஹமாஸ், ஹிஸ்புல்லா, துருதிஷ்தான் தொழிற்கட்சி, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உட்பட 20 அமைப்புகளுக்கான தடையை நீடிப்பது என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூலை 30 ஆம் திகதி தீர்மானித்தது.

அதேவேளை பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் அந்த வழக்கின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் குணமடைவு!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 25,29,952
பிரேசில் – 20,20,637
இந்தியா -12,82,215
ரஷியா – 6,69,026
தென் ஆப்ரிக்கா – 3,77,266
சிலி – 3,38,291
பெரு – 3,02,457
மெக்சிகோ – 3,00,254

கொரோனா ஊரடங்குகளால் சுமார் 100கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகள்சபை  தெரிவித்துள்ளது.

“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா  வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள்  கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர்!

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கூறும்போது, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல  பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் சில முக்கிய விடயங்கள் !

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளது.

காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்ததோடு, தேர்தல் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்றது, 16,263,885 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறிய 520 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • நாளை காலை நாளை (06) வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • காலை 07.00 மணிக்கும், 08.00 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • பொதுத் தேர்தலின் முடிவுகள் பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகும்.  
  • தேர்தலின் இறுதி முடிவு ஓகஸ்ட் 06 வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படவுள்ளது.
  • விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஓகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்.
  • அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 08 சனிக்கிழமையன்று வர்த்தமானியில் வெளியிடப்படும்.
  • ஓகஸ்ட் 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் தேசிய பட்டியல்கள் தொடர்பான அறிவித்தல் வெளியாகும்.
  • பொதுத் தேர்தல்கள் 2020 தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஓகஸ்ட் 10 திங்கட்கிழமைக்குள் வர்த்தமானியில் வெளியாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  அஜ்மானில் அமைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இராச்சியத்தின் புதிய தொழிற்துறை பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு பேரழிவு இடம்பெற்று அது தொடர்பான இழப்புக்கள் முழுமையாக வெளிவராத நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அஜ்மானில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் தேர்தல் முடிவு 2.30 க்கு பின்னரே..! – மஹிந்த தேசப்பிரிய 

பாராளுமன்றத்தேர்தலுக்கான வாக்டிகெடுப்புக்கள் நேற்றையதினம் முடிவடைந்த நிலலயில் இன்று  வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று பிற்பகல் 2.30க்கும் 3.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட ரீதியில் வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.