October

October

ஆப்ரிக்காவுக்கு குப்பையான ஆன்மிக சிந்தனைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை

051009pope.jpgஆப்ரிக் காவில் வேறுவகையான காலனித்துவம் உருவாகி வருவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்ரிக்க பிஷப்புகளின் மூன்று வார கால மாநாட்டை ஆரம்பித்து வைத்த போப் பெனடிக்ட் அவர்கள், அரசியல் காலனித்துவம் முடிவடைந்து விட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகள் குப்பைக்கு ஈடான ஆன்மிக சிந்தனைகளை ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். அத்தோடு மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரோமின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனையுடன் இந்த மாநாட்டை போப் பெனடிக்ட் ஆரம்பித்து வைத்தார். இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவின் சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும்.

புதையுண்ட இந்தோனேசியா கிராமம்- அனைவரும் பலி

01-indonesia.jpgகடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேற்றில் புதைந்து, மக்கள் அனைவரும்பலியாயிருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவை கடந்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இதனால் சுமத்ரா தீவு பகுதியே ஆட்டம் கண்டது. கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை இடிந்து விழுந்ததில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இவர்களுடன் ஜப்பானிய குழுவினரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமத்ரா தீவு தலைநகர் படாங் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் அடுத்ததாக அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கும் லுபக் லாவே உட்பட மேலும் 2 கிராமங்களில் மீட்பு பணிகளுக்காக சென்றனர். இந்த மூன்று கிராமங்களுக்கும் அருகில் ஒரு எரிமலை உள்ளது. அங்கு சென்ற மீட்பு படையினர் லுபக் லாவே என்ற கிராமமே ஒரு பெரிய சேற்றில் புதையுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அந்த கிராமத்தில் இருந்த 200 பேரும் பலியாகிவிட்டனர். மேலும், நிலநடுக்கத்தன்று நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மக்களும் இறந்துவிட்டனர். சேற்றின் மீது வேரோடு பிடுங்கப்பட்டு புதையுண்ட சில மரங்களின் பாகங்கள், சில பொம்மைகள் ஆகியவை மிதக்கின்றன. இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பாபி ஹெரியன்டோ என்பவர் கூறுகையில், நாங்கள் மூன்று அடி ஆழத்துக்கு சேறுகளை நீக்கிவிட்டு இந்த உடல்களை மீட்டோம். இதற்கு சுமார் மூன்று மணி நேரம் தேவைபட்டது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்

இது போல் சுமத்ரா தீவில் மேலும் சில இடங்களில் சேற்றுசரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு சேதம் சிறியளவில் தான் இருக்கிறது. பயப்பட தேவையில்லை என்றார்.

கிளிநொச்சி இராணுவ தலைமை வளவுக்குள் இடம்பெற்றது விபத்தே! இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgநேற்றுக் காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்றுக்காலை இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இக் குண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த கன்டேனர் வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீயினாலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு விபத்தெனவும் இதனால் எந்தவொரு உயிர் ஆபத்தோ சேதமோ ஏற்படவில்லையெனவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

தென்னிந்தியாவில் மழையால் 200 க்கும் அதிகமானவர்கள் பலி

051009andhra.jpgதென்னிந் தியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதுவரையில் 200 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எண்ணுவதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பெருமளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பயிர்கள் நாசமாகியுள்ளன. மீட்கட்டமைப்புக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவையாக இருக்கும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக குடியிருப்பு தினம் இன்று

260909house_new.jpgஉலக குடியிருப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

“எமது நகரத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்திற்கான உலக குடியிருப்பு தினம் நினைவு கூரப்படுகின்றது.

இலங்கையில் குடியிருப்பு தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

உலக  குடியிருப்பு தினத்தின் நிமித்தம் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு நடாத்திய கட்டுரை மற்றும் சித்திரம் வரைதல் தமிழ் மொழி மூலப் போட்டிகளில் வவுனியா, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளே முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசில்கள் உலக குடியிருப்பு தினமான இன்று 5ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது.

உலக குடியிருப்பு தினத்தின் தேசிய மாநாடு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் அமைச்சர்கள் பேரியல் அஷ்ரஃப், தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

இவ்வைபவத்தில் மேற்படி மாணவ, மாணவிகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ் மொழி மூலக் கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த பிரிமேகன் அபிலாஷா முதலாமிடத்தையும் சிரேஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் அனித்தா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்படும்.

வெளிநாடுகளுக்கு படகு மூலம் ஆட்களை அனுப்பிய மூவர் கைது

வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படும் மூவர் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே சிலாபத்தில் வைத்து இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

தபால் நிலையங்களில் வாக்காளர் அட்டைகள்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு இன்று (5) முதல் தேர்தல் தினம் வரை தபால் நிலையங்களினூடாக வாக்காளர் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இரானின் இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலையை ஆய்வாளர்கள் பார்வையிடுகின்றனர்

051009nuclearsite.jpgஇரான் சமீபத்தில் அறிவித்த குவாமில் இருக்கின்ற இரண்டாவது அணு செறிவாக்கும் ஆலையை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அக்டோபர் 25 ம் தேதி அன்று பார்வையிடுவார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹமது எல்பராடி கூறியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மொஹமது எல்பராடி, இரானுடனான உறவு குறித்து சாதகமாக பேசினார். தாங்கள் மோதல் நிலையில் இருந்து இப்போது ஒளிவுமறைவற்றதன்மை, புரிந்துணர்வு என்ற நிலைக்கு செல்வதாகவும், இருந்தாலும் ஒரு சில கவலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலை குறித்த செய்தி மேற்கத்தைய நாடுகள் இடையே இரானின் அணுசக்தி குறிக்கோள்கள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்ற அணுசக்தி திட்டங்களை போல இந்த ஆலையும் அமைதி பயன்பாட்டிற்கு மட்டுமே என இரான் கூறிவருகிறது.

மக்கள் வங்கியும் நீச்சல் தடாகமும் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

0501009.jpgமாத்தறை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் புதிய நீச்சல் தடாகமும் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

மாத்தறை நகரில் சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த போதே ஜனாதிபதி மேற்படி இரு நிகழ்விலும் கலந்து கொண்டு பதினேழரைகோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையையும் ஒன்றரை கோடி ரூபா செலவிலான நீச்சல் தடாகத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நேற்றுக் காலை மாத்தறை நகர புதிய மக்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் வங்கித் தலைவர் டபிள்யூ. கருணா ஜீவ உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றதுடன் வங்கிக் கிளையைத் திறந்து வைத்த ஜனாதிபதி வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து அதன் நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜீவன் குமாரதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாயாரின் நினைவாக நேற்று மாத்தறை பாலடுவ குணரத்ன வித்தியாலயத்தில் இடம்பெற்ற புண்ணியோற்சவ நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அங்கு பிரசன்னமாகியிருந்த 600 புத்தபிக்குகளுக்கும் அன்னதானம் வழங்கிச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் வாகனமொன்றில் பெருந்தொகை ஆயுதங்கள்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகனமொன்றிலி ருந்து பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிரு ப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

குருநாகல் மாஸ்பொத்த பகுதியில் வைத்து 56-9968 என்ற இலக்கம் கொண்ட வான் ஒன்றிலிருந்தே சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு, இலத்திரனியல் டெட்டனேட்டர்கள், கிரனைட்டுகள், ரவைகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வாகனத்திலிருந்து நேற்று 340 – ரி56 ரவைகளும், 5 கிலோ கிராம் நிறை கொண்ட ஆறு கிளேமோர் மைன்கள், 04 – ரி-56 தோட்டாக்களும், 100 – இலத்திரனியல் டெட்டனேட்டர்களும், 288-9 மில்லி மீற்றர் ரவைகளும், 02 – ரிமோட் கருவிகளும், 06 – 9 வோல்ற் பற்றரிகளும், 06 கிளேமோர் குண்டு பொருத்திகளும், மைக்ரோ பிஸ்டல் ஒன்றும், 50 மீற்றர் டெட்டனேட்டர் கோர்ட்டும், 06 – கிரனேற் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.