தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு இன்று (5) முதல் தேர்தல் தினம் வரை தபால் நிலையங்களினூடாக வாக்காளர் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றன.