கிளிநொச்சி இராணுவ தலைமை வளவுக்குள் இடம்பெற்றது விபத்தே! இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgநேற்றுக் காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்றுக்காலை இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இக் குண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த கன்டேனர் வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீயினாலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு விபத்தெனவும் இதனால் எந்தவொரு உயிர் ஆபத்தோ சேதமோ ஏற்படவில்லையெனவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பல்லி
    பல்லி

    புலிகளின் குண்டு தவறுதலாய் வெடித்தாலே பலபேர் மரணமாவதுதானே வழமை; இப்படிதான் கேடியும் பொன்னரும் வாய்பாத்து பலியானதாய் மாற்று அமைப்பினர் சொல்லி கேட்டேன்; நாணயகாராவின் ஆயுள் கிளினொச்சிவிட்டு அகலாது போல் உள்ளது;

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். /
    எந்த இராணுவ அமைப்பும் தமது தலைமை அலுவலக வளவுக்குள் எக்கரம்கொண்டும் வெடிபொருட்கள் மற்றும் குண்டு போன்றவற்றை உள்ளே அனுமதிப்பதில்லை ஒரு குறிப்பிட்ட பாதுகாவலரை தவிர மற்றவருக்கும் ஆயுதத்துடன் அங்கு செல்லமுடியாது.

    Reply
  • Thaksan
    Thaksan

    ஜனாதிபதி> பாராளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை இப்பிடி குண்டு வெடிப்பும்> குண்டு கண்டுபிடிப்பும் தொடரும்போல் தெரிகிறது. பிரபாகரன் அல்லது புலி எண்ட ஒன்று இருந்தது என்பதை சிங்கள் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை மகிந்த அரசுக்கு வந்துவிட்டது. 6 மாத காலத்துக்குள் அவர்களை மறக்குமளவிற்கு பொருளாதார நெருக்குதல்கள் மக்களுக்கு. தமிழ்சனங்களும் புலிகளை மறக்க தொடங்கிற கட்டத்திற்கு வந்திட்டினம். அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சனைகள். பாவம் மக்கள் எண்ட காலம்போய் பாவம் போராளிகள் என்ற கட்டம். அவனவன் உயிரையே கொடுத்தான் தமிழீழ கனவுகளுடன். “நாடுகடந்த தமிழீழம்” என்ற புலம்பெயர் பொருளாதார அகதிகளின் பிடிக்குள் தமிழீழ கனவு சென்றடைந்துள்ளது. உண்மையில் பாவம் புலம்பெயர் உறவுகள். இன்னமும் ஏமாற அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு உயிர்ப்பயம் அங்கில்லை. ஆகவே கனவுகளுடன் வாழ்ந்து அழிய அவர்களாகவே விரும்புகிறார்கள். இன்னமும் குறைந்தது 10 வருடங்களுக்காகவாவது தமிழீழ கனவு தன்னை தக்கவைத்துக் கொள்ளும்.

    Reply
  • appu hammy
    appu hammy

    First they found van fitted with claymore mines in Kurunegala then they recovered Charles Anthony suicide kit, other items from Vavuniya. Now defence secretary is in USA to explain the security situation in Sri Lanka.I don’t think USA shall mislead by these news. That news is supposed to be the reasons to delay the resettlement of the IDPs?

    Reply