May

May

இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானமாக வாழ விரைவில் பேச்சுவார்த்தைகள்

israil-egept.jpg
இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபிட்சத்துடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், சமாதானப் பேச்சுகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் தனது விருப்பம் என்றும் இஸ்ரேலின் பிரதமர் பென்யாமின் நெத்தன்யாஹூ கூறியிருக்கிறார்.

ஆறு வாரங்ககு முன்னர் இஸ்ரேலியப் பிரதமராக பதவியேற்ற இவர், அரபு நாடு ஒன்றில் மேற்கொளும் முதல் விஜயமாக எகிப்து சென்று அதிபர் ஹோஸ்னி முபாரக் அவர்களுடன் ஷரம் எல் ஷேக்கில் பேசிய போது இக்கருத்துக்களை வெளியிட்டார்.

இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கும் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

ஐ. நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை ஆராயும் முயற்சி தோல்வி

UN_Logoஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயும் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.

ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பையடுத்து இம்முயற்சிகள் தோல்விகண்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் குறித்த விடயம் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாக்களிப்பு அவசியமாகும். மேற்குலக ராஜதந்திரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் அவசியமில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இவ்விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்த போதும் ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

இலங்கையில் இடம்பெறும் நடவடிக்கைகள் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் எத்தகைய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதால் பாதுகா ப்புச் சபையில் இந்த விடயம் ஆராயப்படத் தேவையில்லை யென்று மேற்படி மூன்று நாடு களும் தெரிவித்துள்ளன.

சித்ரவதைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அபுதாபி ராஜ குடும்பத்தவர் கைது

_uae_dubai_.gifஅபுதாபியில், ஒரு நபர் சித்ரவதை செய்யப்படுவதை காட்டும் வீடியோ படம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்நபரைச் சித்ரவதை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச குடும்ப உறுப்பினர் ஒருவரை பொலிசார் தடுத்துவைத்துள்ளனர்.

அமெரிக்க தொலைக்காட்சி குழுமமான ஏ பி சி யால் கடந்த மாதம் ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோ  படத்தில், ஒரு மனிதன் தாக்கப்பட்டது காட்டப்பட்டிருந்தது. சாட்டையால் அடிக்கப்பட்ட அவர் மீது தீ வைக்கப்பட்டு, இறுதியாக அந்த மனிதர் மீது கார் ஏறிச் சென்றதும் காட்டப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் பெயர் ஷேக் இசா பின் ஜையன் அல் நஹ்யான். இவர் அபுதாபியின் பட்டம் சூட்டப்பட்ட இளவரசரின் சகோதரர். ஆனால் இவருக்கு அதிகார பூர்வ பணி ஏதும் கிடையாது.

அபுதாபியின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது முதல் முறையாக இப்போதுதான் விசாரணை நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்தப் பிரச்சனை தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டு விட்டதாக முன்பு அதிகாரிகள் கூறி வந்தனர்.

சப்ரகமுவ ஆளுநர் மொஹான் எல்லாவெல நேற்று காலமானார்

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லா வெல (61வயது) நேற்று (12) கொழும்பில் காலமானார். நோய் வாய்ப் பட்டு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று பகல் (12) மரணமடைந்ததாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.

இவர் கடந்த 2008 அக்டோபர் மாதம் 2ம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக அமைச்சராக, சபை தலைவராக மற்றும் மாகாண முதலமைச்சராக கடமையாற்றியுள்ள இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராவர். 1976ம் ஆண்டு விவசாய அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவவின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நந்தன எல்லாவெலயின் சகோதரரும் மொஹான் எல்லாவெலயின் சிறிய தந்தையுமாவார். இவர் 1991ம் ஆண்டு முதல் பலாங்கொடை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக பணியாற்றினார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை நகரில் இடம்பெற உள்ளதோடு இறுதிக்கிரியை தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என உதவிச் செயலாளர் விஜேவர்தன கூறினார்.

முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்.

ibatticaloa-sri-lanka-01.jpgஎதிர்வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டக்களப்பு நகரில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கடந்த வருடம் பதுளையில் ஊவா மாகாண முதலமைச்சர் விஜயமுனி சொய்சா தலைமையில் முதலமைச்சர் மாநாடு நடைபெற்றது. அவ்வேளை, 2008 -2009 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர்கள் மாநாட்டுத் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவானார்.

அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில் 2009 ஆம் ஆண்டுக்கான மாநாடு மட்டக்களப்பில் நடை பெறுகின்றது. மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் 8 மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேல் மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிரசன்னா ரணதுங்க கலந்து கொள்ளும் முதலாவது முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும் .

இம்மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் நகர பிரதேசத்திலுள்ள 7 பாடசாலைகள் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மூடப்படுகின்றன. இதனைத் தவிர நகரிலுள்ள வியாபார நிலையங்களில் சேவையாற்றும் சிப்பந்திகள் பற்றிய விபரங்களும், அங்கு தங்கியிருப்பவர்கள் விபரங்களையும் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.

மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிற மாவட்டங்களிலிருந்து பொலிஸார் விசேட கடமையின் நிமித்தம் வருகை தரவிருப்பதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநாடு நடை பெறும் நாட்களில் அரச மற்றும் தனியார் பஸ் நிலையங்கள்,ஆட்டோ தரிப்பிடங்கள் ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை ஆயுர்வேத வைத்தியசாலை ரூ. 4000 மில். செலவில் அபிவிருத்தி

ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரியை சுமார் நாலாயிரம் மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச மருத்துவத் துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் ஊடாக இந்த ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டத்தின் கீழ் ஒரு வார்ட்டில் ஐம்பது பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வகையில் பத்து வார்ட்டுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் :-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போதனா ஆஸ்பத்திரியாக ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி உள்ளது. யுத்தம் காரணமாக இந்த ஆஸ்பத்திரி பெரிதும் பாதிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கிலுள்ள ஒரே சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி இதுவே ஆகும். இதனைப் புலிகள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாலேயே இதன் கட்டடங்கள் பெரிதும் சிதைவடைந்துள்ளன. வடக்கு வசந்தத்தின் கீழ் பத்து வார்ட்டுகளும், மருந்துப் பொருள் உற்பத்தியகமும், மருந்தகமும், ஆய்வுகூடம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு, நிர்வாகக் கட்டடத் தொகுதி ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன என்றார்

யூதவாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறுகிறார் போப் ஆண்டவர்

pope_afp.jpgயூத வாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், அவை எங்கு காணப்பட்டாலும், எதிர்க்கப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் கிறித்துவ புனிதத் தலங்களுக்கு அவர் மேற்கொண்டிருகும் யாத்திரையின் இறுதிக் கட்டமாக இஸ்ரேல் போய்ச் சேர்ந்த போப் ஆண்டவர், இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நாஜி ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட 60 லட்சம் யூத மக்களை அவர் நினைவு கூர்ந்ததோடு அவர் இஸ்ரேலிய பாலத்தீனயத் தலைவகளோடும் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் தத்தமது தாய்நிலத்தில், சமாதானமாக வாழ் எல்லா வழிவகைகளும் ஆராயப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுளார்.

கடற் கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் இலங்கையில்

ship.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் நேற்று முன்தினம்  விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான மலஸ்பினா காசல் எனும் சரக்கு கப்பல் தற்சமயம் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் இந்த சரக்கு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஆறு நாட்கள் வரை தரித்து நிற்கும் என தெரியவருகின்றது.

பல்கேரிய மாலுமிகளை அதிகளவில் கொண்ட இந்த சரக்கு கப்பல் கடற் கொள்ளையர்களால் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சரக்கு கப்பல் (10) விடுவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் கோரிக்கைக்கு இணங்க கப்பப் பணம் செலுத்தப்பட்டதாக பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் மிலன் கேரிமெட்சிவ் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2010 பெப்ரவரியில் ஜனாதிபதி தேர்தல் அதனை எதிர்கொள்ள ஐ.தே.க. தயார்

unp.jpgமுதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருப்பினும் அரசாங்கம் அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் (2010) பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளது. எனவே, எந்தத் தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க ஐ.தே.க. தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி ஜானக்க ஹோட்டல் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார். முதலில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலையே அரசு நடத்தவேண்டும். ஆனால், அது ஜனாதிபதித் தேர்தலை முன்னதாக வைக்க தீர்மானித்துள்ளது. ஐ.தே.க. எந்தவொரு தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க எப்போதும் தயாராகவே உள்ளதென்றார்.

பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 3 வருட சிறைத்தண்டனை.

credit-card.jpgபிரித்தானிய Northampton Crown Court கடனட்டை மோசடியில் ஈடுபட்ட சுந்தரம் தேவரத்தனம் வயது 33 என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நோர்த்அம்ரன் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் காசாளராக கடமை புரிந்து வந்த இவர் 1000 இக்கு மேற்பட்ட கடனட்டைகளுடன் தொடர்புபட்ட 300 000 ஸ்ரேலிங் பவுண்கள் மோசடிக்கு உதவியுள்ளமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.