May

May

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

mahinda-rajapaksha.jpgநேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்ற மாதவ் குமார் நேபாளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் பொதுவுடைமைவாதக் கட்சித் தலைவரான மாதவ் குமார் கடந்த 25ஆம் திகதி அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்தார். நேபாளப் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள ஜனாதிபதி,  இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான சரித்திர முக்கியத்துவமிக்க நெருக்கத்தையும் நட்புறவையும் ஞாபகப்படுத்தினார்.

உங்களது தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெரும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தங்களது நியமனம் நேபாளத்துக்கு ஒரு முக்கிய திருப்பம் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,  நேபாளத்தில் ஜனநாயக ரீதியான புதிய அரசியல் வழமுறைகள் உருவாக வேண்டும் என்றும் இச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்கள் பாதுகாப்பின் கீழ் வெளியேற அரசாங்கம் அனுமதி

வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள வயோதிபர்கள், காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களை அவர்களது உறவினர்களின் பாதுகாப்பின் கீழ் முகாமைவிட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கம் அல்லது பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு) நிமால் லிவ்கேயுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்க ப்பட்டுள்ளது.

வயோதிபர்களை அவர்களது உறவினர்களுடன் அனுப்புவதற்கான தீர்மானம் முன்னமே எடுக்கப்பட்ட போதும் காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களையும் அனுப்புவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்வதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக மேற்படி விடயமே ஆராயப்பட்டது. முகாமுக்குள் உள்ள வயோதிபர், காயமடைந்தவர், அங்கவீனமானோர் தனது உறவினர் என்பதை உறுதி செய்யும் விதத்தில் கிராம சேவகர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தலுடன் தான் குறிப்பிட்ட நபரை பராமரிக்க தகுதியுடையவர் என்பதையும் உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களை சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கத்துக்கோ (001- 2883525) பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு பிராந்தியம்) நிமால் லிவ்கேயுடனோ (024-2222227) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

வவுனியா அரச அதிபரூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத் திட்டத்திற்கு சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இணைப்பாளராக செயற்படுவார்.

சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலிகளை தேடி அழிக்கும் பணி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கல்முனை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு சுற்று வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளியில் காணப்படும் நாணல்காடு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அப்பிரதேசம் நோக்கி நாலா புறத்திலிருந்தும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை ஆறு மணி தொடக்கம் குண்டுத் தாக்கதல் நடத்திய விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசம் ஆழம் கூடிய சகதியான சூழலைக் கொண்டுள்ளதால், தேடுதல் நடவடிக்கை முடிவடைய காலதாமதம் ஏற்படும் என அறிய முடிகிறது.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படும்போது கடந்த காலத்தில் இந்த நாணல்காட்டில் புலிகள் தங்கியிருந்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அதே பாணியில் இந்த நாணல் காட்டை தற்போது எஞ்சியுள்ள புலிகள் பயன்படுத்த எத்தனித்து வருவதாகவும், அதற்காகவே இப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

iair-force.jpgபுதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இஸ்ரேலில் வடிவமைக்கப்பட்ட இந்த ரேடர் விமானம், ரஷ்யாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை கொண்டு 500 கி.மீ., தூரம் வரையில் கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்று தெரிகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி முறைப்படி விமானப் படைக்கு அர்ப்பணித்தார். 

வாகரை இராணுவ முகாமில் மூன்று புலிகள் சரண்

மட்டக்களப்பு வாகரை இராணுவ முகாமில் எல். ரீ. ரீ. ஈ. இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். வாழைச்சேனை கொண்டையங்கேணி யைச் சேர்ந்த புகழேந்தி என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை அமரசிங்கம், வாகனேரியைச் சேர்ந்த ஹரன் என்றழைக்கப் படும் பரமக்குட்டி சாமுவேல், முள்ளிவட்டவானைச் சேர்ந்த ராகுலன் என்றழைக்கப்படும் செல்லப்பா சிவாநந்தன் ஆகியோரே சரணடைந்துள்ளவர்களாவர்.

இவர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள்- 3, கைக்குண்டுகள் -03, கிளேமோர் குண்டு-1, டெட்டனேட்டர்கள்-3 ஆகிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்துள்ளனர். வாகரை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவிக்கப் படுகிறது.

28 வயதில் மத்திய அமைச்சரான இளம்பெண்

agatha_sangma.jpgமன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகதா சங்மா (28),  மிகக் குறைந்த வயதில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மாவின் மகள்தான் இவர். மேகாலாயாவில் உள்ள துரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் அகதா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்- அமைச்சர் முரளீதரன்

muralitharan-mp.jpg“தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் ” என தேசிய நல்லிணக்க அமைச்சர் முரளீதரன் தெரிவிக்கின்றார்.

இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

“தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை.

சில தமிழ் கட்சிகள் இது வரை காலமும் விடுதலைப் புலிகளை வைத்துத் தான் வியாபாரம் செய்தனர். சில அரசியல் கட்சிகள் பிரபாகரனின் பெயரை விற்றார்கள் .இனி அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்புரிமைகளை அதிகரிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் எதிர் கட்சியாகவே உள்ளது. அவர்களால் இன்று பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதாவது அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பாரப்பு இருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எமது இனத்தின் தேவைகளை சீக்கிரம் நிறைவேற்ற முடியும்.”என்றும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்கள் திறப்பு : IOC நடவடிக்கை

loc_logo.jpgஇலங் கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறைவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து,  பெற்றோல் நிலையங்களே இல்லாத வடக்குப் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் உள்ளடங்கிய பகுதியிலும் புதிய நிலையங்களைத் திறக்க இந்தியன் ஒயில் உத்தேசித்துள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மேற்படி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் மக்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

இலங்கைப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது