நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்ற மாதவ் குமார் நேபாளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் பொதுவுடைமைவாதக் கட்சித் தலைவரான மாதவ் குமார் கடந்த 25ஆம் திகதி அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்தார். நேபாளப் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான சரித்திர முக்கியத்துவமிக்க நெருக்கத்தையும் நட்புறவையும் ஞாபகப்படுத்தினார்.
உங்களது தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெரும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தங்களது நியமனம் நேபாளத்துக்கு ஒரு முக்கிய திருப்பம் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நேபாளத்தில் ஜனநாயக ரீதியான புதிய அரசியல் வழமுறைகள் உருவாக வேண்டும் என்றும் இச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.