இலங் கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறைவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து, பெற்றோல் நிலையங்களே இல்லாத வடக்குப் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் உள்ளடங்கிய பகுதியிலும் புதிய நிலையங்களைத் திறக்க இந்தியன் ஒயில் உத்தேசித்துள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மேற்படி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
msri
இதற்காகத்தான்>சாட்சியமில்லா காட்டுமிராண்டித்தனமான மனிதப் படுகொலைகளை கூட்டாக செய்து முடித்தீர்களோ?