தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்- அமைச்சர் முரளீதரன்

muralitharan-mp.jpg“தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் ” என தேசிய நல்லிணக்க அமைச்சர் முரளீதரன் தெரிவிக்கின்றார்.

இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

“தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை.

சில தமிழ் கட்சிகள் இது வரை காலமும் விடுதலைப் புலிகளை வைத்துத் தான் வியாபாரம் செய்தனர். சில அரசியல் கட்சிகள் பிரபாகரனின் பெயரை விற்றார்கள் .இனி அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்புரிமைகளை அதிகரிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் எதிர் கட்சியாகவே உள்ளது. அவர்களால் இன்று பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதாவது அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பாரப்பு இருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எமது இனத்தின் தேவைகளை சீக்கிரம் நிறைவேற்ற முடியும்.”என்றும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rohan
    rohan

    இந்த கரப்பான் தொல்லை தாங்க முடியல்லப்பா

    Reply
  • msri
    msri

    ஏன் சின்னஞ்சிறிசுகளைக் கொல்வதற்கு>கொள்ளையடிப்பதற்கு>தமிழ்மக்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு> கூட்டணி உதவியும் வேண்டுமோ?

    Reply
  • மாயா
    மாயா

    //சில தமிழ் கட்சிகள் இது வரை காலமும் விடுதலைப் புலிகளை வைத்துத் தான் வியாபாரம் செய்தனர். சில அரசியல் கட்சிகள் பிரபாகரனின் பெயரை விற்றார்கள் .இனி அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//

    பிரபாகரனுக்கு பின் கருணாவை விற்க கூப்பிடுகிறீர் போல?

    Reply
  • sekaran
    sekaran

    கருணா உங்களில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பெருச்சாளிகளை கூப்பிட்டு வைத்துக்கொள்வது நல்லதல்ல. நாமே சாப்பாட்டுக்கு அலையவேண்டியிருக்கும் இந்த சமயத்தில் எதற்கு இவை? கவனம்: கொள்ளை நோய் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.

    Reply
  • மேளம்
    மேளம்

    மக்களுக்கு ஏதாவது அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பாரப்பு இருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்>.கருணா அம்மான்
    ஒன்டும் இல்ல பாருங்கோ வேலியால போற ஓணான புடிச்சி தன்ர மடிக்குள்ள கட்டப்போறாரு கருணா அம்மான். அவர்கள் ஏதோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டு இங்கிலாந்திலயும். பிரான்சிலயும். இந்தியாவிலயும் இருக்கிறார்கள் இவர் அவர்களோட லொள்ளுபண்ணுறார்.

    மேளம்

    Reply