Multiple Page/Post

வெளியிடங்களுக்குச் செல்வதற்கானவாகன அனுமதி நடைமுறை கிழக்கில் நீக்கம்

images.jpgமட்டக் களப்பு ,மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்காக இதுவரை காலமும் அமுலிலிருந்த வாகன அனுமதி நடைமுறை (பாஸ்) இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு அமைச்சு வழங்கியதையடுத்து கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிக்கு வாகனங்களில் வெடிப் பொருட்களும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தே வாகன பாஸ் நடை முறை 2006 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது.  இதற்கென தெரிவு செய்யபடப்ட பொலிஸ் சோதனை மையங்களில் வாகனங்கள் புறப்படும் தினத்தில் சோதனையிடப்பட்டு பயணிகள் உட்பட சகல விபரங்களும் பதிவு செய்யப்பட்டு 3 பிரதிகளை உள்ளடக்கிய பாஸ் வழங்கப்பட்டு வந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புறப்படும் பயணிகள் 3 பிரதிகளில் ஓட்டமாவடி பாலம் பொலிஸ் சோதனைச் சாவடியில் முதலாவது பிரதியையும் இரண்டாவது பிரதியை மாவட்ட முடிவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழங்குவதோடு மூன்றாவது பிரதியை பயணம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும்

தற்போது இந் நடைமுறை நீக்கப்பட்டதையடுத்து இம் மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்கான வாகனப் பயணங்களுக்கு பாஸ் அனுமதி பெற வேண்டிய தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் இனிமேல் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிப் பத்திரங்களைப் பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – யாழ் விமான சேவை திங்களன்று ஆரம்பம்! வாரமொன்றுக்கு மூன்று சேவைகள்

flight_domestic.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்தக்கான  விமான சேவை அடுத்த திங்கள் முதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது. வாரமொன்றுக்கு மூன்று சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்படும் என்றும் திங்கள்,  புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இச்சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவழிப் பாதைக்குமான கட்டணம் 19 ஆயிரத்து 100 ரூபாவாகும்.

இதேவேளை, கொழும்பிலிருந்து சீகிரியவுக்கு வாரமொருமுறை ஒரு சேவை நடத்தப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலிருந்து சீகிரியவுக்குச் செல்லும் விமானம் அன்றைய தினமே கொழும்பை வந்தடையும் இதற்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாவெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

petrol.jpgவட மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்;கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.பீ.கணேகல தெரிவித்தார்.

புதிய மாற்றத்துக்கு ஏற்ப ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 6ரூபா 50 சதத்தாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபா 10 சதத்தாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபா 60 சதத்தாலும் குறைவடைகிறது.

புதிய விலைக்கு ஏற்ப  ஒரு லீற்றர் பெற்றோல் 134 ரூபாவுக்கும் டீசல் ஒரு லீற்றர் 76 ரூபா 50 சதத்துக்கும் மண்ணெண்ணெய் 54 ரூபாவுக்கும் இன்று நலள்ளிரவு முதல் வட மாகாணத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படக் காட்சியும் கருத்துக் களமும் : கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம்

little_terroristகனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளில் ஒன்றான திரைப்படக் கருத்துக் களத்தின் நிகழ்வாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திரைப்படக் காட்சியும் அதற்கான கருத்துக் களமும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் “Little Terrorist” ,  “Road to Ladkh” ஆகிய இரு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சன நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

திரைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம்: 5310 FINCH AVENUE EAST, UNIT – 39, SCARBOROUGH

மேலதிக விபரங்களுக்கு: 416- 457- 8424 / 416- 450- 6833

மியன்மார் எதிரணி தலைவி சூகிக்கு மகாத்மா காந்தி அமைதி விருது

miyanmar_s.pngஅமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கி பெற்றுள்ளார்.  இவ்விருது தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மகாத்மா காந்தி நிதியத்தினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு டர்பன் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏப்ரகிம் இஸ்மைல் ஏப்ரகிம்மால் வழங்கப்பட்ட இவ்விருதை ஆங் சாங் சூ கியின் சார்பாக மியன்மாரின் நாடு கடந்த அரசின் பிரதமர் தெய்ன்வின் பெற்றுக் கொண்டார்.

சூகி இராணுவ அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அந்நாட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட 20 ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலேயே இவ்விருது ஜூலை 20 ஆம் திகதி வழங்கப்படுவதாக அந்நிதியத்தின் உறுப்பினரான ப்படி கேர்னேய் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் மார்டின் லூதர் கிங் போன்று இவரும் அகிம்சை வழியை கடைப்பிடிக்கும் தலைவர். இவர் அகிம்சாவாதம், நீதி மற்றும் அமைதி என்பவற்றை உறுதியாகக் கடைப்பிடித்தமையினாலேயே இவ்விருது வழங்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி ஆங் சாங் சூ கி அறிவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எமது தலைவர் எல காந்தி இது தொடர்பாக அறிவித்தலை மியன்மார் உயர்ஸ்தானிகர் மூலமாக அனுப்பியிருந்தார். இருப்பினும் அக்கடிதம் பிரித்துப்படிக்கப்படாமலே திருப்பியனுப்பப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆங் சாங் சூ கியிற்கும் மியன்மார் மக்களின் போராட்டத்திற்கும் முழு ஆதரவை தென்னாபிரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.  இவ்விருதை ஆங் சாங் சூ கி சார்பாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமென மியன்மாரின் நாடு கடந்த பிரதமர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் கியூபா டெங்கு நிபுணர்கள்

sri-cub.jpgகியூபா நாட்டு டெங்கு நோய் தொடர்பிலான நிபுணர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வந்தடைந்துள்ளனர்.

கியூபாவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அராம்ஸ் மார்டினஸ், பிரதி தொற்று நோய் நிபுணர் திருமதி யெலினா ஆகியோர் நேற்று கொழும்பு வந்ததாகவும் இவர்கள் நேற்றைய தினமே அம்பாந்தோட்டை நோக்கிப் பயணமானார்கள், அங்கு டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கியூபாவின் பி.ரி.ஐ. பற்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதாகவும் சாதகமான நிலைமை காணப்பட்டால் உடனடியாகவே நடவடிக்கையிலிறங்க விருப்பதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னி நாயக்கா தெரிவித்தார். இன்று மாலை அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு திரும்பும் அவர்கள் மாலையில் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த பி.ரி.ஐ.பற்றீரியாவை பயன்படுத்துவதற்கான சாதகமான நிலை காணப்படின் வாரத்துக்கொரு தடவை அவை பயன்படுத்தப்படும்.

டெங்கு நோய் வேகமாக பரவியுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு தொடர்ச்சியாக நாடுமுழுவதும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க விருப்பதாகவும் வன்னிநாயக்கா தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க இலங்கையில் இதுவரையில் 18,300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 190 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த டாக்டர் பாலித மகீபால டெங்கு நோய் தொடர்ந்தும் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஏ 9 வீதி இன்று முதல் பொதுமக்கள் பாவனைக்கு

bus_ctb_logos.jpgபொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக  ஏ 9 வீதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட வைபவத்தில்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இந்த வீதியைத் திறந்துவைத்தார்

இந்த வீதியினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து 210 பிரயாணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் ஐந்து பஸ் வண்டிகளில் இன்று மதவச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலியர்ட்ஸ் போட்டியில் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டம் ரவூப் ஹக்கீம் வசம்

akime-2.jpgஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், கொழும்பு மூவர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எம்.பி. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலியர்ட்ஸ் ஆட்டத் தொடரின் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

கொழும்பு 7, ரீட் அவனியுவில் அமைந்துள்ள பிலியர்ட்ஸ், ஸ்னூகர் சம்மேளனத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ரவூப் ஹக்கீம் எம்.பி. மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏ.எச். மனூர்ஜனை 176க்கு 153 புள்ளிகளால் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் விளையாட ரவூப் ஹக்கீம் எம்.பி. தகுதிபெற்றார்.

தனது ஓய்வு நேரத்தின்போது பிலியர்ட்ஸ் விளையாட்டில் நீண்ட காலமாக அதிக அக்கறை காட்டிவந்த ரவூப் ஹக்கீம் கொழும்பு மட்ட பிலியர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதன்போது அவர் தனது காலிறுதி போட்டியில் வை.எம்.பி.ஏ.கழக வீரர் ஏ.டபிள்யூ.ஏ. ரட்ணசிறியை வீழ்த்தியதோடு, அரையிறுதியில் ஆர்.எஸ்.எஸ். கழக வீரர் என்.எம். ஷாமிலை வெளியேற்றினார்.

கொழும்பு மாவட்ட இறுதிச் சுற்றை தொடர்ந்து கண்டி, காலி மாவட்டங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இம் மாவட்டங்களுக்கான சாம்பியன் தெரிவுகளை தொடர்ந்து இன்று தொடக்கம் 25 ஆம் திகதி வரை பிலியர்ட்ஸ் ஸ்னூகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மட்டத்திலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை மட்டத்திலான போட்டிகளுக்கு மொத்தம் 38 வீரர்கள் பங்கு பற்ற உள்ளனர். இவர்களில் 16 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும், மேலும் 16 பேர் கண்டி, காலி மாவட்டங்களில் இருந்தும், மிகுதி 6 வீரர்கள் கடந்த வருட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இடம்பெயர்ந்த மக்களில் மூவாயிரம் குடும்பங்கள் 7ம் திகதிக்கு முன் 35 கிராமங்களில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ

basil.jpgஇடம் பெயர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னர் 35 கிராமங்களில் மீள்குடியேற்றப்படுவரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீள்குடியேற்றப்படும் கிராமங்கள் அடையாளங் காணப்பட்டு அங்கு நிலக்கண்ணிகள் அகற்றப்பட்டுள்ளதோடு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.வீதி, மின்சாரம், குடிநீர் வசதி, அடங்கலான சகல அடிப்படை வசதிகளும் அப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதிகளிலும் மிக விரைவில் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் வடக்கு வசந்தம் வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 180 நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விவசாய வீதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி அகற்றல் என்பன குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

நீர்ப்பாசன திட்டங்களுக்கென 15.4 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பகுதியிலுள்ள மருத்துவ அதிகாரி காரியாலயத்தை புனரமைக்கவும் இரண்டு வாரத்தில் 10 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்கவும் விவசாயத் திட்டங்களுக்கென 32.6 மில்லியன் ரூபா ஒதுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு மாத காலத்தில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியும். சேதமடைந்த பாடசாலை கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகளின் குறைபாடுகள் என்பன தீர்க்கப்பட்டு வருகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ கூறினார்.

பாதுகாப்புப் படையின் உதவியுடன் மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்பொழுது வவுனியா மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1, 46, 298 பேர் வசிக்கின்றனர். மேலும் 35, 866 பேர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்றார்.

அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வவுனியா மாவட்டத்தை துரித அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் எஸ். சிவகாமி மற்றும் மாகாண அமைச்சின் அனைத்து செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், சகல திணைக்கள தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஸ் டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி

bangladesh-cricket.jpgதற்போது மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மேற்கிந்தியாவில் நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று பங்களாதேஸ் டெஸ்ட் அணி வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிபெற்றுள்ளது.

கிரினடா சென்ஜோன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்டில் முதலாவது இனிங்சில் மேற்கிந்திய அணி 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி முதலாவது இனிங்சில் 232 ஓட்டங்களை பெற்றது. இரண்டாவது இனிங்சில் மேற்கிந்திய அணிகளினால் 209 ஓட்டங்களையே பெறமுடிந்தது. 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 54.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. ஸ்கோர் விபரம் வருமாறு:

ST GEORGE’S, Grenada

West Indies 1st Innings 237
Bangladesh 1st Innings 232
West Indies 2nd Innings 209

BANGLADESH 2nd Innings

Tamim Iqbal c Walton b Sammy  18
Imrul Kayes c Sammy b Roach   8
Junaid Siddique c Reifer b Sammy  5
Raqibul Hasan c and b Sammy  65
Mohammad Ashraful c Walton b Sammy  3
Shakib Al Hasan not out   96
Mushfiqur Rahim c and b Sammy  12
Mahmadullah not out    0
Extras (b1, lb3, w2, nb4)  10
TOTAL (6 wkts, 256 mins, 54.4 overs) 217

Fall of wickets: 1-27 (Imrul Kayes), 2-29 (Tamim Iqbal),
3-49 (Junaid Siddique), 4-67 (Mohammad Ashraful),
5-173 (Raqibul Hasan), 6-201 (Mushfiqur Rahim).

Bowling: Best 9-0-38-0 (nb1);
  Bernard 9-1-33-0 (nb3);
  Roach 13.4-4-68-1 (w1);
  Sammy 16-1-55-5;
  Austin 3-0-13-0;
  Hinds 4-0-6-0.