கொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்தக்கான விமான சேவை அடுத்த திங்கள் முதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது. வாரமொன்றுக்கு மூன்று சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்படும் என்றும் திங்கள், புதன், மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இச்சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவழிப் பாதைக்குமான கட்டணம் 19 ஆயிரத்து 100 ரூபாவாகும்.
இதேவேளை, கொழும்பிலிருந்து சீகிரியவுக்கு வாரமொருமுறை ஒரு சேவை நடத்தப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலிருந்து சீகிரியவுக்குச் செல்லும் விமானம் அன்றைய தினமே கொழும்பை வந்தடையும் இதற்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.