January

January

இன்றுடன் 100 நாட்களை தொட்ட இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் – இதுவரை 23,708 பேர் வரை பலி !

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட  பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும்  அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும்.

அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர்.

காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க  விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன.

இவ்­வ­ழக்கில்  தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார்.

இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர்.

பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள்   தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர்.

இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார்.

ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார்.

இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர்.

தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார்.

சர்வதேச அளவில் வீழ்ச்சி அடையும் மணித உரிமைகள் – உலக நாடுகளின் தலைவர்களே காரணம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு !

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச அளவில் அதிகரிக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்து அந்த அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது.

யுத்தகால அநீதிகள் பலமடங்காக அதிகரிக்கின்றன, மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறை, சர்வதேச மனித உரிமை கொள்கைகள் சட்டங்கள் தாக்குதலிற்குள்ளாகின்றன, அரசாங்கங்கள் அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன எனவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவுசெய்து சீற்றத்தை வெளிப்படுத்துதல், பரிவர்த்தனை இராஜதந்திரம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்டங்களை அங்கீகரிப்பதில் இரட்டை நிலைப்பாடுகள் போன்றவற்றினால் ஆயிரக்கணக்கான உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகியகால ஆதாயங்களிற்காக அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விலகி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்வதால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் டிரான ஹசன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் வெளிப்படையாக தெரியும் இரட்டை நிலைப்பாடுகளிற்கு அப்பால் ஏனைய பல மனித உரிமை விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மனித குலத்திற்கு எதிரான சீன அரசாங்கத்தின் குற்றங்கள் தொடர்பில் மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றது, உக்ரைனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலும் நீதியும் அவசியம் என உரத்த குரலில் வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றது.

அதேவேளை ஆப்கானில் அமெரிக்காவின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்து மௌனம் காக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து – யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு காரணமாம் !

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மேரியட் நட்சத்திர விடுதியில் இடம்பெறவிருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை அந்த இஸ்லாமிய அமைப்பு ஊக்குவிப்பதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் இருந்து 100-க்கும் அதிகமான அழைப்புகள் விடுதி நிர்வாகத்துக்கு வந்ததாகவும், இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியான தெற்கு புளோரிடா இஸ்லாமிய அமைப்பு நடத்தவிருந்த இந்த மாநாட்டில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரியட் விடுதியின் இந்த முடிவு தெற்கு புளோரிடாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சியளிப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் சமீர் கக்லி தெரிவித்துள்ளார். ஏனென்றால் இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் பெரியளவிலான திருமண நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் அந்த விடுதியில் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொடர்பான புகார் விடுதியின் தரப்பில் எழுவதற்கு முன்பே நகரத்தின் காவல்துறையையும் தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வு முழுவதற்கும் காவல்துறையால் பாதுகாப்பு உறுதி அளித்திட இயலும் என சொல்ல இயலாது. இருந்தபோதும் நிகழ்வை ரத்து செய்தது முழுக்கவே விடுதி நிர்வாகத்தின் முடிவு என புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவரும் காஃப்மேன் கருத்துத் தெரிவிக்கையில், “அங்கு பேச வருபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, அமைப்பு மற்றும் அதன் தலைமை மீதே எங்களுக்கு விமர்சனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த திங்கட்கிழமை இரவு (08) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன் – சென்னையில் இரா.சாணக்கியன்

முன்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகவும் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன், அந்த ஆயுதம் பொருளாதார ஆதரவே, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு சாணக்கியன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, 1980 களில், ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கான உதவிகளை தமிழக அரசு வழங்கியது இப்போது தமிழக அரசிடம் நான் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக தமிழ்நாட்டு அரசிடம் கேட்கும் ஆயுதமே இந்த பொருளாதார வளர்ச்சி. இந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்க்காலத்தை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் – அடைக்கலநாதன் கோரிக்கை!

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் மேலும் சிறப்பு முகாம்களிலுள்ள இலங்கை தமிழரை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பிரான்ஸின் பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டால் நியமனம்!

பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கிறது – மிசெல் ஒபாமா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும்  விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன  நடக்கப்போகின்றது நான்  என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள  ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் பொதுத்தேர்தல் – ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி !

பங்களாதேஷில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.

300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில்  223 ஆசனங்களை ஷேக்  ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

40 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர் என உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இதனை விட குறைவு என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2018 பொதுத்தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர்.