2024

2024

Virtual reality Metaverse game இல் சிறுமி மீது இணையவழியில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு !

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Metaverse game” எனப்படும் விளையாட்டின் மூலமே குறித்த சிறுமி உடல் ரீதியாக அல்லாமல் உளரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (Artificial Intelligence) மூலம் பல இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Metaverse game எனப்படுவது செயற்கை நுண்அறிவு விளையாட்டாகும், இதில் பயனர்கள் தத்தமது கதாபாத்திரங்களை (Avatar) தமக்கு ஏற்றவகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயனர்களும் இனந்தெரியாத நபர்களினால் பயனர்களின் கதாபாத்திரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் இது பற்றி தெரிவித்த போது இந்த விளையாட்டு மூலமான பாலியல் தொல்லைகள்ட அதிகரித்து வருவதாகவும் இதனை சாதாரணமான பிரச்சினையாக கடந்து செல்ல முடியாது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதிமுறைகள் – குடும்பத்தை அழைத்து வர தடை !

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்நதில் கல்விகற்றால் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர முடியாது.

இந்த மாதத்திலிருந்து கற்றலை தொடங்கும் எந்தவொரு சர்வதேச மாணவர்களும், முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகள் அல்லது அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் கூடிய படிப்புகளில் இருந்தால் தவிர, அவர்கள் சார்ந்திருப்பவர்களை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியாது.

“விசா முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்” அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் இந்த மாற்றங்கள் முதலில் அறிவிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140,000 குறைவானவர்கள் இங்கிலாந்துக்கு வருவதைக் காண முடியும் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில், விண்ணப்பதாரர்களுக்கு 486,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன – 2019 இல் 269,000 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு, சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 136,000 ஆக இருந்தது – 16,000 ஆக 2019 இல்  வழங்கப்பட்ட நிலையில் தற்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவை மீள அச்சுறுத்தும் கொரோனா !

இந்தியா  முழுவதும்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 841 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாமுழுவதும் 4309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா கர்நாடகா பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 831 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 175 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

அரியணையை துறக்கிறார் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் !

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி 52 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதன்மூலம்  ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேரடி தொலைக்காட்சியில் ஆற்றிய பாரம்பரிய புத்தாண்டு உரையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயல்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும், அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14 ஆம் திகதி டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.  !

இந்தப் பூவுலகில் சமாதானம் மலர்ந்து  பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகின்ற குழந்தைகள் குண்டுத் தாக்குதல்களுக்கும் வெறுப்புணர்வுக்கும் உட்படாமல் சந்தோசமாக குழந்தைகளாக ஆரோக்கியத்துடனும் ஆளுமையுடனும் ஆர்ப்பரிப்போடும் வளர இன, மத, சாதி, பேதங்கள் கடந்து மனிதத்துவத்தோடு வாழ்த்துவோம்.

May be an image of text that says "1997 முதல் தேசம முரண்பட்ட கருத்துக்களுக்கான களம் ! 2024 23 20 24 HAPPY NEW YEAR காலடி எடுத்து வைக்கும் 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும் -ஆரோக்கியத்தையும்- சகிப்புத்தன்மையையும்- அன்பு செய்யும் மனதையும் வழங்கும் ஆண்டாக விளங்க தேசம் நெட்இன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். THESAMNET.CO.UK"

இன, மத அழிப்புகள் அற்ற அமைதிப் பூங்காவாக எம்மால் ஆனவரை முயலுவோம் என தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.